Author: Editor TN Talks
தற்போது வரக்கூடிய படங்களில், எங்காவது ஓரிடத்தில் இளையராஜாவின் பாடல்களின் வரி வந்தாலோ, அல்லது இசை வந்தாலோ உடனே அந்த படக்குழுவினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் இளையராஜா. அந்த வகையில் ’மூடுபனி’ என்ற படத்தில் இடம்பெற்ற ’என் இனிய பொன்நிலாவே’ என்ற பாடல், ’அகத்தியா’ என்ற புதிய தமிழ்ப்படத்தில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரிகம இண்டியா லிமிடெட் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த பாடலின் காப்பிரைட் உரிமை தங்களிடம் இருப்பதாக தெரிவித்தது. ஆனால் அகத்தியா பட தயாரிப்பு நிறுவனம், தாங்கள் பாடலின் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் உரிமம் பெற்றிருப்பதாக தெரிவித்தது. இளையராஜாவும் காப்பிரைட் சட்டப்படி தனக்கு உரிமம் வழங்க அதிகாரம் இருப்பதாக கூறினார். ஆனால் அவரது வார்த்தையை ஏற்க மறுத்த நீதிமன்ற, பாடலின் ஒலிப்பதிவின் ஒரு அங்கமான பாடல் வரிகளுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது என்று அவரது மனுவை தள்ளுபடி…
ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஒரே இடத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்கள் ஈகைத் திருநாளாக கடைபிடிக்கும் பக்ரீத் பண்டிகையானது இன்று கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மக்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகவும் இந்த ஈகை திருநாளானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது நபிகளின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த பக்ரீத் பண்டிகையானது ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஏழை எளிய மக்களுக்கு குர்பானி என்று அழைக்கப்படும் இறைச்சிகளை தானமாக வழங்குவார்கள் அதுமட்டுமின்றி ஒவ்வொருவரும் அவர்களுக்கு தகுந்தார் போல் ஏழை எளிய மக்களுக்கு தானங்களை வழங்குவார்கள். மேலும் சிறப்பு தொழுகையும் நடைபெறும். அதன்படி இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜாக் அமைப்பினர் உலகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் ஜாக் அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஆயிஷா…
ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் போதும், சூதாட்டமும் தொடங்கும். இந்தியாவின் மிகப்பெரிய மாஃபியா நடைபெறுவது இந்த ஐபிஎல் தொடர் மூலம் தான். அப்படி பெங்களூருவில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பெங்களூரு உட்பட நாடு முழுவதும் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பெங்களூருவில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து பல்வேறு கும்பல்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பெங்களூருவில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து அதிரடி சோதனை நடத்தினர். இதில் 23 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து சுமார் ரூ.1லட்சத்து 10,000 மதிப்பிலான 6 செல்போன்கள், ரூ.1லட்சத்து 6 ஆயிரத்து 433 ரொக்கம், ரூ.13கோடியே 37லட்சம் மதிப்பிலான சூதாட்ட காயின்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின்…
மேகதாது விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற ஆணையக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், “ Opposition leader உதயநிதி அவர்கள் இந்த issueல silent mode ஏன்?… இப்போதும் CM திரு C. ஜோசப் விஜய் அவர்கள் directஆ PMக்கு letter எழுதி, Tamil Nadu rights காக strongஆ stand எடுத்திருக்கார். ஆனா “connecting call” பேசுற Ex CM பழனிசாமி அவர்கள்… opposition leader உதயநிதி அவர்கள்… அதுக்கப்புறம் ஏன் நேரடியாக மோடியிடம் Question கேக்கல? PM Narendra Modi அவர்கள் உடனடியாக Mekedatu proposal-ஐ reject பண்ணி, காவிரி நீரில் தமிழ்நாட்டின் rightful share-ஐ protect பண்ணணும். CM letter clearஆ சொல்லுது இந்த project Supreme Court judgment-க்கும், Cauvery Tribunal final order-க்கும் எதிரானது. மேலும் லட்சக்கணக்கான தமிழக…
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அவைகளில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் 1 வீரரும், இத்தாலியைச் சேர்ந்தவருமான ஜானிக் சின்னர், பிரான்சின் கிளெமெண்ட் டாபர் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் 6-1, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன், கார் மீது மோதிய விபத்தில் சிறுமி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மாந்தாங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் சாரா தனியார் காலணி தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் பணி முடிந்ததும் நிறுவன வேனில் ஏற்றி வீடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். பனப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த வேன், ஒச்சேரி அடுத்த சித்தாஞ்சி – சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலை தடுப்புச்சுவரில் மோதி, எதிர்திசையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதி பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காஞ்சிபுரத்திலிருந்து ஆம்பூர் நோக்கி சென்ற காரில் பயணம் செய்த 3 வயது சிறுமி 80 வயது முதியவர், கார் ஓட்டுநர் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு பெண் பலத்த காயங்களுடன்…
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் இன்று (26.05.2026) போக்குவரத்துத் துறையின் முக்கிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களின் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் பல்வேறு முக்கிய முடிவுகள் ஆலோசிக்கப்பட்டன. வாகன எண் முன்பதிவு: இனி ஆன்லைன் ஏலம்! பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான வாகனப் பதிவு எண்களைப் பெறுவதில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில், பொது ஏல முறையைச் செயல்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதன் மூலம் எண்கள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பங்கேற்க வழிவகை செய்யப்படும். ஆட்டோ கட்டண நிர்ணயம்: விரைவில் கலந்தாய்வு தமிழ்நாட்டில் இயங்கும் ஆட்டோ ரிக்சாக்களின் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாகப் பல கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய கலந்தாய்வுக் கூட்டம் விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் என இருதரப்பு நலன்களும் இதில் கருத்தில்…
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரண்டு நாள்கள் பயணமாக நாளை டெல்லி செல்கிறார். முதலமைச்சராக பொறுப்பேற்றபின் அவர் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் இதுவாகும். தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய், தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த 10ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் இரண்டு நாள் பயணமாக நாளை முதலமைச்சர் ஜோசப் விஜய் டெல்லி செல்ல உள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக தேசிய கட்சித் தலைவர்களை சந்தித்து அவர் வாழ்த்து பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை காலை 10 மணியளவில் தனி விமானத்தில் டெல்லி செல்லும் முதலமைச்சர் அங்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் வைத்து முதலமைச்சர்…
சென்னை மாநகராட்சியின் மே மாதத்திற்கான மாதாந்திர மாமன்ற கூட்டம் நடைபெறாது என மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தவெகவின் முதலமமைச்சர் ச.ஜோசப் விஜய், நகராட்சி நிர்வாகத்தையும் தன் வசமே வைத்துள்ளார். அதன் கீழ் வரும் சென்னை மாநகராட்சியின் மேயரான பிரியா, இதுவரை முதலமைச்சரை சந்திக்கவில்லை. காலில் முறிவு ஏற்பட்டதன் காரணமாக ஓய்வில் இருந்த அவர் நேற்றுதான் அலுவல் பணியை தொடங்கியுள்ளார். மேயரைப் போலவே, துணை மேயர், நிலைக்குழு தலைவர்கள் மற்றும் மண்டல தலைவர்களும் நிர்வாக பணியில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 153 வார்டுகள் திமுக வசம்தான் உள்ளன. மற்ற 47 வார்டுகள் மட்டுமே அதிமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிடம் உள்ளன. பொதுவாக மாதாந்திர கூட்டம் நடத்த வேண்டும் என்றால் 25 நாட்களுக்கு முன்பாகவே மண்டலக்குழு தலைவர்கள் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற வேண்டும், அதில் நிறைவேற்றப்படக்கூடிய…
அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி அணிக்கு ஆதரவாக இருந்த அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா, இன்று சபாநாயகரை சந்தித்து தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதன்பின்னர், அமைச்சர்கள் என்.ஆன்ந்த் மற்றும் செங்கோட்டையனை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார். மேலும் முதலமைச்சரையும் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு சென்ற இசக்கி சுப்பையா, அங்கு தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது;- அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததற்கு ஒரே காரணம் தொகுதி மக்களின் நலனுக்காகத்தான். கடந்த 5 ஆண்டாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏவாக இருந்து தொகுதி மக்களுக்காக பெரிதாக ஒன்றும் செய்யமுடியவில்லை. தொகுதிக்கு தேவையான முக்கியமான 10 கோரிக்கைகளை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தும் எதுவும் நடக்கவில்லை. ஆளும் கட்சியின் ஆதரவோடு செயல்பட்டால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். அந்த அடிப்படையில் முதலமைச்சர் விஜய்யையும், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்தையும் பார்த்தேன்.…