Author: Editor TN Talks

தமிழக அரசியலிலும், தமிழ் இலக்கிய உலகிலும் அழியாத முத்திரையைப் பதித்த முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதியின் பிறந்தநாள் இன்று (ஜூன் 3) தமிழகம் முழுவதும் நினைவுகூரப்படுகிறது. 1924 ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தின் திருக்குவளையில் பிறந்த கருணாநிதி, இளம் வயதிலேயே சமூக நீதி, மொழி உரிமை மற்றும் பகுத்தறிவு கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். மாணவப் பருவத்திலேயே எழுத்து, பேச்சு மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட அவர், பின்னர் திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவராக உருவெடுத்தார். “கலைஞர்” என்று அன்போடு அழைக்கப்பட்ட கருணாநிதி, தமிழகத்தின் முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். அவரது ஆட்சிக் காலங்களில் கல்வி, சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அரசியல்வாதி மட்டுமின்றி, சிறந்த எழுத்தாளர், நாடகாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் பேச்சாளராகவும் அவர் திகழ்ந்தார். “பராசக்தி” உள்ளிட்ட பல…

Read More

ஓ.எஸ்.எம். முறையில் நடந்த குளறுபடியினைத் தொடர்ந்து சி.பி.எஸ்.இ தலைவர் ராகுல்சிங், செயலாளர் ஹிமான்ஷு குப்தா ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர். மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் கணினி திரைவழி விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் கடுமையான குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. விடைத்தாள்கள் முறையாக நகலெடுக்கப்படாமை, வரிசை எண்கள் விடுபடுதல் மற்றும் தவறான மதிப்பீடுகள் போன்ற பிரச்னைகளால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளஸ் 2 பொதுத் தேர்வில் இந்த ஓஎஸ்எம் முறைhttps://tntalks.in/featured/cbse-class-12-answer-sheet-verification-revaluation-application-begins-aadhaar-mandatory/யினால் பல்வேறு மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து, மத்திய அரசு சிபிஎஸ்இ வாரியத்திடம் இது குறித்து விரிவான விளக்கத்தைக் கோரியது. அத்துடன் இந்த குளறுபடிகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்பதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இதையடுத்து மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மறு மதிப்பீடு மற்றும் மதிப்பெண் சரிபார்ப்பில் வெளிப்படைத்தன்மையைக்…

Read More

தென்னாப்பிரிக்காவின் துணை அதிபர் ஷிபோகோசா பவுலஸ் மஷாத்திலே, குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய குடியரசுத் தலைவர், இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் வரலாற்று ரீதியாகவும் சமகால ரீதியாகவும் ஒரு சிறப்பான நட்புறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும், இரு நாடுகளும் குளோபல் சவுத் (Global South) எனப்படும் வளர்ந்து வரும் நாடுகளின் முன்னணி குரல்களாக விளங்குகின்றன என்றும் கூறினார். இருதரப்பு வர்த்தகத்தின் நிலையான வளர்ச்சியைக் குறிப்பிட்ட அவர், தொழில்நுட்பம், மருந்துகள் (pharmaceuticals), ஆற்றல் (energy), குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs) மற்றும் திறன் மேம்பாடு (skilling) போன்ற துறைகளில் இருதரப்பும் பரஸ்பரம் பயனளிக்கும் ஈடுபாட்டைத் தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

Read More

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை எதிர்த்து தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. 2024ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில்,  விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட  மாணிக்கம் தாகூர்,  அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை விட 4 ஆயிரத்து 379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து மாணிக்கம் தாகூரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்ற தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மாணிக்கம் தாகூர் தேர்தல் வேட்புமனுக்களில் உண்மை தகவல்களை மறைத்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், விஜய பிரபாகரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் கூறப்பட்டிருந்த சில குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரியும், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரியும் காங்கிரஸ் எம்.பி.…

Read More

அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஏற்படும் அசம்பாவிதங்களில் பலியானவர்களுக்கான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டுமா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு மிக்ஜாம் தீவிர புயலின் காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அப்போது, ஆர்.கே.நகர் பகுதியில் வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. ஆர்.கே. நகர் மண்டல செயலாளர் நித்தியானந்தம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று நிவாரண உதவிகளை வழங்கினார். 2023 டிசம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நிவாரண உதவி பெறச் சென்ற 14 வயது சிறுமி யுவஸ்ரீ கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். தனது மகள் மரணத்துக்கு இழப்பீடாக 50 லட்ச ரூபாய் வழங்கக் கோரி யுவஸ்ரீயின் தந்தை பி. வடிவேலு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், அரசின் அஜாக்கிரதை மற்றும்…

Read More

ஹிப்ஹாப் தமிழா தயாரிப்பில் உருவான “பொருநை” ஆவணப்படம் துருக்கியில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. Foca International Archaeology & Cultural Heritage Film Festival-இல் திரையிடப்படும் முதல் தமிழ் ஆவணப்படம் பொருநை ஆகும். ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கம் 2019 ஆம் ஆண்டு தமிழி என்ற ஆவணப்பட இணையத் தொடரை உருவாக்கி வெளியிட்டிருந்தது. சுமார் 20,000 கிமீ பயணித்து, பண்டைய தமிழிக் கல்வெட்டுகள் முதல் அசோகர் கல்வெட்டுகள் வரை பலவற்றையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்த ஆவணப்படத் தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கத்தின் முன்னெடுப்பில், பொருநை என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.  தாமிரபரணி என்று அழைக்கப்படும் பொருநை நதிக்கரையில் 2020-2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளை முழுமையாக பதிவு செய்து இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பொருநை ஆவணப்படத்தை ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரதீப்குமார் – இளங்கோ…

Read More

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவி காங்கிரசுக்கு அளிக்கப்படலாம் என பரபரப்பு கிளம்பி உள்ளது. நடைபெற உள்ள மாநிலங்களவை எம்.பி தேர்தலில், ஒரு இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க தமிழக வெற்றிக் கழகம்  முடிவு செய்திருப்பதாக தகவல் கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி களமிறங்குவார் எனவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டில் அதிமுக தரப்பில் சி.வி.சண்முகம் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்தார். இவரது பதவிக்காலம் 2028ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி வரை உள்ளது. இந்த நிலையில் 2026 சட்டபேரவை தேர்தலில் மயிலம் தொகுதியில் அதிமுக தரப்பில் சி.வி.சண்முகம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மே மாதம் 7ஆம் தேதி…

Read More

சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள், மறுமதிப்பீடு இன்று  தொடங்கியுள்ள நிலையில், ஆதாரை அரசு கட்டாயமாக்கியுள்ளது. சிபிஎஸ்இ கல்வி முறையில் மதிப்பெண்கள் அளிப்பதில் முரண்பாடுகள் உள்ளதாகவும், சிபிஎஸ்இ அமைப்பால் பதிவேற்றப்பட்ட விடைத்தாள்கள், தங்களது கையெழுத்துகளுடன் ஒத்துப்போகவில்லை என்றும், இந்த முறையில் விடைத்தாள்கள் மாறியிருக்க வாய்ப்பிருப்பதாகவும்  மாணவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, மறுமதிப்பீட்டு தளத்தை மத்திய கல்வி அமைச்சகம் முடக்கி வைத்திருந்த நிலையில், இன்று காலை முதல் மீண்டும் செயல்பாட்டு வந்துள்ளது. இதையடுத்து, விடைத்தாள்கள் காணும் பணி, மறு மதிப்பீட்டுப் பணிகள் ஆகியவை இன்று (ஜூன் 2) தொடங்கி உள்ளன. மாணவர்கள் இதனை மேற்கொள்ள சரிபார்ப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆதார் சேர்க்கப்பட்டுள்ளது. ஆதார் இல்லாத குழந்தைகள், அவர்களது பெற்றோர், உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதார் அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் ஆதார் எண்ணை உள்ளிடும் நபரின் பெயர், பிறந்த தேதி, பாலினம் ஆகியவற்றை மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டும். ஏற்கனவே தங்கள் விடைத்தாள்களின்…

Read More

வாய்ச்சவடால் தவெக ஆட்சியில் சமூக விரோதிகளுக்கு துளியும் பயமில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- சென்னை ராயப்பேட்டையில் 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர்  கஞ்சா கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியினை அளிக்கிறது. இளைஞர் விஷ்ணு தங்களது பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவர்களை தட்டிக் கேட்டதாலும், அது குறித்து காவல்துறையில் புகார் தெரிவித்ததாலும், ஆத்திரமடைந்த கஞ்சா வியாபார கும்பல் ஏற்கனவே கத்தியுடன் வீடு தேடி  வந்து மிரட்டியுள்ளனர்.  இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும், போலீஸார் கஞ்சா கும்பலை உடனடியாக வளைத்துப் பிடிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதால் இன்று ஒரு இளைஞரின் உயிர் அநியாயமாக பலியாகியிருக்கிறது. இன்னமும் எத்தனை காலம்தான் வழி வழியாக இம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு தன் அகோரப் பற்கள் கொண்ட கொடூர முகம் காட்டிச் சிரித்து, மக்களை அச்சத்தின் பிடியிலேயே வைத்திருக்கப்…

Read More

இன்று பிறந்தநாள் காணும் இசைஞானி இளையராஜாவுக்கு அரசியல் கட்சியினரும் தங்கள் வாழ்த்து மழையைப் பொழிந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச் செயலாளர்: இசைக்கென இசைக்கின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் தனக்கெனக் கொண்ட இசைஞானி  அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். உங்கள் Harmonium கொடுத்த மெட்டுக்கள் பல உள்ளங்களில் Harmony-ஐ விதைத்துள்ளது. அன்னக்கிளியில் ஆரம்பித்த அந்த அரும்பணி, மஞ்சணத்தியும் தாண்டி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! தனது இசையால் கோடிக்கணக்கான மக்களின் மனங்களை வருடி, காலத்தால் அழியாத எண்ணற்ற பாடல்களை தமிழுக்கும் இந்திய திரையுலகிற்கும் வழங்கிய பெரும் இசை மேதை. கிராமத்து மண்வாசனையையும், மனித உணர்வுகளையும் இசையின் மூலம் உலகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமை அவருக்கே உரியது. இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து, தனது இசையால் மக்களை மகிழ்விக்க வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன். கு.செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்:- இசைஞானி இளையராஜா…

Read More