Author: Editor TN Talks
மதுரையில், 10 மணி நேரமாக சென்னை,திருச்சி உள்ளிட்ட வடமாவட்டத்திற்கு பேருந்து இல்லாததால், காத்திருந்த பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், ஓசூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும், பெங்களூர் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு 9:00 மணி முதல் தற்பொழுது வரை சென்னை, திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்குச் செல்ல பேருந்து இல்லாமல் 10 மணி நேரத்துக்கு மேலாக பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் காத்திருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியலில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஈடுபட்டனர். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பேருந்துகள் பேருந்து நிலையம் முன்பாக நின்றதால் கடும்…
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவற்றில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் அர்ஜெண்டினாவின் ஜூவான் மேனுவல் செரன்டலோ, ஸ்பெயினின் மார்ட்டின் லாண்டலூஸ் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய செண்டலோ முதல் செட்டை 6-4 என எளிதில் வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2வது செட்டை மார்ட்டின் 7-6 என போராடி கைப்பற்றினார். இதனையடுத்து செரண்டலோ 3-வது செட்டை 7-6 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட மார்ட்டின் 4-வது செட்டை 7-6 என்ற வென்றதால், ஆட்டம் சமநிலை பெற்றது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5-வது செட்டில் அதிரடியாக ஆடிய செரண்டலோ 7-6என வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 5 மணி நேரம் 57 நிமிடங்கள்…
ம்யூட்டில் முதலமைச்சர் இருப்பதால்தான், திருவள்ளுவருக்கு மீண்டும் ஆளுநர் மாளிகை காவி பெயிண்ட் அடித்திருப்பதாக குற்றம்சாட்டிய உதயநிதியை நெட்டிசன்கள் பதில் கமெண்டுகளில் வறுத்தெடுத்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ்தளப் பக்கத்தில், எப்போதுமே Mute-ல இருக்கவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடிச்சு இருக்காங்க. தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது. ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது? தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம். இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க. வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் – அதை அனுமதிக்கும் #SofaModel அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள். தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது. …
அய்யன் திருவள்ளுவருக்கு காவி பூசி அவரை களங்கப்படுத்தும் வேலையை ஆளுநர் அர்லேகர் மேற்கொண்டுள்ளதாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு கண்டித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் வன்னியரசு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி வரிசையில் இப்போது பொறுப்பு ஆளுநராக இருக்கும் ராஜேந்திர அர்லேகர் அவர்களும் அய்யன் திருவள்ளுவருக்கு ‘காவி’ பூசி, அவரை களங்கப்படுத்தும் வேலையை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடும், தமிழர்களும் என்றும் காவிகளையும், அதனை திணிக்க முயலும் சனாதனிகளையும் துளியும் ஏற்காது புறந்தள்ளுவார்கள் என்பதற்கு சட்டமன்ற தேர்தல் முடிவுகளே சாட்சியாக உள்ளன. நமது பொறுப்பு ஆளுநர் அர்லேகர், இங்கு திருவள்ளுவருக்கு காவி பூசுவதற்கு முன்னரே, அவர் ஆளுநராக இருக்கும் கேரள மாநிலத்தில் அரசு விழாக்களில் ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் ‘பாரத மாதா’ படத்தை தொடர்ந்து திணித்து வருகிறார். இதனாலேயே முந்தைய இடதுசாரி அரசின் அமைச்சர்கள், ஆளுநரின் நிகழ்ச்சிகளை புறக்கணித்த நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்கு தள்ளுவது, திருவள்ளுவருக்கு…
இந்தியாவின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா சுப்ரமணி பொறுப்பேற்றுக்கொண்டார் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த அணில் சவுகான் மே 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதையொட்டி, புதிய தலைமை தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் ஓய்வு பெற்ற லெப்டினண்ட் ஜெனரலுமான ராஜா சுப்ரமணி பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றுடன் அணில் சவுகான் ஓய்வு பெற்றதையடுத்து புதிதாக முப்படைகளின் தலைமை தளபதியாக ராஜா சுப்ரமணி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அவர் முப்படைகளின் ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்டார். டில்லியில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் முன்னாள் மாணவரான ராஜா சுப்பிரமணி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வில் எம்.பில் பட்டம் பெற்றவராவார். இதன் பின்னர் டெல்லி மற்றும் லண்டனில் மேற்படிப்பு பயின்றுள்ளார். தேசிய பாதுகாப்பு கல்விக்கழகம் மற்றும் இந்திய ராணுவ கல்விக் கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்ற இவர், 1985ம் ஆண்டு டிசம்பரில் கார்வால் ரைபிள்ஸ்…
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்துடன் தலைவா தரணி ஆள வா என அழைப்பு விடுத்து கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பாஜகவில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாள் வருகிற ஜூன் மாதம் 4-ஆம் தேதி (04.06.2026) கொண்டாடப்பட உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பல்வேறு அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு அண்ணாமலையின் இந்த ஆண்டு பிறந்தநாளைக் கோவையில் உள்ள அவரது ஆதரவாளர்களும், பா.ஜ.க தொண்டர்களும் மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டா தயாராகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பா.ஜ.க-வின் முன்னாள் கோவை மாநகர் தலைவரான உத்தம பாலாஜி ராமசாமி, தனது “உத்தம் பவுண்டேஷன்” (Uthama Foundation) அமைப்பின் சார்பில் கோவை மாநகர் முழுவதும் அண்ணாமலையை வாழ்த்திப் பிரம்மாண்ட போஸ்டர்களை ஒட்டி உள்ளார். சிங்காநல்லூர், அவிநாசி சாலை, உள்ளிட்ட மாநகரின் அனைத்து முக்கியப் பகுதிகளிலும் இந்த போஸ்டர்கள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது அதில், “எங்கள் தலைவா தரணி…
சென்னை கோயம்பேடு அருகே மதுபான பார் ஒன்று உள்ளது. பொதுவாக வார இறுதி நாட்களில் இங்கு ஆண்கள், பெண்கள் என கூட்டம் அலைமோதும். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இரவு முழுவதும் இளைஞர்கள் உற்சாகமாக இருப்பர். அவ்வாறு இன்று வார விடுமுறையை ஒட்டி, நேற்றிரவு இந்த பாரில், இளம் ஆண்கள், பெண்கள் பலர் கூடினர். இரவு முழுவதும் ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டம் சென்ற நிலையில், இதில் கலந்து கொண்ட இளம்பெண் ஒருவர் நடனமாடிய போது இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு மோதலாக உருமாறிய நிலையில், அந்த இளம் பெண் பாரை விட்டு வெளியேறி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பாரில் இருந்த ஒரு காரை எடுத்துக் கொண்டு ஒரு கும்பல் அப்பெண்ணை துரத்தியுள்ளது. அந்த பெண்ணும் முடிந்த அளவு இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்ல, ஒரு கட்டத்தில் அந்த கும்பல் காரால் அப்பெண்ணின் வாகனத்தை…
ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியும், மயிலாப்பூர் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். நடராஜ், தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தமிழக அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும் நீண்ட அனுபவமிக்கவர் ஆர். நடராஜ். ஐபிஎஸ் அதிகாரியான இவர், 36 ஆண்டுகள் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். நவம்பர் 2003 முதல் ஏப்ரல் 2006 வரை சென்னை மாநகரக் காவல் ஆணையராக பொறுப்பு வகித்துள்ளார். சிறைத்துறை டிஜிபி-யாக (DGP – Prisons) இருந்தபோது கைதிகள் மறுவாழ்வு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் தலைவராகவும் பணியாற்றினார். பணி ஓய்வுக்குப் பின்னர், கடந்த 2012-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) தலைவராக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா நியமித்தார். அவரது காலத்தில் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர கேமரா கண்காணிப்பு, இணையவழிப் பதிவு போன்ற சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். இதன்பின்னர்…
ஆப்கானிஸ்தானில் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் 10 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்கானிஸ்தானில் லக்மான் மாகாணத்தில், சமீபத்தில் நாடு திரும்பிய அகதிகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. சனிக்கிழமை அதிகாலை, லாரியின் ஓட்டுநர் தூங்கியதால், கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 36 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள நங்கர்ஹார் மாகாண மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் வசித்து வந்த சட்டவிரோத மற்றும் ஆவணங்களற்ற ஆப்கானிஸ்தான் அகதிகளை அந்நாட்டு அரசு கட்டாயமாக வெளியேற்றி வருகிறது. இதன் காரணமாக, சமீபகாலமாக லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள் பாகிஸ்தானில் இருந்து தங்களது சொந்த நாட்டிற்கு லாரிகள் மூலம் மூட்டை முடிச்சுகளுடன் திரும்பி வருகின்றனர். அப்படித் திரும்பிய…
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது. இந்தியத் தேர்தல் ஆணையம் அண்மையில் ஜூன் 18, 2026 அன்று காலியாகும் 24 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. இவற்றுடன் சேர்த்து தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் காலியாக உள்ள தலா ஒரு இடத்திற்கான இடைத்தேர்தலும் அன்றைய தினமே நடைபெறவிருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால், அந்த ஒரு மாநிலங்களவை இடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மாநிலங்களவை தேர்தல் ஜூன் 18ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (ஜூன் 1) முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஜூன் 9ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும், ஜூன் 11ம் தேதி வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாளாகும். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 18ஆம் தேதி…