Author: Editor TN Talks
உர விலை உயர்வுவில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்காசிய நாடுகளில் நடைபெற்று வரும் போர் மற்றும் சர்வதேச சந்தை மாற்றங்களின் தாக்கத்தால் இந்தியாவில் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது விவசாயிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பொட்டாஷ் உரத்தின் விலை ரூ.1,850 இலிருந்து ரூ.2,250 ஆகவும், காம்ப்ளக்ஸ் உரத்தின் விலை ரூ.1,550 இலிருந்து ரூ.2,100 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேபோல் யூரியா, சல்பேட் உள்ளிட்ட அடிப்படை உரங்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பது உழவர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே இயற்கை மாற்றங்கள், நீர் பற்றாக்குறை, தொழிலாளர் செலவு உயர்வு, மின்சார சிக்கல்கள், பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் விவசாயிகள், தற்போது உர…
நெல்லையில் நிகழ்ந்த கவின் ஆணவக் கொலையில், தலைமறைவாக இருந்த சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லைபாளையங்கோட்டையில்காதல்விவகாரத்தில்தலித்சமூகத்தைசேர்ந்தமென்பொறியாளர்ஆணவக்கொலைசெய்யப்பட்டுள்ளார். அந்தஇளைஞரைஅவரதுதாயின்கண்முன்னேபெண்ணின்சகோதரர்கொலைசெய்துள்ளார். இதுதொடர்பாககைதுசெய்யப்பட்டஅவர்காவல்நிலையத்தில்ஒப்புதல்வாக்குமூலமும்கொடுத்துள்ளார். காவல்சார்புஆய்வாளர்களானபெண்ணின்பெற்றோர்மீதும்சாதியவன்கொடுமைதடுப்புச்சட்டம்பாய்ந்துள்ளது. அவர்களையும்கைதுசெய்யவலியுறுத்திகொலையுண்டஇளைஞரின்உடலைவாங்கமறுத்துஅவரதுபெற்றோரும்குடும்பத்தினரும்தொடர்ந்துபோராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடிமாவட்டம்ஏரல்அருகேஉள்ளஆறுமுகமங்கலத்தை சேர்ந்த மென் பொறியாளர் கவின் செல்வகணேஷ், மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததால் அந்தப் பெண்ணின் சகோதரனான சுர்ஜித் என்பவரால் கொலை செய்யப்பட்டார். பெண்ணின் பெற்றோரான சரவணனும், கிருஷ்ணகுமாரியும் மணிமுத்தாறுபட்டாலியன்காவல்சார்புஆய்வாளர்களாகப் பணிபுரிந்து வந்தனர். விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த செல்வகணேஷ், தனது தாத்தவை மருத்துவ சிகிச்சைக்காக பாளையங்கோட்டைக்கு அழைத்து வந்திருந்தபோது, அவரை சுர்ஜின் நைசாகப் பேசி அழைத்து சென்று கொலை செய்திருக்கிறார். அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவிக்களை ஆய்வு செய்து சுர்ஜித் கொலை செய்ததை உறுதிப்படுத்திய போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் ஆணவக் கொலை செய்ததை சுர்ஜித் ஒப்புக் கொண்டார் இந்தக் கொலைக்கு மூலகாரணம் சுர்ஜித்தின் பெற்றோர் தான்…
ஆந்திர பிரதேசத்துல வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான எஸ்.ஐ.ஆர் நடைபெறவுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க தேர்தல் முடிவுகளை மேற்கோள் காட்டி ஆந்திர முன்னாள் முதல்வரும், YSR கட்சி தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி தனது கட்சித் தொண்டர்களை எச்சரித்துள்ளார். ஆந்திர மாநிலம் தாடேபள்ளியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் பேசிய ஜெகன்மோகன், ”எஸ்.ஐ.ஆர். பணிகளின்போது, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் என்ன நடந்தது என நாம் பார்த்தோம். 2 மாநிலத்திலும் ஏராளமான வாக்காளர்களை நீக்கிவிட்டனர். மம்தாவின் பபானிபூர் தொகுதியில் 45,982 பேரை நீக்கினர். அவர் தோல்வியை தழுவினார். தமிழ்நாட்டில் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலும் எஸ்.ஐ.ஆர் மூலம் அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அவரும் தோல்வி அடைந்தார். வாக்குகள் குறைந்தாலும் அதிகரித்தாலும் ஆபத்து என்பதை அம்மாநில தேர்வு முடிவுகள் தெளிவாக கூறுகிறது. தொண்டர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று…
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டு கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர் சத்யேந்திரா. புகழ்பெற்ற கன்னட நாடக இயக்குநர் பி.வி.காரந்தின் தொடர்பால் நாடகங்களில் நடிக்க துவங்கினார். பின், தேசிய விருது பெற்ற ’நாகபர்ணா’ என்ற கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 7 மொழிகளில் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 150க்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்தும், இயக்கியும் உள்ளார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், மொழிப்பெயர்ப்பாளர், விமர்சகர் என பன்முகத்திறன் கொண்ட இவர், தமிழில் ’ஏழாவது மனிதன்’ படம் மூலம் அறிமுகமானார். மண்வாசனை, சத்யா, மீண்டும் ஒரு காதல் கதை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு மற்றும் 2021-ல் வெளியான ‘ஜெயில்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சத்யேந்திராவின் உடலை வாங்க யாரும் முன்வரவில்லை. அதனால் அவரது உடல் ராயப்பேட்டை பிணக்கிடங்கில்…
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர்கள் குடியிருப்பான அரசு பங்களாவில், எடப்பாடி பழனிசாமி கடந்த 2011 முதல் ‘செவ்வந்தி’ என்ற அரசு பங்களாவில் தான் வசித்து வந்தார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, அமைச்சராக, முதல்வராக, எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தில் சுமார் 15 ஆண்டுகள் அந்த வீட்டில் வசித்து வந்தார். தற்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினராக அந்த வீட்டில் வசிக்க முடியாத நிலையில் அங்கிருந்து வீட்டை காலி செய்து ராயப்பேட்டை பகுதியில் குடியேறியுள்ளார், சென்னை இராயப்பேட்டை தெய்வசிகாமணி தெருவில் உள்ள புதிய பங்களா வீட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குடியேறுகிறார். இந்நிலையில் இன்று முகூர்த்த்நாள் என்பதால், குடும்பத்தினருடன் பால்காய்ச்சி புதிய வீட்டில் குடியேறினார். இதற்காக எடப்பாடி பழனிசாமி காலை 6.28 மணிக்கு புதிய வீட்டிற்கு வந்தார். முன்னதாக 6 மணிக்கே அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் வீட்டிற்கு வந்தனர். அதன்…
லெபனானுடனான போர் நிறுத்ததை மீறி அந்நாட்டின் தெற்கு நகரங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்ட நிலையில், 58 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்மூலம் கடந்த சில நாட்களில் மட்டும் இஸ்ரேலிய தாக்குதல்களால் லெபனானில் பலியானவர்கள் எண்ணிக்கை 50ஐ கடந்தது. மாகாணங்களை இணைக்கும் முக்கியப் பாதைகளான அஸ்லூன் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும், நபதியா பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதலில் லெபனான் ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரும் பலியாகியுள்ளார். தெற்கு லெபனான் மட்டுமன்றி, நாட்டின் தலைநகரான பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீதும் இஸ்ரேல் போர் விமானங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளன. ஹிஸ்புல்லா அமைப்பின் பலம் வாய்ந்த தளமாகக் கருதப்படும் இப்பகுதியில், சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு இஸ்ரேல் மீண்டும் குண்டுமழை…
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால், காவிரி நீரை நம்பியுள்ள தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், இதனை தடுக்க தமிழ்நாடு அரசு பல ஆண்டுகளாக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டவும், விவசாயிகள் நலனை காத்திடவும் முதலமைச்சர் விஜய், காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் தலைமைச் செயலகத்தில் கடந்த 25-ம் தேதி தீவிர ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், மூத்த வழக்கறிஞர் உமபதி, காவிரி தொழில்நுட்ப மற்றும் பன்மாநில நதிநீர் பிரிவின் தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் சட்ட வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்தனர். கடந்த 27-ம் தேதி டெல்லியில் முதலமைச்சருடன் மூத்த வழக்கறிஞர் உமாபதி ஆலோசனை நடத்தினார். அதன்படி, நீதிபதிகள் நியமனத்தில் முனைவர் பட்டம் பெற்ற ராம்…
தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த பிறகு, நாட்டில் பெட்ரோல், டீசல் விலையானது படிப்படியாக உயர்த்தப்பட்டது. விலை உயர்வுக்கு முன்பாகவே, மக்கள் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், போது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி சூசகமாக அறிவுரை கூறியிருந்தார். அதன்படி, இம்மாதம் 15-ம் தேதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுக் கொண்டே வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வரக்கூடிய நிலையில், 14-ம் தேதி வரை 100.84ஆக இருந்த பெட்ரோல் விலையை 15-ம் தேதி அதிரடியாக ரூ.2.83 உயர்த்தியது. அதனை தொடர்ந்து படிப்படியாக சிறிது சிறிதாக பெட்ரோல், டீசல் விலையானது உயர்த்தப்பட்டது. அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் பதற்றம் மற்றும் ஹர்மூஸ் நீர்முனை விவகாரம் என கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததன் விளைவாக பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்கப்படுவதாக கூறப்பட்டது. கடந்த 27ம் தேதி சென்னையில் ரூ.0.19காசுகள் அதிகரித்து ரூ.108.20க்கு…
சென்னை கோடம்பாக்கத்தில் 16-வயது சிறுவனின் வாயில் மதுவை உற்றி பாலியல் தொல்லை கொடுத்த காவலரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 16வது சிறுவன் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கோடை விடுமுறையை ஒட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு பெற்றோருடன் வந்துள்ளார். சிறுவன் குடும்பத்தோடு பெரியபாளையம் கோயிலுக்கு சென்று வந்துள்ளனர். பின்னர் சிறுவனின் பெற்றோர் இருவரும் சொந்த ஊருக்கு செல்ல, சிறுவன் மட்டும் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். நேற்று இரவு சிறுவனின் உறவினர் வீட்டிற்கு, அவரது மாமாவின் நண்பரான வேலப்பன் என்பவர் வடபழனி காவல்நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வரும் நிலையில், அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறுவனின் மாமவும், காவலரான வேலப்பனும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் போதை தலைக்கேற சிறுவனின் மாமா தூங்கியுள்ளார். இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் காவலர் வேலப்பன்,…
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் உள்ளிட்ட மூவர் சிறுவனுக்கு வாயில் மது ஊற்றி, கொடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சிறுவன் தன்னை தற்காத்துக் கொள்ள டிவி ரிமோட்டால் காவலரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடி, அசோக் நகர் காவல் நிலையத்திற்கு நடந்தே வந்து புகார் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் நாள்தோறும் பரிணமிக்கும் குற்றச் செயல்களின் தன்மை, மிகுந்த அச்சமூட்டுகிறது. @CMOTamilNadu அவர்களே – எந்த குழந்தைகளை வைத்து நீங்கள் வாக்கு சேகரித்தீர்களோ, அதே குழந்தைகள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்பு இன்றி நிற்கின்றனர். இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? “சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்” என ஒன்றை நீங்கள் நடத்தியதாக ஒரு வீடியோவை உங்கள் அரசு வெளியிட்டது. அது மற்றுமொரு சம்பிரதாயத்திற்காண கூட்டமாக மாற்றி விடப்பட்டு உள்ளதோ என்ற சந்தேகங்கள் வலுப்பெறுகிறது. வேலியே பயிரை மேயும் கொடூரம்…