Author: Editor TN Talks
இந்திய கடற்படையின் 27-வது புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் (மே 31) ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதிவேகமாக மாறிவரும் பிராந்திய கடல்சார் பாதுகாப்புச் சூழல்களுக்கு மத்தியில் அவர் இந்த உயரிய பொறுப்பை ஏற்றுள்ளார். இதுவரை கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கிருஷ்ணா சுவாமிநாதன் புதிய தளபதியாகப் பொறுப்பேற்றுள்ளார். இவரது பதவிக்காலம் 2028, டிசம்பர் 31 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், “இந்தியப் பெருங்கடல் பிராந்திய பாதுகாப்புச் சூழல் சவாலானதாகவும், சிக்கலானதாகவும், கணிக்க முடியாததாகவும் மாறி வருகிறது. நாட்டின் பாதுகாப்பையும், பொருளாதார நலன்களையும் காக்க இந்திய கடற்படை எப்போதும் விழிப்புடன் செயல்படும். கடற்படையின் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் போர் திறனை உச்சக்கட்டத்தில் வைத்திருப்பதே எனது முதன்மையான முன்னுரிமை.” என தெரிவித்தார். மேலும், நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்தி இந்திய கடற்படையை மேலும்…
அரசமைப்புச் சட்டத்தின் மத உரிமைகளுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் குர்பானி தடை உத்தரவு விவகாரத்தில், தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்திட வேண்டும் எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பக்ரீத் பெருநாள் அன்று எருது, காளை உள்ளிட்ட கால்நடைகளை அரசு அனுமதியுள்ள பதிவு செய்யப்பட்ட இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் பலியிடுவதற்கு உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவு, இஸ்லாமியப் பெருமக்களின் சமய உரிமைகளைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், தொன்றுதொட்டு விலங்குகளைப் பலியிட்டு வழிபடும் வழக்கம் கொண்ட தமிழகத்தின் ஒட்டுமொத்தப் பூர்வகுடி சமூகங்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமைகளுக்கும் முற்றிலும் எதிரானதாகும். குறிப்பிட்ட சமூகத்தின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் ஆபத்தான போக்காகும். இந்த விவகாரத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டிய சட்டப் பொறுப்பு இருந்தும், தமிழக அரசு காலம் தாழ்த்துவது சமூகத்தில் தேவையற்ற பதற்றத்திற்கே வழிவகுக்கும். இந்தத் தீர்ப்பைப்…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலை கழிவுகளை சேமிக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை பகுதியில், சிப்காட் தொழிற்சாலையில் இருந்து சேகரிக்கப்படும் பழைய பொருட்களை தனி நபர் ஒருவர் மறுசுழற்சி செய்வதற்காக கொட்டி வைத்து சேமித்து வைத்துள்லார். இந்த பழையப் பொருட்களில் இன்று திடீரென தீப்பற்றியுள்ளது. மளமளவென நெருப்பு பரவியதால், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆயினும், தீ கொழுந்து விட்டு எரிந்ததால், கூடுதலாக கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, ரசாயன நுரை பீய்ச்சி அடிக்கப்பட்டது. பழைய பொருட்களுடன் இருந்த ஆயில் கேன்களும் தீப்பற்றி எரிவதால் கரும்புகை எழுந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம்…
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தேரோட்ட நிகழ்வில், தேர் சக்கரத்தில் சிக்கிய இருவரில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாகத்தை ஒட்டி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழகத்தின் 3-வது மிகப்பெரிய தேர் இதுவாகும். 450 ஆண்டுகள் பழமையான மரத்தேருக்குப் பதிலாக அமைக்கப்பட்ட புதிய திருத்தேர் கடந்த ஜனவரி மாதம் வெள்ளோட்டம் நடைபெற்ற நிலையில், இன்று வைகாசி விசாகத்தையொட்டி தேர் திருவிழா நடைபெற்றது. தேரினை அமைச்சர் அருண்ராஜா உள்ளிட்டோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்களும் பொதுமக்களும் இந்த தேர் திருவிழாவில் பங்கேற்றனர். ஆரவாரத்துடன் நடைபெற்றுவரும் தேரோட்டத்தில் நிகழ்ந்த அசம்பாவித சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரத வீதியில் வலம் வந்த தேர் திரும்புகையில் சக்கரத்திற்கும் சுவற்றுக்கும் இடையில், ஹர்ஷ்வர்தன் மற்றும் கல்லூரி மாணவர் சஷ்டிகன் ஆகியோர் சிக்கியுள்ளனர். இதில், அவர்கள் இருவரும் உடல் நசுங்கிய நிலையில், ஹர்ஷ்வர்தன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாகவும், சஷ்டிகன் மருத்துவமனையில்…
தமிழ்நாட்டில் சுகாதாரக் கட்டமைப்பு மோசமான நிலையில் உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பத்தூர் அருகே குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிகழ்ந்துள்ள சம்பவத்தைச் சுட்டிக்காட்டி இந்தக் குற்றச்சாட்டை டிடிவி தினகரன் முன்வைத்துள்ளார். குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் காயமடைந்த நிலையில் வந்த நபருக்கு தூய்மைப் பணியாளர் ஒருவர் சிகிச்சை அளித்துள்ளார். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில், இதனைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை இந்த செய்தி வெளிச்சம் போட்டு காட்டுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அடிப்படை பணியாளர்கள் கூட இல்லாமல் இருப்பதும், தூய்மைப் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதும் அங்குவரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உயிரோடு விளையாடும் செயலாகும் என வேதனை தெரிவித்துள்ள டிடிவி தினகரன், தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப…
காதல் என்னும் கொடிய செயல்தான் கவின் கொலைக்கு காரணம் என இயக்குநர் கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் கஸ்தூரி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இன்றைய பிள்ளைகள் படிப்பு, காதல் அதன் பின் தான் வாழ்க்கை என்று இருக்கிறார்கள். கவின் என்பவர் கொலை செய்யப்பட செய்தியை பார்த்தேன். அந்தப் பையன் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து, உத்தியோகத்துக்கு போன பையன். யாரை குறை சொல்வது? யாரையும் சொல்ல முடியாது. அந்த துர்மரணத்துக்கு ஒரே காரணம், காதல் என்று சொல்லப்படும் கொடிய செயல் தான். படிக்கப்போனால் படி, வேலைக்கு போனால் வேலைக்கு போ. கல்யாணம் என்ற நிலை வரும் போது அப்பா அம்மாவிடம் விடு. உனக்கு வேண்டியதை எல்லாம் பார்த்து பார்த்து செய்பவர்கள். அவர்களின் வலியை இன்றைய பிள்ளைகள் உணர்வதில்லை. உங்களுக்கு ஒரு நல்ல கல்யாணம் செய்து வைக்க அந்த அப்பா அம்மாவுக்கு…
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார். கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காகவும் ஆலோசனை நடத்துவதற்காகவும் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று காலை வருகை புரிந்தார். காலை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை சார்ந்து ஆய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. துறை சார்ந்த வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் துறையின் செயலாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆனால், இக்கூட்டத்தில் கோவை மாவட்ட அமைச்சர்களான சம்பத்குமார் மற்றும் விக்னேஷ் இருவரும் பங்கேற்கவில்லை.
தான் சொல்லியிருந்தால் விஜய் வீடு தேடி வந்து, துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் எனக் கூறியுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக தற்போது ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;- திமுக கூட்டணி மிகப்பெரிய கூட்டணி. ஆனாலும் தேர்தல் முடிவுகள் மாயைப்போல் மாறிவிட்டது. ஒரு தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். மாற்றம் ஒன்றே மாறாதது. தமிழ்நாட்டில் நாள்தோறும் நடைபெறும் நிகழ்வுகள் இளைஞர்கள், பெண்கள் என அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. தவெக ஆட்சிக்கு வந்து வெகு சில நாட்களிலேயே தமிழகமும், தமிழக மக்களும் பல்வேறு துயரங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் மதச் சார்பற்ற வெற்றிக் கூட்டணியில் இருக்கிறோம். அதன் நிலை என்ன என்பது இன்று மக்களுக்கு தெரியும். இந்தக் கூட்டணியில்…
மாற்றுத்திறனாளி தடகள வீரரை சக வீரரே சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற 8வது இந்திய திறந்தநிலை பாரா தடகள சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில், 400 மீட்டர் சுற்ற்ல் கலந்து கொண்ட சிராக் தியாகி தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தை சேர்ந்த 25 வயதான தியாகி, ஜப்பானில் நடைபெறவிருக்கும் ஆசிய பாரா தடகள விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றார். புதன்கிழமை காலை தியாகி தனது விடுதிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அவரை தொடர்பு கொள்ள முடியாததால், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் தியாகியை போலீசார் தேடி வந்தனர். சனிக்கிழமை காசியாபாத்தின் சாய் குஞ்ச் பகுதியில் தியாகியின் உடலை போலீசார் கண்டெடுத்தனர். முதற்கட்ட ஆய்வில் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மாற்றுத்திறனாளி தடகள வீரரான யஷ்…
தற்போதைய முதலமைச்சரான விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இப்போது வரையிலும் படம் வெளியாவதில் சிக்கல்கள் நீடித்து வருகிறது. அதற்குள் தேர்தல் நடந்து அதில் விஜய் வெற்றி பெற்று முதலமைச்சரும் ஆகிவிட்டார். இதற்கிடையில் முழு படமும் இணையத்தில் கசிந்து பலரும் அதனை பார்த்தும் விட்டனர். இந்த நிலையில், ஜனநாயகன் பட விவகாரம் குறித்து பேச தனக்கு தைரியம் இல்லை என அப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், ஜனநாயகன் ரிலீஸ் குறித்து வாய்திறந்துள்ளார். ”படம் ரிலீஸ் என் கைகளில் இல்லை. அந்த விவகாரத்தில் உள்ளிருக்கும் உண்மைகளை சொல்லும் தைரியம் எனக்கு இல்லை. அதை போடும் தைரியம் உங்களுக்கு இல்லை. அதனால் படம் வரும்போது பாத்துக் கொள்ளலாம்” என கூறியுள்ளார். ஒரு படத்தின் இயக்குநரே, அப்படத்தின் ரிலீஸ் குறித்து பேச தயங்குவது,…