Author: Editor TN Talks
2026ஆம் ஆண்டுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் பெறோர் பட்டியல் குறித்து திருமாவளவன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ” ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் விசிக வழங்கி வருகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்படுகிறது. முத்தமிழறிஞர் கலைஞர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தாராமையா, தி.க தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா,…
இசைஞானி இளையராஜா இன்று தனது 83வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழ் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளவர் இசைஞானி இளையராஜா. 60களில் தொடங்கி 2கே வரை இவரது பாடல்களை கேட்காத ஆட்களே இல்லை எனலாம். ஒரு மனிதன் தனது மனநிலைக்கு ஏற்றவாரு மருந்து கொடுக்க இளையராஜாவின் இசை மட்டுமே போதுமானது எனலாம். இவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ஸ்டூடியோவில் ரசிகர்கள் குவியத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதனை சரிசெய்ய அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பிறந்த நாளில் என்னை வாழ்த்துகிறார்கள் நான் அவர்களை வாழ்த்துகிறேன் அவர்கள் அன்புக்கு நன்றி என இளையராஜா தெரிவித்துள்ளார். இன்று மாலை பெங்களூருவில் சிம்பொனி இசை நிகழ்ச்சி இருப்பதால், அதற்கு தயாராகிக் கொண்டு இருப்பதாகவும், எல்லோரும் அமைதியாக போட்டோ…
கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, கர்நாடகாவில் பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த இவர், பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியில் சேர்ந்த சிறிது காலத்திலேயே 2021-ம் ஆண்டு தமிழ்நாடு பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டார் அண்ணாமலை. இதுவே தமிழ்நாட்டு சீனியர் தலைவர்களுக்கு அவர் மேல் வெறுப்பு வர காரணமானது. ஆனால் அண்ணாமலையோ அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது தனது பணியை சிறப்பாக செய்து வந்தார். அவரது துல்லியமான பேச்சுகளும், கருத்து பரிமாற்றமும், பாஜகவை இன்னும் தமிழ்நாட்டில் ஆழமாக வேரூண்ற வைத்தது எனலாம். 2025 வரை தமிழக பாஜக தலைவராக இருந்தவர், மறைந்த முன்னாள் அதிமுக தலைவர்களை அவதூறாக பேசியதால், அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறித்தது. அதன் பிறகு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமென்றால், அண்ணாமலையை கட்சி தலைமை பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும் என நிபந்தனை…
தவெக ஆட்சி அமைய விடாமல், திமுகவும், அதிமுகவும் சதி செய்ததாக முதலமைச்சர் விஜய் பகீரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். தான் வெற்றி பெற்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கலந்து கொண்டார். தனது பிரசாரப் பேருந்தினை மேடையாக்கி அதன்மீது நின்றபடி நன்றி தெரிவித்து பேசிய விஜய், தவெக ஆட்சி அமைய விடாமல் தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் சதி செய்ததாக திமுக, அதிமுகவைச் சுட்டிக்காட்டி குற்றம்சாற்றினார். அவங்கதான் ஆட்சியிலயே இல்லையே, அவங்கள ஏம்பா குறை சொல்றேன்னு கேப்பாங்க. வேர்ல வென்னிய ஊத்திக்கிட்டுப் போனவங்கள வெளிச்சம்போட்டுக் காட்டாம பின்ன என்ன சொல்லுவாங்க என கேள்வி எழுப்பிய விஜய், மக்களிடம் இதையெல்லாம் நாம்தான் தெளிவாக எடுத்துச் சொல்லவேண்டும் என்றார். மக்களுக்காக நாம் வேலை செய்து கொண்டிருக்க எதிர்க்கட்சிகளோ குதிரை பேரம் செய்கிறோம் என தப்புத் தப்பாக கதையடித்து விடுவதாகவும், கூறியவர் அடுத்து…
அதிமுக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்னும் வேண்டுகோளுடன் உயிர்நீத்த தஞ்சாவூர் மாவட்டம் பாலூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி மகேந்திரன் உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் அன்புத் தம்பி K.S. மகேந்திரன் அவர்கள், தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது ஒரு வயது மகன் பள்ளிப் படிப்பில் சேர்வது முதல், கல்விப் பயணம் முழுவதும் அவரின் கல்விச் செலவை அ.இ.அதிமுகவே ஏற்றுக்கொள்ளும். மேலும், அவரது குடும்பத்தாருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்…
உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாட்டை சேந்த மோகனா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா உட்பட 5 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே வழக்கறிஞராக இருந்து நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள 2வது பெண்மணி மற்றும் முதல் தமிழ்நாட்டு பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் மோகனா. இவர் 2031-ம் ஆண்டு ஜூன் வரை 5 ஆண்டுகள் அவர் பதவியில் இருப்பார். அவருடன் இன்று நியமிக்கப்பட்ட மற்ற நால்வர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருந்தவர்கள். பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய ஷீல் நாகு, மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஸ்ரீ சந்திரசேகர், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் சச்தேவா, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த அருண் பல்லி ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நியமனம்…
திருச்சி கிழக்கு தொகுதியின் வேட்பாளர்கள் இவர்கள்தான் என ஒரு பட்டியல் அரசியல் அரங்கில் பரபரப்பாகி வருகிறது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தவெக தலைவர் ச.ஜோசப் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் பெரம்பூர் தொகுதியில் 1,12,279 வாக்குகள் பெற்றார். விஜயை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் ஆர்.டி.சேகருக்கு 62,307 வாக்குகளும், அதிமுக கூட்டணியில் பாமகவின் திலகபாமாவுக்கு 7991 வாக்குகளும் கிடைத்தன. இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில் 91,381 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 63,965 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் 19,715 வாக்குகளும் பெற்றனர். இந்த நிலையில், 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி கிழக்கு தொகுதிக்கு வேட்பாளர்…
கூடலூர் அருகே வீட்டு வாசலில் வேலை பார்த்த பெண்ணை காட்டு யானை தாக்க முயன்ற நிகழ்வின் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் தற்பொழுது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் குடியிருப்புகளுக்குள்ளும் யானைகள் நடமாடி வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூடலுரை அடுத்துள்ள புளியம்பாறை அருகில் உள்ள கொல்லூர் பகுதியில் வசிப்பவர் சாந்தகுமாரி. இவரது வீட்டிற்கு வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், தனது வீட்டை பராமரிப்பதற்காக சாலையில் இறக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுமானப் பொருட்களை வீட்டு முன் கொட்டுவதற்காக எடுத்து வந்துள்ளார். அப்போது சாலையில் நடந்து வந்த யானை சாந்தகுமாரியை பார்த்ததும் தாக்குவதற்காக வேகமாக வந்தது. இதனை அறிந்து கொண்ட சாந்தகுமாரி சாக்கு பைகளை வீசிவிட்டு பள்ளமான இடத்திற்கு சென்று உயிர்த்தப்பினார். எனினும் அந்த யானை கட்டுமானப் பொருட்கள் இறக்கி வைக்கப்பட்ட பகுதியில் நின்றபடி நோட்டமிட்டது. சாந்தகுமாரி அதிர்ஷ்டவசமாக…
தமிழகப் பள்ளிக்கல்வித் துறையில் நிலவும் அவலநிலை மாற்றப்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;- தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 1800-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவர்கள் மட்டுமின்றி, 20 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களும் காலியாக இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. கல்விக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டிய பள்ளிக்கல்வித்துறை இந்த அளவுக்கு பலவீனமாக இருப்பது பெரும் கவலையளிக்கிறது. திமுக ஆட்சி செய்த கடந்த ஐந்தாண்டுகளில் அரசு பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களை நியமித்து, அவற்றின் கட்டமைப்பையும், மனிதவளத்தையும் மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், பள்ளிக்கல்வித் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து தலைமை ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட மாற்றங்களைச் செய்ய வேண்டும். கல்வியாண்டு முடிவுக்கு வந்த…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று திருச்சிக்கு பயணப்படுகிறார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த மாதம் 10-ம் தேதி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் விஜய். இந்த தேர்தலில் விஜய் திருச்சி கிழக்கு, சென்னை பெரம்பூர் என இரு தொகுதிகளில் போட்டியிட்டார். தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி அடைந்தார். ஒருவர் ஒரு தொகுதி எம்.எல்.ஏ-வாக மட்டுமே செயல்பட முடியும் என்பதால், திருச்சி கிழக்கு தொகுதியின் வெற்றியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக திருச்சி செல்கிறார் முதலமைச்சர் விஜய். இதற்காக மாலை 4 மணியளவில் தனி விமானம் மூலம் திருச்சிக்கு செல்லும் முதலமைச்சர், பிரத்யேக வாகனத்தின் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார்.…