Author: Editor TN Talks
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் உணவளிக்கும் நிகழ்ச்சி தமிழக வெற்றிக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழக முதல்வர் C.ஜோசப் விஜய் அவர்களின் ஆணையின் கீழ் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் அறிவுறுத்தலின்படி உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் இன்று பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட மற்றும் ஒன்றிய உறுப்பினர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் K. E. கிருஷ்ணமூர்த்தி, தமிழக வெற்றிக் கழக கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் R. தாமோதரன், ஊத்தங்கரை பேரூராட்சி கழக செயலாளர் M. ரமேஷ், ஊத்தங்கரை மத்திய ஒன்றிய செயலாளர் J. ராமதுரை, ஊத்தங்கரை தெற்கு ஒன்றிய செயலாளர் S. தினேஷ் கண்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், கிழக்கு ஒன்றிய…
அதிமுகவுக்கு ஆஃபர் கொடுத்து அழைக்கிறோமா? எப்படி திமுக கேள்வி கேட்க முடியும்? ஆதவ் அர்ஜூனா காட்டம்..!
சென்னை பனையூரில் அதிமுகவின் பல்வேறு நிர்வாகிகள் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைஅத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, தவெகவில் இணைந்தவர்களை வரவேற்றார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், ”காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியை இணைத்து கூட்டணி அமைத்துள்ளோம். எங்கு உண்மை இருக்கிறதோ அங்குதான் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இருப்பார்கள். மாற்று கட்சியினர் எடுக்கும் முடிவை திமுக எப்படி கேள்வி கேட்க முடியும். திமுக காலத்தில் இருந்த முதலமைச்சர் குடும்ப நிதி என்பதை ஒழித்துள்ளோம். திமுகவின் பண்ணையார் மனநிலை தான் அவர்களின் தோல்விக்கு காரணம். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் அதிமுக தொடர்ந்து தேர்தலில் தோல்விகளை சந்தித்தது. திமுக – அதிமுக இணைந்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க நடந்த சூழ்ச்சியை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமியின் முடிவை ஏற்காததால் அதிமுகவினர் தவெக நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். இன்னும்…
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான சூர்யா, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குநர் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வெளியான கருப்பு திரைப்படம் தியேட்டர்களில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படத்தில் சில காட்சிகளில் மட்டுமே சூர்யா வந்தாலும் கூட கடவுளாக அவரது மிரட்டலான நடிப்பு மக்களிடம் பெரிதும் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் & சன்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்திருந்தார் நடிகர் சூர்யா. சூர்யாவின் 46வது படமான இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
மதுபான காலி பாட்டில்களை திரும்பப்பெறும் உத்தரவை மாவட்ட நிர்வாகம் திரும்பப் பெற வேண்டும் எனக் கூறி ஈரோடு அக்ரஹாரத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக கடைகளை அடைத்து மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மதுபான கடையில் மது பாட்டில்கள் விற்பனையின் போது ஸ்டிக்கர் ஒட்டி பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்து வாடிக்கையாளர்கள் மீண்டும் மது பாட்டில்களை அதே டாஸ்மாக் கடையில் ஒப்படைத்தால் திரும்ப பத்து ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை அரசு மதுபான கடை ஊழியர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தத் திட்டத்தை கைவிடக் கோரி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 144 டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் சூரியம்பாளையத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை…
ஐபிஎல் தொடரில் மிகவும் ரசிகப்படக்கூடிய திறமையான வீரராக வளம் வருபவர் வைபவ் சூர்யவன்ஷி. இளம் வீரரான இவர் இத்தொடரில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். அந்த வகையில், குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய வைபவ் சூர்யவன்ஷி 16 பந்துகளில் அரை சதத்தை கடந்து அசத்தினார். தொடர்ந்து 28 பந்துகளில் 97 ரன்களை எடுத்து அசத்தினார் சூர்யவன்ஷி. ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் கிறிஸ் கெய்ல். இவரது சாதனையை சூர்யவன்ஷி முறியடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரபுல் ஹின்ஜ் வீசிய பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதனால் அந்த சாதனை படைக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். எனினும், கிறிஸ் கெயிலின் மற்றொரு சாதனையை முறியடித்தார் சூர்யவன்ஷி. நடப்பு தொடரில் 15வது ஆட்டத்தில் 65 சிக்சர் அடித்து, ஒரு சீசனில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற புதிய வரலாறை…
புதுச்சேரி மாநிலத்தில் வழக்கமான உற்சாகத்துடன் பக்ரீத் பண்டிகையினை தியாகப்பெருநாளாக இஸ்லாமியர்கள் கொண்டாடினார். 100க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் பண்டிகையினை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றார்கள். இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணம் செல்வது, அதை இந்த பக்ரீத் பண்டிகையினையொட்டிதான் நிறைவேற்றப்படுகின்றது. மேலும் இறைத் தூதரானஇப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாகவும், மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தியாகத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலும் இந்தப் பண்டிகையினை தியாகப் பெருநாளாகவும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்றது. புதுச்சேரியில் கடற்கரை சாலை, குத்பா பள்ளி, மீராப்பள்ளி, நெல்லித்தோப்பு ஈத்கா பள்ளி மற்றும் காரைக்காலில் உள்ள பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் இன்று காலை 6.30 மணி முதல் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையின்போது சகோதரத்துவம் தழைத்தோங்கவும், பெருமழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட பேரிடர்களில்…
ரேஷன் போக்குவரத்து மற்றும் வருவாய் கையாளுதலுக்கான உதவித் திட்டத்தின் கீழ், இரண்டு அம்சங்களை ஒருங்கிணைத்துத் தொடர்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பொது விநியோக அமைப்பில் தன்னியக்கத்துடன் கூடிய ரேஷன் போக்குவரத்து மற்றும் வருமானத்தைக் கையாள்வதற்கான உதவி (சர்தாக்-பிடிஎஸ்) திட்டத்தை ஒருங்கிணைந்தத் திட்டமாகத் தொடர பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு 16வது நிதி ஆணையத்தின் சுழற்சி காலகட்டத்தில், மத்திய அரசின் பங்காக ரூ. 25,530 கோடி நிதி ஒதுக்கப்படும். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான, மாநிலங்களுக்குள்ளான உணவு தானியப் போக்குவரத்து, கையாளுதல், நியாயவிலைக் கடை முகவர்களின் லாப வரம்பு ஆகியவற்றால் ஏற்படும் செலவினங்களை ஈடுசெய்வதற்கான மத்திய உதவியின் விதிமுறைகளைத் திருத்தவும், தற்போதுள்ள மத்திய உதவி நிதி முறையைத் தொடரவும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முடிவு செய்துள்ளது. சார்தக்-பிடிஎஸ் திட்டம் பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளது: (அ) மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து, கையாளுதல், மற்றும் நியாயவிலைக் கடை விற்பனை முகவர்களின் லாப வரம்பு…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சந்தித்து அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது;- தனி நபர்களால் ஏற்படுத்தப்படும் மின் தடைகுறித்த தகவலில் அதற்கு காரணமானவர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம். தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடுகள் இல்லை. பழுதுகள் காரணமாக ஏற்பட்ட மின் தடைகளும் சரி செய்யப்பட்டு வருகிறது. மின் தடை புகார் தொடர்பான மொபைல் குழுக்களை அதிகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின் தடை தொடர்பான தகவல்கள் தவறாகப் பகிரப்படுவதை தடுக்கும் வகையில் மின் தடைக்கான காரணங்கள் மற்றும் அது சரி செய்யப்பட்டது தொடர்பான தகவல்களும் சமூக வலைத்தளத்தில் அப்டேட் செய்யப்படும். சட்டசபை பட்ஜெட்டுக்கு பின்னர் மின்வாரிய பணியிடங்கள் நிரப்பப்படும். பாஜகவினருக்கு தமிழ்நாட்டைப் பற்றி பேச அருகதை இல்லை. தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் பற்றிப் பேசவேண்டியதே இல்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் மின் தடை ஏற்படுவது தொடர்பான கேள்விக்கு அதனை சீர்செய்யும்…
முதலமைச்சர் அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி எந்த பொருளாதார மேதை கொடுத்த ஐடியாவோ என அதிமுக எம்.எல்.ஏ ஓ.எஸ்.மணியன் கமெண்ட் அடித்துள்ளார். மே 25ஆம் தேதி, முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் குறு, சிறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதிகபட்சமாக ரூ.50ஆயிரமும் குறைந்த பட்சமாக ரூ.5ஆயிரமும் குறு மற்றும் சிறுவிவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. முதலமைச்சரின் இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் வரவேற்பை கொண்டு வருவதற்குப் பதிலாக அதிருப்தியைத்தான் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. தனது தேர்தல் அறிக்கையில் சிறுகுறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துவிட்டு இப்போது கண் துடைப்பு வேலை பார்த்திருப்பதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்ததோடு, இந்த தள்ளுபடியே தேவையில்லை என்னும் அளவுக்கு பேசுபொருளானது. முதலமைச்சரின் அறிவிப்புக்கு அரசியல் கட்சியினரும் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ ஓ.எஸ்.மணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தனது பங்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக தேர்தல் அறிக்கையில்…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் புதுதில்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று (27.05.2026) மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் பிரதமரிடம்முதலமைச்சர் என்ன பேசினார் என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தச் சந்திப்பின்போது, இந்தியப் பிரதமர் தனது நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின்போது, ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்ததற்காக முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், மாநில வாழ்த்துப்பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே எப்போதும் பாடப்பட்டு வருகிறது என்றும், உள்துறை அமைச்சகத்தால் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட குறிப்பாணையைத் தொடர்ந்து, சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் பாடல் முதலாவதாகப் பாடப்பட்டு வருகிறது என்றும், இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப்பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையினை வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக்கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேம்பட்ட நடுத்தர போர் விமான…