Author: Editor TN Talks

அதிமுக என்னும் பேரியக்கத்தை சீண்டாமல், போய் ரீல்ஸ் போட்டு விளையாடுங்க என தவெகவை அதிமுக  கலாய்த்துள்ளது. அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில்,  தவெக ஆச்சரியக்குறிகளே! இப்பதான் First Time Government Form பண்ணி சீட்ல உக்காந்திருக்கீங்க.. அதுக்குள்ள 50 வருஷ வரலாறு இருக்குற அதிமுக-வ பாத்து விரல் நீட்டுறதா? தலைமை செயலகத்துல சபாநாயகரை பாத்து முறைப்படி ராஜினாமா லெட்டர் குடுக்கலாம்.. ஆனா ராஜினாமா செஞ்ச அடுத்த நிமிஷமே உங்க அமைச்சரை பார்த்து இணைப்பு விழா நடத்தக் கூடாது! தார்மீகப் பொறுப்புன்னு சொன்னா சபாநாயகர் கிட்ட போயிருக்கணும், அமைச்சர எதுக்கு சந்திக்கணும்? ​இதான் நீங்க சொல்ற சுயவிருப்பமா? இல்ல, பதவி + பவர் காமிச்சு பின்னால நடந்த Backdoor Deal-ஆ? குதிரை பேரம் இப்போ க்ளியரா மக்களுக்கு வெட்ட வெளிச்சம் ஆகிடுச்சு பாஸ்! தேர்தல்ல ஜெயிக்கிறதும் தோக்குறதும் சகஜம் தான்.. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா காலத்துல இருந்து எத்தனையோ சரிவை…

Read More

திருச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் 9 மாதத்தில் இறந்துபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, சுருட்டப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் (62). இவருக்கு 3மகள்களும், 1மகனும் உள்ளனர். இவருடைய மூத்த மகள் அம்ருதா பிரியதர்ஷினி (27). பி.எஸ்.சி பட்டதாரியான இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருச்சியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் தங்கி வேலைக்காக படித்து வந்துள்ளார். அப்போது தொட்டியம் மேலத்தெருவை சேர்ந்த மகேஷ்குமார் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி உள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 9மாதங்களுக்கு முன்பு இருவரும் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின் அம்ருதா பிரியதர்ஷினி, தொட்டியம் மேலத்தெருவில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (25.5.2026) அம்ருதாவின் தந்தை கேசவன் வழக்கம்…

Read More

இந்தியாவில் பலகட்ட பிரச்னைகள் எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலர் மௌனம் காத்து வருகின்றனர். அந்த வகையில் நீட் தாள் கசிவு தொடங்கி, பெட்ரோல் டீசல் விலை உயர்வு வரை பல பிரச்னைகள் மக்கள் மத்தியில் மேலோங்கி காணப்படுகிறது. அப்படி இருக்க, எதிர்க்கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவின் எந்த தலைவர்களும் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர். இதனை விமர்சிக்கும் விதமாக, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ NEET தாள் கசிவில் லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு சிதறுகிறது… 4வது முறையாக பெட்ரோல் விலை உயர்ந்து சாமானிய மக்கள் தினமும் சுமையடிக்கிறார்கள்… ஆனா நம்ம “எப்போதும் பேசுவோம்” தலைவர்கள் மட்டும் Deep silence mode-ல! உதயநிதி ஸ்டாலின்… பழனிசாமி… ஒருத்தராவது ஒரு வார்த்தை சொன்னாங்களா? மக்கள் பிரச்னை வந்தா மவுனம்… அரசியல் வந்தா மைக்கை பிடிக்க போட்டி! தமிழக மக்கள் கேட்கிறார்கள்:…

Read More

சட்டமன்ற தேர்தல் முடிந்ததில் இருந்தே தமிழக அரசியலில் புயல் காற்று வீசிக் கொண்டே இருக்கிறது. யாரும் எதிர்பாரா வண்ணம் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். எதிர்கட்சியாக திமுக இருக்க, 50 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியமிக்க கட்சியான அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. எடப்பாடி பழனிசாமி ஆதரவு, சி.வி.சண்முகம், எஸ்.பி வேலுமணி ஆதரவு என எம்.எல்.ஏக்கள் இரு புறமாக பிரிந்தனர். பல எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்கு சரியான தலைமை இல்லாததால், யாரை தலைமையாக ஏற்றுக் கொள்வது என்ற சிக்கலில் சிக்கி தவித்து, தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். நேற்று, எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்களான தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா, மதுராந்தகம் எம்.எல்.ஏ குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகியோர் கூண்டோடு தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தலைமை…

Read More

நாடு முழுவதும் 2வது நாளாக மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பதால் மக்கள் அதிர்ச்சியடந்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் முடிந்த கையோடு, நாட்டில் பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. 2 வாரங்களில் 4 வது முறையாக பெட்ரோல் விலை அதிகரித்ததால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அந்த வகையில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.0.24 காசுகள் உயர்ந்து ரூ.108.01க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.0.23 காசுகள் உயர்ந்து ரூ.99.78க்கு விற்பனையாகிறது. மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாகவும், ஹர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருப்பதாலும், இந்த விலையேற்றம் அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலர்களை கடந்து விற்பனையாவதால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின்…

Read More

பொதுச் செயலாளர் தவிர்த்து அதிமுகவில் இருந்து யார் வந்தாலும் தவெகவில் சேர்த்துக் கொள்வோம் என ஆதவ் அர்ஜுனா பச்சைக் கொடி காட்டியுள்ளார். சென்னை பனையூரில் செய்தியாளர்களிடம் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:- எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளிக்கும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வலைப்பக்கத்தில் தவெக குதிரைபேரம் நடந்ததாகக் கூறியுள்ளார். 2026இல் திமுக தோற்றதில் இருந்து, குறிப்பாக கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்றதில் இருந்து, ஏன் தோற்றம் என்பதுகூட தெரியாமல் மு.க.ஸ்டாலினும் உதயநிதியும் பொறாமையுடனும், தூக்கமின்மையுடனும் மக்கள் மத்தியில் தவெக குறித்து பொய்யானப் பிரசாரத்தை செய்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் திமுக, அதிமுக, பாஜக இணைந்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக எல்லா முயற்சியையும் மேற்கொண்டார்கள். இதற்காக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியிடமும் பேசினார்கள். ஆனால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற, மதசார்பற்ற, சமூக நீதி கொள்கையைக் காப்பாற்ற அதனை ஏற்காமல் காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் , தவெகவுக்கு தங்கள் ஆதரவை…

Read More

எம்.எல்.ஏ பதவியை தான் எதற்காக ராஜினாமா செய்தேன் என மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த மரகதம் குமரவேல் விளக்கம் அளித்துள்ளார். சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்த மதுராந்தகம் தனித் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் தனித் தொகுதி எம்.எல்.ஏ சத்தியபாமா ஆகிய மூவரும் இன்று (மே 25) தலைமைச் செயலகத்தின் தரைத் தளத்தில் இருந்த சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகரை சந்தித்து தாங்கள் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை அளித்தனர். அதை ஏற்றுக் கொண்டதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் தெரிவிப்பதற்கு முன்பாகவே, முதல் தளத்தில் இருக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகத்துக்கு சென்று அவரை சந்தித்து மூவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு தவெக அடையாள அட்டை அளிக்கப்பட்டதோடு, ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார். தலைமைச் செயலகம் தவெக அலுவலகமான நிலையில் அதன்பின்னரே, அவர்களின்…

Read More

தமிழகத்தில்  ஐபிஎஸ் அதிகாரிகள் மூவர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை பெருநகரக் காவல் ஆணையராக இருந்த அருண், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்த நிலையில், தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாது. இதேபோன்று காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டி.எஸ்.அன்பு ஐபிஎஸ்  சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாகவும், , நிர்வாக ஏ.டி.ஜி.பி.யாக மகேஷ் குமார் தயாளும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக தற்போது சந்தீப் ராய் ரத்தோர் பதவி வகிக்கும் நிலையில், அவருக்கு அடுத்தபடியாக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யான டி.எஸ். அன்பு உயரிய பதவியை வகிக்கிறார்.

Read More

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள “பெத்தி” திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள இந்த கிராமத்து ஆக்‌ஷன் திரைப்படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது. இந்த படத்தில் “கௌர்நாயுடு” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார், இப்படத்தின் கதை தான் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது கதாபாத்திரத்திற்கு தெளிவான நோக்கம் மற்றும் வலுவான உணர்வுப்பூர்வமான பின்னணி இருப்பதால், இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைந்ததாக…

Read More

தமிழ் நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை வருமாறு:- சுத்த சுயம்பிரகாச தூய சக்தி என்று தன்னைத் தானே அறிவித்துக்கொண்டு அரசியலில் குதித்த திரையுலகப் பிரபலம், மக்களின் முழுமையான ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என்ற நிலையில், தான் அமைத்த பொய்க்கால் குதிரை ஆட்சியைக் காப்பாற்ற பல்வேறு தகிடுதத்த அரசியலில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடான ஒன்றாகும். தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில், மோசமான ஒரு குதிரை பேர அரசியலை நடத்தி, தான் அமைத்த மைனாரிட்டி ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள முனைவது கண்டு தமிழக மக்கள் எள்ளி நகையாடுகின்றனர். தமிழ் நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 126 தொகுதி மக்கள் தனக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள் என்பதை சிறிதும் உணராமல், தான் எந்தக் கட்சியை தீய சக்தி என்று வருணித்து களமாடினாரோ அந்தக்…

Read More