Author: Editor TN Talks
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பிற பகுதிகளில் மாடுகளை வெட்ட தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் செல்வபுரத்தைச் சேர்ந்த சூர்யபிரசாந்த் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவை செல்வபுரம் பகுதியில் மாடுகள் வெட்டுவதற்காக தகர கொட்டகைகல் அமைக்கப்பட்டிருந்தன; இதுதொடர்பாக புகார் அளித்ததை தொடர்ந்து, செல்வபுரம் போலீசார் அந்த இடத்துக்கு வந்து 7 மாடுகளை மீட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகைக்காக துடியலூர் சந்தை, ரத்தினபுரி மசூதி, உக்கடம், செல்வபுரம், கள்ளமேடு, குனியமுத்தூர், கோட்டைமேடு, போதனூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பொது இடங்களில் மாடுகள் வெட்டப்பட உள்ளதாகவும், அதைத்தடுத்து மாடுகளை மீட்டு, கோசலைகளுக்கு அனுப்பிவைக்கும்படி செல்வபுரம் போலீசாருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், புகாரை பரிசீலித்து பொது இடங்களில் மாடுகள் வெட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்ககும்படி உத்தரவிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த…
அதிமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் இணைத்தது ஜனநாயக படுகொலை என பாமக தலைவர் அன்புமணி கண்டித்துள்ளார். புதுச்சேரியில் அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் எதிர்க்கட்சயை சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துள்ளது ஜனநாயக படுகொலை. இதனை வன்மையாக கண்டித்தார். மக்கள் விருப்பத்திற்கு எதிராக 4 அதிமுக எம்எல்ஏக்கள் எந்த காரணமுமின்றி வெற்றி பெற்ற 20 நாட்களில் தவெகவில் இணைந்துள்ளனர். இது ஜனநாயக படுகொலை மட்டுமல்ல ஒரு மோசடி எனவும் தமிழக மக்கள் இதனை விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். இளைஞர்களுக்கு எதிரான செயல் இது எனவும், குதிரை பேரத்தைவிட மோசமானது எனவும் ஆவேசம் காட்டினார். 20 நாட்களில் ராஜினாமா செய்து உடனே இன்னொரு கட்சியில் சேர்வது நல்லதல்ல.மக்கள் தீர்ப்புக்கு எதிரான செயல். இடைத்தேர்தல் வந்தால் 4 வேட்பாளர்களும் படுதோல்வி அடைவார்கள். அனைத்து கட்சிகளும் சேர்ந்து பொது வேட்பாளர்களைக் கூட நிறுத்துவோம்…
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிரான செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்யும் குழுக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் விசாரணை மற்றும் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இதயத்துல்லா நியமிக்கப் பட்டுள்ளார். குழு உறுப்பினர்களாக சொர்ணா சேதுராமன், சி.வி. மெய்யப்பன் மற்றும் கமலிகா காமராஜர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். **இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;- எங்கள் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்தப் பயணத்தின் மூலம் தேர்தலில் ஏற்பட்ட தொடர் தோல்விகள் குறித்தும், அடுத்த கட்டமாக கட்சி ரீதியாக எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்தும் தொண்டர்களிடம் கருத்து கேட்க உள்ளோம். தொண்டர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில்…
CBSE தேர்வு முடிவுகளில் கடுமையான முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, சிபிஎஸ் இ போர்டுக்கு பல்வேறு வினாக்களைத் தொடுத்துள்ளார். எக்ஸ் தளத்தில் ராகுல்காந்த் பதிவிட்டுள்ளதாவது;- CBSE தேர்வு முடிவுகளில் கடுமையான முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதால் நாட்டின் லட்சக்கணக்கான மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். அதற்கு வழக்கம் போல் மோடி அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை, பொறுப்பும் இல்லை, வெட்கமும் இல்லை. இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட COEMPT நிறுவனம், 2019-ல் தெலங்கானாவில் Globarena என்ற பெயரில் இருந்தபோதே இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தது. பெயர் மாறியது. ஆனால் நோக்கமும் இயல்பும் மாறவில்லை. இந்த பின்னணி வரலாறு அனைவருக்கும் தெரிந்திருந்தும், அதே நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப் பட்டுள்ளது. 18.5 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் இப்படிப்பட்ட நிறுவனத்தின் கைகளில் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. ஆனால் யாருக்கும் அதைப் பற்றி கவலையில்லை. இது தவறு மட்டும் அல்ல – இது ஒரு திட்டமிட்ட சதி.…
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆதரவாகத்தான் தமிழ்நாடு காங்கிரஸ் செயல்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் 62-ஆவது நினைவுநாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கு.செல்வப்பெருந்தகை, நவீன இந்தியாவின் சிற்பியான ஜவஹர்லால் நேருவின் சாதனைகளைப் பகிர்ந்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் விடையளித்தார். பிரதமரை முதலமைச்சர்கள் சந்திப்பது வழமையான நடைமுறை என்றும் அதனடிப்படையில் கேரள முதலமைச்சர் சதீஷன் நேற்று சந்தித்ததாகவும் தற்போது முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சந்திப்பதாகவும் தெரிவித்தார். மேகதாது அணை விவகாரத்தில், தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது எனவும், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி செய்வதையெல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்றுக் கொள்ளாது எனவும் விவசாயிகளுக்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம்…
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் அரசன் திரைப்படத்தின் வெளியீடு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை படத்தை தொடர்ந்து வெற்றி மாறன் நீண்ட நாட்களாக சிம்புவை வைத்து அரசன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். வட சென்னை படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் பார்க்கப்படுகிறது. இப்படத்தில் சிம்புவுடன் பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா உட்பட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது. 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்ன்னையில் தீவிரமாக நடைபெற்று நிறைவடையும் தருவாயில் உள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்ட திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படுகிறது. இந்த அரங்கத்தில் வடசென்னை பகுதி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 3-வது கட்ட படப்பிடிப்பில் போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ராஜன் கேரக்டரில் நடித்த அமீரும், சந்திரா கேரக்டரில் நடித்த ஆண்ட்ரியாவும் படப்பிடிப்பில் பங்கேற்கின்றனர். 3 மாதத்தில் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைகிறது.…
திருச்சி அரியமங்கலத்தில் மலைபோல் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற தவெக எம்.எல்.ஏ அதிரடி திட்டத்தை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் சேகரமாகும் குப்பைகளை அகற்ற டெண்டர் மூலம் 40 கோடி ரூபாய் செலவு செய்ய தேவை இல்லை , 30 கோடி ரூபாய் செலவில் குவாரியில் கொட்டினால் நிரந்தர தீர்வு காணலாம் என அதிகாரிகளுக்கு திருவெறும்பூர் தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி ஆலோசனை தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை நிரந்தரமாக அகற்றுவது குறித்து திருவெறும்பூர் தவெக எம் எல் ஏ நவல்பட்டு விஜி ஆய்வு மேற்கொண்டார். திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு 47 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 600 டன் குப்பைகள் வந்து இங்கு கொட்டப்படுகிறது. மலைபோல் குவிந்திருக்கும் இந்த குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் மாசு, சுவாசக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளால் பொதுமக்கள் பெரும் அவதியுற்று…
மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தவர் எட்டப்பன் என்னும் தவறான வரலாற்றுப் பிழையை சரி செய்ய எட்டயபுரம் மன்னர் வாரிசு ஒருவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வீரபாண்டிய கட்ட பொம்மன் என்னும் பெயரைச் சொன்னாலே, நம்மை அறியாமல் எட்டப்பன் என்னும் பெயர் நமது நினைவுக்கு வரும். ஆனால், வரலாற்றில் பிழையாகவே எட்டப்பன் நமக்கு காட்டப்பட்டு வருகிறார் என்கிறார்கள் ஆய்வறிஞர்கள். விஜயநகரப் பேரரசின் கீழ் ஆந்திராவின் சந்திரகிரியை ஆட்சி செய்து வந்தவர்கள்தான் எட்டப்ப மன்னர்கள்.இம்மன்னர்களில் ஒருவரான நல்லமநாயக்கர், சாம்பு மகாராஜாவை தரிசிக்க சென்றபோது, அங்கு காவலுக்கு இருந்த சோமனை வீழ்த்தியதாகவும், அதன் பின்னர் ஆதரவற்ற சோமனின் தம்பிகள் எட்டுபேரை தத்தெடுத்து அவர்களுக்கு அப்பாவாக இருந்ததால், எட்டப்ப நாயக்கர் பெயர் வந்ததாகவும், அவரைத் தொடர்ந்து இந்த பரம்பரையில் வந்த மன்னர்கள் அனைவரும் எட்டப்பன் என்னும் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்ததாகவும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதேபோல், விஜயநகர பேரரசு வீழ்ச்சி அடைந்த பின்னர், ஆந்திராவில் இருந்து…
கிராம சாலைகளை முறையாக அமைத்து தமிழகம் முழுவதும் சாலை வசதிகளை மேம்படுத்த அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆனந்த் உத்தரவிட்டு உள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பணங்கள் மாளிகையில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் நடைபெற்ற வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து துரை சார்ந்த அலுவலர்களுடன் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆனந்த் ஆலோசனையில் ஈடுபட்டார் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் உயரதிகாரிகள் மற்றும் தமிழக முழுதும் உள்ள அனைத்து மாவட்ட கூடுதல் ஆட்சியர்கள் மாவட்ட திட்ட இயக்குனர்கள் ஊரக வளர்ச்சி துறையின் முதன்மை செயலாளர் உளித்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த் கிராம சாலைகளை புதுப்பித்தல் மற்றும் புதிய சாலைகளை அமைத்து கிராமப்புற மக்களுக்கு சாலை வசதிகளை மேம்படுத்தி கொடுப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் மேலும்…
கடந்த சில தினங்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, கடந்த இரு தினங்களாக குறைந்து வருகிறது. நேற்றைய தினம் தங்கத்தின் விலை சவனுகு ரூ.400 குறைந்து ரூ.1,17,840க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,730க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்றும் தொடர்ந்து சரிந்து இருக்கிறது தங்கம் விலை. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து சவரன் ரூ.1,17,000க்கும் கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொருத்தவரை, நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன்படி, கிராமிற்கு ரூ.295க்கும், கிலோவுக்கு ரூ.2,95,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.