Author: Editor TN Talks
தவெகவில் அதிமுக எம்.எல்.ஏக்களை சேர்ப்பதை ஆரோக்கியமான அரசியலாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கருதவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;- தவெக ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவும், குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதை தடுப்பதற்காகவும் இடது சாரி கட்சிகளோடு இணைந்து விடுதலை சிறுத்தைகள் இந்த முடிவை மேற்கொண்டது. நாங்கள் ஆதரவை நல்கி இருக்கிறோம். வெளியில் இருந்து ஆதரவு நல்கிய நிலையில் அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்னும் தவெகவின் அழைப்பை ஏற்று இயக்கத்தோழர்களுடன் கலந்தோலோசனை செய்து, அதனடிப்படையில் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறோம். இந்த நிலையில் தவெக தலைவருக்கு, முன்னணி பொறுப்பாளருக்கு விடுக்கிற வேண்டுகோள், எந்த சூழலிலும் உங்கள் ஆட்சி கவிழ நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். இந்த நம்பிக்கையோடு நீங்கள் ஆட்சியை திறம்பட செய்ய வேண்டும். விமர்சனங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில், தவெக தலைமை செயல்படக்கூடாது என்பது எங்கள் விருப்பம். அதிமுக இதுபோன்ற நெருக்கடிகளைச் சந்திக்கும் என்பதை தேர்தலுக்கு முன்பே நான்…
கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க மூத்த காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கக் உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விஷ்வ ஹிந்து பரிஷத் வட தமிழ்நாடு தலைவர் பி.சொக்கலிங்கம் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திக், மோகன்ராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு எதிராக போக்சோ சட்டம் மற்றும் பி.என்.எஸ். சட்டத்தின் கடத்தல், கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பலியான சிறுமியின் தாய் அளித்த பேட்டியில் சிறுமி காணாமல் போனதும், காவல்துறையினரை அணுகியபோது குழந்தை பாதுகாப்பாக தங்கள் காவலில் இருப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்திருந்தார்; ஆனால் அதற்கு மாறாக சிறுமி…
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, தான் ஒரு தூய சக்தி என்றும், மற்றக் கட்சியினர் தீய சக்தி என்றும் பிரச்சாரம் செய்தார். அப்படியான நிலையில், 108 தொகுதிகளில் வெற்றிப்பெற்று முதல்வர் ஆக முடியாமல் அவர் சாடிய திமுக வின் தோழமைக்கட்சிகளுடன் பேசி ஆதரவுப் பெற்று முதல்வர் பதவிக்கு வந்தார். அது மட்டும்மல்லாமல் அஇஅதிமுக வில் வெற்றிப்பெற்ற சட்டமன்ற உறுபினர்களையும், திருட்டு தனமாக அரசியல் புரோக்கர்களை வைத்து, குதிரை பேரம் பேசி, சட்டமன்றத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமாக தனது வலுவை நிரூபித்தார். நேற்றைக்கு அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினமா செய்ய வைத்துவிட்டு, தன்னுடைய கட்சியிலும் சேர்த்துக் கொண்டார். இதில் என்ன நியாயம் இருக்கிறது! ராஜினாமா செய்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடந்தால், மக்களின் வரிப்பணம்தானே வீணாகிறது என்று முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் அறியாமல் இருப்பது அவரது…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலம் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சில சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென்று ராஜினாமா செய்திருப்பதும், உடனடியாக அவர்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்திருப்பதும் தமிழ்நாட்டில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் அடுக்கடுக்கான குழப்பமும், கோஷ்டி மோதலும் ஏற்பட்டு ராஜினாமா என்ற நிலைக்கு வந்துள்ளது. ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் சேர்ந்திருப்பது அவர்கள் விரும்பி மேற்கொண்ட முடிவு என்று சொன்னாலும், எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் இயல்பாக நடந்த செயலாக கருத இயலவில்லை. இத்தகைய போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்றது அல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். ஏற்கனவே, சட்டப்பேரவையில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் உள்ளாகி இருக்கிறார்கள். இருப்பினும் உடனடியாக அவர்களை தவெகவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை…
16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய நெருங்கிய உறவினரான 50 வயது நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா ஆண்டி குழப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனது நெருங்கிய உறவினரான 16 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாரிமுத்துவின் தகாத செயலால் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், இந்த உண்மை வெளியாகி காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மாரிமுத்து குற்றவாளி என்பதை கண்டுபிடித்த காவல்துறையினர் அவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் சிறுமியின் வயிற்றில் இருந்த சிசு தானாகவே இறந்து வெளியேறியதையடுத்து மாரிமுத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் இந்த பரிசோதனையில் மாரிமுத்து…
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, வேட்புமனுவில் சொத்து, வருமான விவரங்களை மறைத்தது குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் அவர் தனது வேட்புமனுவில், சொத்து மற்றும் வருமான விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி, எடப்பாடி தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் சக்திவேல் பெருமாள் வழக்கு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவில் சொத்துக்கள் குறித்து முழுமையான விவரங்களை தெரிவிக்கவில்லை என்றும், நிறுவனங்களில் இருந்து அவரது மனைவிக்கு கிடைத்த வருமானம் குறித்த தகவல்களை மறைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு தேர்தலில் இந்து கூட்டுக்குடும்ப சொத்தாக இருந்த 3900 சதுர அடி அளவிலான வீடு, தற்போதைய…
தமிழ்நாட்டின் புதிய சட்டம்-ஒழுங்கு நிரந்தர டிஜிபி நியமனம் தொடர்பான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக டெல்லியில் உள்ள மத்திய பணியாளர் தேர்வாணைய (UPSC) தலைமையகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் உள்துறைச் செயலாளர் மணிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், தமிழக அரசு பரிந்துரைத்த மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றிய விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் பின்னர், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் மகேஷ் குமார் அகர்வால் ஆகிய மூவரின் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல் வழங்கி, இறுதிப் பட்டியலை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. இந்த மூவரில் ஒருவரை தமிழ்நாட்டின் புதிய நிரந்தர டிஜிபியாக தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. காவல்துறை வட்டாரங்களின் தகவலின்படி, மகேஷ் குமார் அகர்வாலுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற…
வயிற்று வலிக்காரருக்கு கட்டிலை திருப்பி போட்டு படுத்தால் வயிற்று வலி சரியாகாது. எடப்பாடி பழனிசாமி வயிற்று வலிக்காரராக உள்ளார் என செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவின் வரலாற்றில் தமிழகத்தின் வரலாற்றில் பணநாயகத்தை முறியடித்து ஜனநாயகத்தை காக்கின்ற ஒரு தலைவர் முதலமைச்சர் விஜய் தான். தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளை தெரிந்ததற்கு பிறகு எல்லோரும் இன்று இணைந்து இருக்கிறார்கள். இது மகிழ்ச்சியான ஒன்று. தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரைக்கும் குதிரை பேரம் எங்கும் நடைபெறவில்லை. குதிரை பேரம் நடத்தியது யாரென்று நாடு தெரிந்திருக்கிறது. திமுக ஆதரவோடு நான் முதலமைச்சர் ஆவேன் என்று தெரிவித்தது யார். அவரிடத்தில் பதில் கேட்டால் அது சரியாக இருக்கும். நானே ராஜினாமா செய்து விட்டு தான் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தேன். ஒரே மாதத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள்…
மேகதாது அணை விவகாரத்தி உச்சநீதிமன்ற ஆணையை கர்நாடகா கடைப்பிடிக்க அறிவுறுத்துமாறு பிரதமருக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;- உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதி ஆணையையும் அப்பட்டமாக மீறும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது நீர்த்தேக்கத்திற்கான ‘பூமி பூஜை’ நடைபெறும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளதை கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். கர்நாடக மாநில துணை முதல்வர் இது தொடர்பாக பொது வெளியில் தெரிவித்திருப்பது தங்கள் வாழ்வாதாரத்திற்காக காவிரி ஆற்றையே நம்பியிருக்கும் தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளிடையே, மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நதிநீர் பிரச்னை என்பது மிகவும் முக்கியமானதொன்று. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேல் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்னரே இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது என்பது இந்தியப் பிரதமர் அறிந்ததே. கடந்த 16.02.2018 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேகதாது திட்டம்,…
தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகள் பயிர்க் கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாடு முதல்வர் விஜய், விவசாயிகள் சாகுபடி செலவின வகைக்காக கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்கடன்களில் ரூ.50 ஆயிரம் வரையான கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என நேற்று அறிவித்துள்ளார். இது தலைமுறை, தலைமுறையாக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் துயரங்களை குறைக்காது. தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்” என வழங்கியுள்ள உறுதி மொழிக்கும் மாறானது. இதுவரை விவசாயிகளுக்கான கடன் நிவாரணம் சாகுபடி நிலத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டதாகவே வழங்கப்பட்டது. இந்த வழிமுறையை மாற்றி “பண மதிப்பை” அடிப்படையாகக் கொண்டு…