Author: Editor TN Talks

தமிழக காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து 28 தொகுதிகளில் களம் கண்ட காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளை வென்றது. தவெகவுக்கு 108 எம்.எல்.ஏக்கள் கிடைத்து, பெரும்பான்மைக்கான ஆதரவை விஜய் தேடிய நிலையில், கூட்டணித் தலைமையிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், ஓடிச் சென்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விஜய்க்கு தனது ஆதரவை அளித்தது. அதற்கு பிரதியுபகாரமாக, காங்கிரஸுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் இந்தப் போக்கை திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. 20 ஆண்டுகளாகத் தூக்கிச் சுமந்த நம்மிடம் சொல்லிக் கொள்ளாமலேயே வெளியேறிய நம்பிக்கைத் துரோகி காங்கிரஸ் என உதயநிதி, திமுக இளைஞரணிக் கூட்டத்தில் சாடியிருந்தார். இதற்கு காங்கிரஸ் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுகவும் தன்பங்குக்கு வசைபாடத் தொடங்கியிருக்கிறது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான இன்பதுரை, தமிழக காங்கிரஸ் என்பது ஒரு…

Read More

கர்நாடகாவில் சிப்பி எடுப்பதற்காக ஆற்றுக்குள் சென்றவர்களில் 10 பேர் பரிதாபமாக மூழ்கி உயிரிந்துள்ளனர். உத்தரகன்னடா மாவட்டத்த்ல் பத்கல் பகுதியருகே உள்ள வெங்கடபுரா ஆற்றில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிப்பி மட்டும் சங்கு எடுப்பது வழக்கம். அவற்றை உணவுக்காகம் விற்பனை செய்தும் தங்கள் வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று, வெங்கடாபுரம் ஆற்றில் 14 பேர் சிப்பி எடுக்கச் சென்றுள்ளனர்.  அவர்கள் மும்முரமாக சிப்பிகளையும் சங்குகளையும் ஆற்றுக்குள் மூழ்கி சேகரித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் நீரோட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தாங்கள் சேகரித்த சிப்பிகளையும், சங்குகளையும் எடுத்தபடி அவசர அவசரமாக ஆற்றில் இருந்து வெளியேற முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் நீரோட்டம் அதிகமாகி நீர் மட்டம் உயர்ந்ததால்,  ஆற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தள்ளாடியுள்ளனர். இதனால், கரையை அடைவதற்கு முன்னதாக அவர்கள் ஆற்று நீரில் இழத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்ததோடு, காப்பாற்றவும் முயன்றுள்ளனர்.…

Read More

தனிச்சின்ன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னணி குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் விளக்கமளித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சியின் கூட்டத்தில், இனி வரும் தேர்தல்களில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது திமுக கூட்டணியில் இருந்து மமக விலகுகிறதா என்னும் ஐயப்பாட்டை எழுப்பியது. திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிட்ட காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. தனிச்சின்னத்தில் போட்டியிடாததால் மனித நேய மக்கள் கட்சியில் போட்டியிட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தவெக அமைச்சரவையில் இடம்பெற முடியாமல் போனதால்தான் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் பரபரப்பு எழுந்தது. இந்த நிலையில் தனிச்சின்ன தீர்மானத்தின் பின்னணி என்ன? என்பது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் மனந்திறந்த பிரகடனம் இதுதான் என கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த சில நாள்களாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் உவப்பில்லாத,…

Read More

அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் செயல்பட முடியாது எனக் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு வெளியேறியுள்ளார். விசிகவைச் சேர்ந்தவரும் செய்யூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான பனையூர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களையும் கோட்பாடுகளையும் தமிழ் சமூகத்தின் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித்தமிழர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களின் பங்கு அளப்பரியது. ஒடுக்கப்பட்ட மக்களை ஓர் அமைப்பாகத் திரட்டி, அவர்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்தியவர் அண்ணன் எழுச்சித்தமிழர். என்ன நெருக்கடி வந்த போதிலும், பதவிகளோ பரிசுகளோ ஆசை காட்டப்பட்ட போதும், ஏற்றுக் கொண்ட கொள்கையில் மலை போல் உறுதியாக இருப்பார் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே லட்சோப லட்சம் சிறுத்தைகளைப்போல் நானும் அவரை எனது தார்மீக தலைவராக ஏற்றுக்கொண்டு…

Read More

பக்ரீத் பண்டிகையை ஒட்டி போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உலகப் புகழ்பெற்ற போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை இன்று களைகட்டியது. தக்காளி முதல் தங்கம் வரை அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் பெருமை வாய்ந்த இந்தச் சந்தையில், பக்ரீத் பண்டிகையில் குர்பானி கொடுப்பதற்காக ஆடுகளின் தேவை அதிகரித்துள்ளதால், போச்சம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது வளர்ப்பு ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இதுமட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் லாரிகள் மற்றும் மினி வேன்கள் மூலம் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டன. சந்தைக்கு இந்த வாரம் இஸ்லாமியர்கள் அதிகமாக வந்திருந்தனர். செம்மறி ஆடு, வெள்ளாடு, மறிக்கை ஆடு எனப் பல்வேறு இன ஆடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆடுகளின் உடல் எடை, தரம் மற்றும் ரகங்களுக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ10,000 முதல் அதிகபட்சமாக ரூ.35,000 வரை…

Read More

2014 மக்களவைத் தேர்தலில் திமுக செய்த மிகப்பெரிய துரோகத்தை அனைவருக்கும் நினைவூட்டியிருக்க முடியும் என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவளித்ததன் வழியாக இன்று தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் சென்றது குறித்து திமுக தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. மே 23ஆம் தேதி நடைபெற்ற திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்து விட்டதாகவும் மக்கள் அதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும் கடுமை காட்டியிருந்தார். உதயநிதியின் கூற்றுக்கு திருநாவுக்கரசர், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் எதிர் கருத்துகளைக் கூறியிருந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும் தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். எங்களை விமர்சிக்க வேண்டும் என்றால் தாராளமாக விமர்சியுங்கள், ஆனால் எங்களுக்கு வாக்களித்த தமிழக மக்களை…

Read More

தமிழ்நாடு சிறைச்சாலைகளை டிஜிட்டல் மயமாக்குவது குறித்து பட்ஜெட்டுக்கு முன்பாக ஆலோசனை செய்யப்பட உள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் தங்களது துறை சார்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புழல் மத்திய சிறையில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு  மேற்கொண்டார். சிறைத்துறை ஏடிஜிபி சங்கர் தலைமையிலான அதிகாரிகள் கைதிகளின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சரிடம் விளக்கினர். பேட்டரி வாகனம் மூலம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் அறைகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், பின்னர் சிறைவாயிலில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது;- தமிழ்நாட்டில் 13 சிறைச்சாலைகள் உள்ள நிலையில் அவற்றில் உள்ள கைதிகளின் கொள்ளளவு, தற்போது அடைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டது. தற்போதைய சூழலுக்கு ஏற்ப சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நவீன வசதிகள், பாதுகாப்பு மேம்பாடு குறித்து…

Read More

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக தேர்தலில் களம் கண்டு வெற்றி பெற்று தற்போது தமிழக அமைச்சரவை இடம் பெற்றுள்ள முகமது பர்வேஸ் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் இன்று கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு பணியை மேற்கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளிடமும், மற்ற நோயாளிகளிடமும் மருத்துவர்கள் வழங்கும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். லும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்களை சந்தித்த அமைச்சர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு மற்றும் பாதுகாப்பு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பாக செயல்படுவதாக…

Read More

திமுகவும், அதிமுகவும் சேர்ந்து கூட்டணி அமைக்க திட்டமிட்டதாக மாணிக்கம் தாகூர் கூறுவது அப்பட்டமான பொய் என ஆர்.எஸ்.பாரதி கடிந்துரைத்துள்ளார். மே 23ஆம் தேதி நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் குறித்து உதயநிதி ஸ்டாலின் கடுமையாகப் பேசியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் இன்று காங்கிரச் எம்.பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்ட மே 4ஆம் தேதி அன்று மாலையே திமுகவும், அதிமுகவும் சேர்ந்து கூட்டணி போட்டு ஆட்சி அமைக்க திட்டமிட்டதாகவும் இதற்கு பாஜக முக்கிய நிர்வாகி இரு கட்சிகளையும் பேச வைத்ததாகவும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க திமுக ஆதரவு அளிப்பதாகவும், அதனைக் கேட்டு உதயநிதி ஸ்டாலின் துள்ளிக் குதித்ததாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அப்பட்டமான பொய் சொல்வதாக திமுக அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி கடிந்துரைத்துள்ளார். காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள். தேர்தல் முடிவு வந்த பின்பு காங்கிரசாரை…

Read More

விஜய்க்கு எதிராக எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவது என திமுக முடிவெடுத்ததாகவும் அதைக்கேட்டு உதயநிதி துள்ளிக் குதித்ததாகவும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பகீர் தெரிவித்துள்ளார். சென்னையில் மே 23-ஆம் தேதி நடைபெற்ற திமுக இளைஞரணிஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்திய அளவில் பாஜகவின் தொடர் வெற்றிக்கு காரணம் மோடியோ, அமித்ஷாவோ அல்ல காங்கிரஸ் தான் காரணம் எனக் கூறியிருந்தார். 20 ஆண்டுகளாக முதுகில் சுமந்த குறைந்தபட்ச நன்றி கூட இல்லாமல், பதவிக்காக சொல்லாமல் கொள்ளாமல் காங்கிரஸ் ஓடிப்போனதாகவும், இனி எந்தக் காலத்திலும் காங்கிரசை நம்பப் போவதில்லை எனவும் சாடினார்.  காங்கிரசுக்கு நாம் பாடம் கற்பிக்கிறோமோ இல்லையோ, மக்கள் பாடம் கற்றுக் கொடுப்பார்கள் எனவும் பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் தரப்பிலும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். நாகரிகமாக பேச வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், திமுகவும் அதிமுகவும் சேர்ந்து கூட்டணி…

Read More