Author: Editor TN Talks

அதிமுக எம்.எல்.ஏக்கள்  மூவர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் தங்களை இணைத்துக் கொண்ட நிலையில், இது குறித்து திமுகவும், காங்கிரசும் கருத்து மோதல் நடத்திக் கொண்டிருக்கிறது. அதிமுவில் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஆதரவு அளித்து வந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல்,  தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ எஸ்.ஜெயக்குமார் ஆகியோர், இன்று தலைமைச் செயலகம் சென்று சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, அப்படியே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறைக்கு சென்று அவர் முன்னிலையில் தங்களை தவெகவிலும் இணைத்துக் கொண்டனர். இதனைக் குறிப்பிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’ எனப் பதிவிட்டுள்ளார். காட்சி 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. காட்சி 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.…

Read More

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50000 வரை பயிர்க்கடன் பெற்றுள்ள குறு விவசாயிகலுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து முதலமைச்சர் அ.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், கூட்டுறவு துறை அமைச்சர் வி. காந்திராஜ், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை அமைச்சர் என். மரிய வில்சன் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள்…

Read More

புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். கடந்த 16ஆம் தேதி, தமிழ் திரைப்படத் துறையினர் முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து திரைப்படங்களையும் நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர். ​1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், திரையரங்குகளுக்கு வழங்கப்படும் ‘C’ படிவ உரிம நிபந்தனை 14-A-இன் படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் தினசரி நான்கு காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது. மேலும், உள்ளூர் பண்டிகை நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களில், மேற்கண்ட நான்கு காட்சிகளுக்கு கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சி, அதாவது நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள், மாவட்டத்தைப் பொறுத்தளவில் உரிமம் வழங்கும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகரத்தைப் பொறுத்தளவில் மாநகர காவல்…

Read More

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில்,  பள்ளிக் கல்வித் துறையின் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட தையல் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது;- இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து, ஜூன் முதல் வாரம் வெப்ப அலை இருக்குமா என்பது குறித்து கோப்புகளை கேட்டுள்ளோம், அவை கிடைத்ததும் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டு பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் இருந்தால் உடனடியாக அறிவிக்கப்படும். போக்சோ குறித்து விழிப்புணர்வை பாடப்புத்தகங்களில் கொண்டு வந்துள்ளோம். புதிதாக வெளியிடப்பட்ட பாடப் புத்தகங்களில் முதல் பக்கத்திலேயே டோல் ஃப்ரீ எங்கள் குழந்தைகளுக்கு எளிதாக தெரியும்படி வழங்கப்பட்டுள்ளது , போக்சோ வழக்கங்கள் குறித்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் இன்னும் துரிதப்படுத்துவோம். தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் சரியாக மேம்படுத்தப்பட்ட கதவுகள் பொருத்தப்பட்ட கழிப்பறைகள் உள்ளதா  என ஆய்வு செய்வது, குடிநீர் வசதி இருக்கிறதா…

Read More

அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;-  காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திடும் வகையில் தொடர் சட்ட நடவடிக்கைகள் எடுத்திட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவுறுத்தியிருப்பது, கடந்த காலங்களைப் போல வெறும் சம்பிரதாய அறிக்கையாக அமைந்திடக் கூடாது.  உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கும் முரணாகத் தமிழகத்திற்கான உரிய நீரை வழங்காமலும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதத்தைக் கடந்த ஆட்சியாளர்கள் எளிதாக எதிர்கொண்டதன் விளைவே தற்போது மேகதாது அணைக்கான பூமி பூஜை குறித்துப் பேசும் அளவிற்கான துணிச்சலை கர்நாடக அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக காங்கிரஸ் அரசின் மேகதாது அணைத் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், காவிரி டெல்டா பகுதிகள் முழுவதும் பாலைவனமாவதோடு, விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் ஒட்டுமொத்த…

Read More

தென்காசி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 18 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த, இயற்கை ளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் வரப்பெற்றன. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி அங்குள்ள 54 கல்குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உதவி ஆட்சியர்கள் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு, 09.05.2026 முதல் இந்த ஆய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்தநிலையில்,  இன்று (25.05.2026) அதிகாலை தென்காசி மாவட்டத்தில் அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அவரின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற முதற்கட்ட புலத்தணிக்கையில், மொத்தம் ஆய்வு செய்யப்பட்ட 54 கல்குவாரிகளில் 18 கல்குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, அந்த 18 கல்குவாரிகளின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 3 குழுக்களின் விரிவான ஆய்வறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கடந்த திமுக ஆட்சியில் ஒரு சில நிறுவனங்கள் மின்வாரியத்தில் விதிமிறல்களில் ஈடுபட்டதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில், மின்துறையின் விநியோக நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மின்வாரியத்துடன் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள், மின் உபகரணங்களின் விநியோகஸ்தர்கள், வழங்குநர்கள் மற்றும் கொள்முதல் நிறுவனங்களுடன் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. கூட்டத்தில் டெண்டர் நடைமுறைகள், மின் உற்பத்தியில் ஏற்படும் பற்றாக்குறைகள், திட்ட செயல்பாடுகளில் நிலவும் சிரமங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட மின் துறையின் விநியோக நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், தங்களது பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை அமைச்சரிடம் நேரடியாக முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், துறையுடன் தொடர்புடைய குறைகளுக்கு உரிய காலக்கெடுவில் நிரந்தர தீர்வு காணப்படும் என்றும், எந்தவித முறைகேடுகள் நடந்தாலும்…

Read More

கோவை சிறுமியைஅடுத்து மரக்காணத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ள நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிர படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்ததாகவும்  அவரது பெற்றோரைக் காணொளி வாயிலாகத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கோவை சூலூர் அருகே பள்ளப்பாளையத்தில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி மே 21 ஆம் தேதி இரவு காணாமல் போனார். பின்னர் கண்ணம்பாளையம் குளத்துக்கு அருகே தென்னந்தோப்பில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரித்ததில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவ்விரு குற்றவாளிகளையும் பிணையில் வெளிவிடாமல்,  வழக்கை…

Read More

எந்தவொரு பெண்ணுக்கும்  பாலியல் வன்கொடுமை நடக்காதவாறு, கூட்டு மனசாட்சியோடு இயங்கும் இந்தச் சமூகம் தான் உறுதிசெய்யவேண்டும் என கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி தொகுதி எம்.பி.யும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி விடுத்துள்ள எக்ஸ்தளப் பதிவில், விளாத்திகுளம் வேடநத்தம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் இன்று தண்டனை வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருடன் துணை நின்று, குற்றம் நடந்த 76 நாட்களில் இவ்வழக்கின் விசாரணையை விரைந்து நடத்தி முடித்து, நீதியைப் பெற்றுதந்துள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை  அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். குற்றவாளிக்கான தண்டனையை சட்டம் உறுதிசெய்துவிட்டது. இனி இதுபோல எந்தவொரு பெண்ணுக்கும் நடக்காதவாறு, கூட்டு மனசாட்சியோடு இயங்கும் இந்தச் சமூகம் தான் உறுதிசெய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ள கனிமொழி,  அதற்கான வழிகளை அரசு தான் ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும்…

Read More

இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”தூத்துக்குடியில் நேற்று இளம் பெண் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனத்தில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டதுடன் அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் காவல் துறையினர் அவர்களை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. தவெக ஆட்சியில் அமர்வதற்கு முன்னர் நித்தமும் தமிழத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பெண்கள் பாதுகாப்பு பற்றி பக்கம் பக்கமாக கண்டன அறிக்கைகளை பதிவு செய்து விட்டு தற்போது ஆட்சிக்கு வந்த பின்னரும் இவர்களது ஆட்சியிலும் அதே நிலைமை தொடர்வது ஆட்சி நிர்வாகத்தின் தோல்வியையே எதிரொலிக்கிறது. முதல்வர் விஜய் அவர்கள் ஆட்சியிலாவது பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பியிருந்த தமிழக சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சியிருக்கிறது. துறையின் பெயர் தெரியாத அமைச்சர்களும், குற்ற வழக்கு பின்னணி கொண்ட அமைச்சர்களும் தவெக ஆட்சியில்…

Read More