Author: Editor TN Talks
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி தனது 84-வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன. அஜித்குமார் தயார் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்”- அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும். எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச் செயலாளர்;- திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும் , கார் பந்தய வீரருமான சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி.…
மூத்த மகள் அவந்திகாவின் திருமண அழைப்பிதழை மணமக்களுடன் சென்று பிரதமர் மோடிக்கு, குஷ்பு, சுந்தர் சி தம்பதி வழங்கியுள்ளனர். தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாகவும், தற்போது பாஜகவின் முக்கிய முகமாகவும் அறியப்படுபவர் குஷ்பு. இவரது கணவர் சுந்தர் சியும் தமிழ்திரைப்பட இயக்குநராகவும், நடிகராவும் இருந்தவர், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் புதிய நீதிகட்சி சார்பில் மதுரை மத்தி தொகுதியில் போட்டியிட்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு, அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும், சிறு வயது முதலே உடல் புஷ்டியாக இருந்து வந்த நிலையில், சமீப காலமாக டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, தங்களின் உடல் எடையை பாதிக்கும் மேலாக குறைத்துவிட்டனர். குஷ்புவும் தனது உடல் எடையைக் குறைத்து மெலிந்த தேகத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனால் தமிழ் சினிமா உலகமே இவர்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு நிற்கிறது. மூத்த மகள் அவந்திகா மலையாளத்தில் ‘ஆரம்பம்’ என்ற திரைப்படத்தில் முதன்மைக்…
தமிழ்நாட்டின் அடிமடியில் கைவைத்துச் சுரண்டிய தீய சக்தியும், ஊழல் சக்தியும் தவெகவின் 15 நாள் தூய ஆட்சிக்கே ஆடிப்போய் இருப்பதாக தவெக ஐ.டி.விங் பதிவிட்டுள்ளது. ஒரு நிர்வாகத் துப்புரவை வெற்றித் தலைவர் விஜய் நடத்திக் கொண்டிருப்பதாகவும், அந்தத் துப்புரவில் 60 ஆண்டுகளாய் அகப்படாத ஆவணங்களும் சிக்கிக்கொண்டிருக்கின்றன; அகலவாய்த் திருடர்களின் சுரண்டல்களும் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழல் துர்நாற்றம் களையப்பட்டு வருகிறது. இதுவரை அடித்த கொள்ளை, மக்கள் முன் விளக்கப்பட்டு வருகிறது. மின் துறையில் எரிபொருள், உபகரணம், மின் மாற்றி, துணை மின் நிலையம், மின் உற்பத்தி, மின் பகிர்மானம், மின் கொள்முதல், மின் துறை ஊழியர்கள் என ஷாக்கடிக்கும் ஊழல்களை சலவைக்குப்போட்டு வெளுத்து எடுத்துக்கொண்டிருக்கிறது வெற்றிக்கழக அரசு. புகைப்படக்கலைஞர் முதல் உயர்நிலை அரசு செயலாளர் வரை அத்தனை நியமனங்களும் ஒழுக்கமான, நேர்மையான நிர்வாகம் என அசைக்க முடியாத வரையறைக்கு கீழே கொண்டுவரப்பட்டுள்ளன. தலை சுத்தமாக இருந்தால் தான், உடல்…
சென்னையில் 16 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமைக் காவலரை பணி நீக்கம் செய்து, சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த 16 வயது சிறுவன், கோடை விடுமுறையையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உறவினர் குமரேசனின் வீட்டுக்கு வந்துள்ளார். கடந்த , 27-ம் தேதி இரவு குமரேசன், தனது நண்பரான வேலப்பன் என்பவரை வீட்டுக்கு அழைத்து வந்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர். சிறிது நேரத்தில் குமரேசன் மதுபோதையில் அங்கேயே படுத்து தூங்கிவிட்டார். ஆனால், போதையில் இருந்த வேலப்பன், அருகில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை எழுப்பி அவரது வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றியதோடு, சிறுவனுக்கு அத்துமீறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுவன், கூச்சலிட்டதோடு, அருகில் இருந்த டிவி ரிமோட்டால் வேலப்பனின் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி, அருகில் இருந்த அசோக் நகர் காவல் நிலையத்துக்கு சென்று, நடந்த சம்பவத்தைக் கூறி…
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் அகர்வாலை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டின் டிஜிபியாக இருந்த சந்திப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக மகேஷ் குமார் அகர்வால் புதிய டிஜிபியாக நியமக்கப்பட்டுள்ளார். தமிழக காவல் துறையின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 1994ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான மகேஷ் குமார் அகர்வால் சட்டம் ஒழுங்கு பணியில் மிகவும் அனுபவம் கொண்டவராவார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் அகர்வாலின் தந்தை வழக்கறிஞர் என்பதால், இவரும் ஆரம்பத்தில் சட்டம் படித்துள்ளார். தனது 22 வயதில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய மகேஷ்குமார் அகர்வால் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியைத் தொடங்கினார். தேனியில் எஸ்பி-யாக தனது பணியை தொடங்கிய மகேஷ் குமார் அகர்வால் சென்னையில் பூக்கடை காவல்துறை…
தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள கோவில் நிதி பாதுகாப்பாக இருக்கும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. கோவில்களின் உபரி நிதியை தமிழ்நாடு அரசின் நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கும் வகையில், அறநிலையத்துறை சட்டத்தின் முதலீட்டு வீதிகளில் திருத்தம் செய்து, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், கோவில் நிதியை வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய தடைவிதிக்கக் கோரியும் சென்னையை சேர்ந்த இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை மற்றும் ஆலய வழிபாட்டாளர் சங்கம் ஆகியவற்றின் தலைவரான டி.ஆர்.ரமேஷ் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கோவில் சொத்துக்களையும், நிதியை பாதுகாக்கும் நோக்குடன் அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்ட நிலையில், சட்டத்துக்கு முரணாக, அரசு உத்தரவு அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதிபதி வி.லட்சுமி…
சி.எம்.சார், கத்துக்கிட்டு வந்து, சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிந்துரைத்துள்ளார். தவெக தலைவர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய ஆட்சியில் கடந்த 15 நாட்களில் 20க்கும் மேற்பட்ட கொலைகளும், 20க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகளும் அரங்கேறியுள்ளன. இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது. இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது. இந்த #SofaModelஅரசு அமைஞ்சது முதல், கொலை – கொள்ளை – பாலியல் வன்கொடுமைன்னு…
தமிழக கோவில்களில் விஐபி தரிசனத்துக்காக தனி நேரத்தை ஏன் ஒதுக்கக்கூடாது என தமிழக அரசுகக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரி விஸ்வ இந்து பரிஷத் வட தமிழ்நாடு பிரிவு தலைவர் பி.சொக்கலிங்கம் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது, விஐபி தரிசனம் ஏன் எனவும், பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்; அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.வி. பாலசுப்ரமணியம், சாமி தரிசனத்துக்கு கட்டணம் கட்டாயம் இல்லை எனவும், கூட்ட நெரிசலை சமாளிக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும், அந்த தொகை கோவிலுக்கு முக்கிய வருவாயாக உள்ளது எனவும்…
பிக்பாஸ் புகழ் ஜூலி, தன்னை பற்றிய தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அதனால் மனஉளைச்சலில் இருப்பதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ஜூலியை குறிவைத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் பரவி வந்தன. குறிப்பாக, கிட்னி தருவதாக கூறி ரூ.15 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக சிலர் இணையத்தில் பதிவுகள் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்றும், தன்னை அவதூறு செய்யும் நோக்கில் பரப்பப்படுவதாகவும் விளக்கம் அளித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு தனது கணவருடன் நேரில் சென்ற ஜூலி, சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், “சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து என்னை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.…
இயக்குனர் ஹெச். வினோத்தின் உதவி இயக்குனர் இயக்கி, நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சென்னை தியாகராயநகரில் உள்ள ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் வாங்குவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், ஜனநாயகன் மட்டுமல்ல வேறு எந்த படத்தையும் அரசியல் காரணங்களுக்காக நிறுத்த முடியாது என கூறினார். ஜனநாயகன் படத்தில் முதலமைச்சர் விஜய் என்று வருமா என்ற கேள்விக்கு காலத்தை வென்ற அவர் எங்களுக்கு என்றுமே தளபதி என்றார். திரைத்துறை என்பது மிகப்பெரிய தலைவர்களை உருவாக்கிய தாய் மடி. அதனால் திரைத்துறை சார்ந்த எந்த கோரிக்கையாக இருந்தாலும் அதனை பரிசீலித்து நிர்வாக ரீதியாக சரி செய்யப்படும் என உறுதியளித்த அமைச்சர் ராஜ்மோகன், டிக்கெட் விலை என்றைக்குமே மக்களுக்கு சுமையாகிவிட கூடாது என்பதில் தமிழக…