Author: Editor TN Talks
19வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை தோற்கடித்து இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு 7.30மணிக்கு தொடங்கிய போட்டியில், டாஸ் வென்றது பெங்களூரு அணி. முதலில் அந்த அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால், குஜராத் அணி வீரர்கள் முதலில் களம் கண்டனர். தொடக்க வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் சுப்மன் கில், 12, 10 ரன்களில் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அடுத்து களமிறங்கிய நிஷாந்த் 20 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 19 ரன்களில், அர்ஷத் கான் 15 ரன்களிலும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் மட்டும் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.…
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதோடு, முறைகேடாக நடந்து வரும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர். முருகனுக்கு உகந்த நாட்கள், விழாக்கள், பண்டிகைகளின் போது லட்சக்கணக்கில் பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து மொட்டை அடிப்பது உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செய்துவிட்டு சுவாமியை கண்ணாரக் கண்டு மனதார வேண்டிச் செல்வதுண்டு. அப்படி முருகனை வணங்க வரும் பக்தர்கள், பொது தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் முதியோருக்கான தரிசனம் என, மூன்று வரிசைகளில் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால்,, அங்குள்ள அதிகாரிகள், அர்ச்சகர்கள் முதல் கடைநிலை காவலர்கள் வரை பக்தர்களிடம் கையூட்டு பெற்று அவர்களை குறுக்கு வழியில் தரிசனத்துக்கு அனுப்புவதாக…
அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில், நடப்பு சேம்பியன் பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றது. ஐபிஎல் 2026 இன் இறுதிப் போட்டியில் பெங்களூரு மற்று குஜராத் அணிகள் மோதின. அகமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மைதானமான மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார், பௌலிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து பேட்டிங்குக்காக களமிறங்கிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் தொடக்கத்திலேயே அணிக்கு அதிர்ச்சியை அளித்தனர். சுப்மன், 10 ரன்கள் எடுத்த நிலையில், ஹேசல்வுட்டின் பாலை புல்ஷாட் அடிக்க, பெங்களூரு கேப்டன் ரஜத் படித்தார் அதைக் கேட்ச் செய்து, சுப்மனை வெளியேற்றினார். அடுத்து, புவனேஷ்வரின் பவுன்சர் பந்தை சுதர்சன் தொட்டு வைக்க, அதனை கீப்பர் ஜிதேஷ் சர்மா பிடித்து விட, 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் சுதர்சன். 3.4…
வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ காஸ் சிலிண்டர் விலை ரூ.46 உயர்ந்து ரூ.3283க்கும் விற்பனையாகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நிய செலாவணி விகிதத்தில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் மாதந்தோறும் காஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் காரணமாக, கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக வணிக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருவதால், உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் காஸ் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் கடந்த மார்ச் மாதம் ரூ.144ம், ஏப்ரல் மாதம் 203 ரூபாயும் அதிகரித்து இருந்தது. அதேபோல், மே 1ஆம் தேதி வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை கிடுகிடுவென உயர்ந்தது. 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.993 அதிகரித்து ரூ. 3,239 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஜூன் மாதத் துவக்கமான…
அமெரிக்கா உடனான தற்போதைய அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், “எதிரியின் வெற்று வார்த்தைகளையோ அல்லது வாக்குறுதிகளையோ ஈரான் ஒருபோதும் நம்பாது” என்று ஈரானின் நாடாளுமன்றத் தலைவரும், அந்நாட்டின் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தம் தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஒப்பந்தமும், வெறும் வாக்குறுதிகளின் அடிப்படையில் அமையாது என்றும், உறுதியான முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே அமையும் என்றும் தெளிவுபடுத்தினார். ஈரான் மக்களின் அடிப்படை உரிமைகளும், நாட்டின் நலன்களும் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வரை அமெரிக்கா முன்வைக்கும் எந்தவொரு அமைதி ஒப்பந்தத்திற்கும் ஈரான் ஒப்புதல் அளிக்காது என்று காலிபாஃப் கூறியுள்ளார். அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை முழுமையாக நீக்குவது மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை விடுவிப்பது ஆகியவற்றைத் தங்களின் முக்கிய…
தமிழ்நாட்டில் ஜூன் 6-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு கேரளம் பகுதிகளின் மேல், சுமார் 3.1 கி.மீ முதல் 5.8 கி.மீ உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஜூன் 6ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை…
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியாகி உலகளவில் ₹300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்து வரும் திரைப்படம் ‘கருப்பு’. இத்திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் முக்கிய தூண்களாக விளங்கிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நடிகர் சூர்யா விலை உயர்ந்த கார்களைப் பரிசளித்துத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். ‘கருப்பு’ திரைப்படத்தின் பிரம்மாண்ட காட்சிகளுக்கும், சாமியாட்ட சண்டைக் காட்சிகளுக்கும் தனது அசாத்திய கேமரா திறமையால் உயிர் கொடுத்தவர் முன்னணி ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு. இவரது சிறப்பான உழைப்பைப் பாராட்டும் விதமாக, அவருக்குப் புதிய மகிந்திரா BE6 பேட்மேன் எடிஷன் சொகுசு காரை சூர்யா பரிசாக வழங்கியுள்ளார். காரைப் பெற்றுக் கொண்ட ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணு, காரின் முன் நின்று எடுத்த புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “கடவுளின் செயல்!! மிக்க நன்றி சூர்யா சார்.. உங்களுக்கு மிகப்பெரிய மனசு!!!” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.. ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவைத்…
இயக்குநர் மாரி செல்வராஜ், தனது அடுத்த புதிய (6-வது) திரைப்படத்தின் அறிவிப்பு நாளை (ஜூன் 1) வெளியாகும் என தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் முற்போக்கு இயக்குநரான மாரி செல்வராஜ் இதுவரை 5 திரைப்படங்களை இயக்கி உள்ளார். தனது திரைப்படங்களில் எளியவர்களை குரலை ஒலிக்கும் கதைக்களங்களை திரையில் பேச வைத்திருப்பார் மாரி செல்வராஜ். 2018ல் சாதிய பாகுபாடுகளுக்கு எதிரான எளியவனின் வலியைப் பேசிய பரியேறும் பெருமாள், 2021ல் கிராமத்து மக்களின் அடிப்படை உரிமைக்காக ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சியை பேசிய கர்ணன், 2023ல் அரசியல் அதிகாரத்தில் இருக்கும் சாதிய ஆதிக்கத்தை உடைத்தெறியும் மாமன்னன், 2024ல் உழைப்புச் சுரண்டலை உணர்த்திய உணர்வுப்பூர்வமான வாழை, 2025ல் விளையாட்டுத் துறையில் விளிம்பு நிலை மனிதர்கள் சந்திக்கும் சவால்களைப் பேசிய பைசன் காளமாடன் ஆகிய திரைப்படங்கள் மாரி செல்வராஜின் தனித்துவமான எழுத்துகள். இந்தநிலையில், தனது 6வது திரைப்படத்தின் அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். நடிகர் கதிர், பிரியங்கா மோகன் மற்றும்…
நெதர்லாந்து பயணத்தின் போது ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகள் மூலம் சோழர் கடல் ராஜ்ஜியம் அறிந்து ஆச்சர்யப்பட்டதாகவும், நாட்டிற்கு பெருமை அளிப்பதாகவும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில், ஆனைமலை சோழர் செப்பேடுகள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார். நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகள்’ மற்றும் சோழப் பேரரசின் உலகளாவிய கடல்சார் வல்லமை குறித்தும் தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் அவர் பெருமையுடன் உரையாற்றினார். ஆனைமங்கலம் செப்பேடுகள் மீண்டும் தாய்மடி திரும்புவது உலகெங்கிலும் வாழும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும், இந்தியர்களுக்கும் பெருமிதமான தருணம் என்று குறிப்பிட்ட பிரதமர், சோழர்களின் கடல்சார் சாம்ராஜ்ஜியம் குறித்து விரிவாகப் பேசினார். சோழப் பேரரசு என்பது வெறும் நிலப்பரப்பை மட்டும் ஆண்ட அரசு அல்ல; அது உலகிலேயே மிக வலிமையான மற்றும் நவீனமயமாக்கப்பட்ட கடல்சார் சாம்ராஜ்ஜியத்தைக் கொண்டிருந்தது என்று பெருமிதம்…
கடுமையாக வெப்பம் நிலவும் காலம் என்பதால் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில், நாட்டின் தற்போதைய கடுமையான வெப்ப அலை சூழல் குறித்து கவலை தெரிவித்தார். நாட்டின் பல பகுதிகளில் கோடை வெயில் சதமடித்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் உக்கிரமாக உள்ளது. பலத்த வெயிலும், அனல் காற்றும் வீசி வருவதால், இந்தத் தருணத்தில் மக்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன், அரசுத் துறைகள் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்” என்றார். மக்கள் எப்போதும் உடலை நீர்ச்சத்துடன் (Hydrated) வைத்திருக்க வேண்டும்…