Close Menu
    What's Hot

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா? – அரசுக்கு வைகோ வேண்டுகோள்
    Featured

    மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா? – அரசுக்கு வைகோ வேண்டுகோள்

    Editor TN TalksBy Editor TN TalksJune 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 vaiko
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஸ்டெர்லைட் நாசகார நச்சாலையை மீண்டும் வேறு வடிவத்தில் தூத்துக்குடியில் நிர்மாணிக்க வேதாந்தா குழுமம் முயற்சிப்பதாகவும், தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    சுற்றுச் சூழலுக்கும், விவசாயத்திற்கும், மீனவர்களுக்கும் பெரும் தீங்கினைச் செய்த, கேடு விளைவித்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நாசகார நச்சாலையை எதிர்த்து பல ஆண்டுகள் மக்களைத் திரட்டி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், வணிகர் சங்கங்களும், தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்களும் கடுமையான போராட்டங்களை நடத்தினார்கள்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அன்றைய தமிழக அரசு, ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எடுபிடியாக மாறி, போராட்டக்காரர்களை நசுக்கும் நோக்கத்தில் காவல்துறை 13 பேரை சுட்டுக் கொன்றது.

    ஸ்டெர்லைட் வழக்கு உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் ஆண்டுக் கணக்கில் நடத்தப்பட்டு, இறுதியில் உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானமும், நீதியரசி பவானி சுப்புராயனும் கொண்ட அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை நிறந்தரமாக மூடும் தீர்ப்பை வழங்கியது.

    004 vaikoA

    இந்தியாவில் தாமிரம் கிடைப்பது இல்லை என்று அண்மையில் பிரதமர் நநேரந்திர மோடி அங்கலாய்த்துக் கொண்டார். அப்படி தாமிரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க வேண்டுமானால் அவரது குஜராத் மாநிலத்திலேயே அமைக்கலாமே? பாரதிய ஜனதா ஆட்சி நடத்தும் மாநிலங்களில் அமைக்கலாமே?

    தமிழ்நாட்டை நாசமாக்கும் விதத்தில் நம் மாநிலத்தில் வேதாந்தா குழுமம் தாமிர உற்பத்தி ஆலையைத் தொடங்கி திட்டமிட்டு, தமிழக அரசை அணுகி அனுமதி பெற முயற்சிப்பதாக கிடைத்த செய்தி உண்மையாக இருக்குமானால் அதைவிட பெரிய அதிர்ச்சி ஒன்றும் இருக்க முடியாது.

    மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், வேதாந்தா குழுமம் ஆலை அமைக்க எவ்விதத்திலும் அனுமதி கொடுக்கக் கூடாது என்று தமிழக மக்கள் நலனைக் காக்கவும், குறிப்பாக தூத்துக்குடி மண்டல மக்கள் நலனைக் காக்கவும் ஆன கடமை உணர்ச்சியோடு இந்த வேண்டுகோளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன் வைக்கிறேன்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபள்ளிகள் திறப்பு!. மாணவச் செல்வங்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!
    Next Article அதிமுக தொடர்பாக இபிஸ், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் வாபஸ்!
    Editor TN Talks

    Related Posts

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    July 29, 2026

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    July 29, 2026

    திருப்பூர்: 213 ஏக்கர் கோயில் நிலம் தப்பியது… நீதிமன்றம் அதிரடி!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    திருப்பூர்: 213 ஏக்கர் கோயில் நிலம் தப்பியது… நீதிமன்றம் அதிரடி!

    வங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.