Author: Editor TN Talks
பக்ரீத் பண்டிகையை ஒட்டி போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உலகப் புகழ்பெற்ற போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை இன்று களைகட்டியது. தக்காளி முதல் தங்கம் வரை அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் பெருமை வாய்ந்த இந்தச் சந்தையில், பக்ரீத் பண்டிகையில் குர்பானி கொடுப்பதற்காக ஆடுகளின் தேவை அதிகரித்துள்ளதால், போச்சம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது வளர்ப்பு ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இதுமட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் லாரிகள் மற்றும் மினி வேன்கள் மூலம் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டன. சந்தைக்கு இந்த வாரம் இஸ்லாமியர்கள் அதிகமாக வந்திருந்தனர். செம்மறி ஆடு, வெள்ளாடு, மறிக்கை ஆடு எனப் பல்வேறு இன ஆடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆடுகளின் உடல் எடை, தரம் மற்றும் ரகங்களுக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ10,000 முதல் அதிகபட்சமாக ரூ.35,000 வரை…
2014 மக்களவைத் தேர்தலில் திமுக செய்த மிகப்பெரிய துரோகத்தை அனைவருக்கும் நினைவூட்டியிருக்க முடியும் என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவளித்ததன் வழியாக இன்று தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் சென்றது குறித்து திமுக தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. மே 23ஆம் தேதி நடைபெற்ற திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்து விட்டதாகவும் மக்கள் அதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும் கடுமை காட்டியிருந்தார். உதயநிதியின் கூற்றுக்கு திருநாவுக்கரசர், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் எதிர் கருத்துகளைக் கூறியிருந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும் தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். எங்களை விமர்சிக்க வேண்டும் என்றால் தாராளமாக விமர்சியுங்கள், ஆனால் எங்களுக்கு வாக்களித்த தமிழக மக்களை…
தமிழ்நாடு சிறைச்சாலைகளை டிஜிட்டல் மயமாக்குவது குறித்து பட்ஜெட்டுக்கு முன்பாக ஆலோசனை செய்யப்பட உள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் தங்களது துறை சார்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புழல் மத்திய சிறையில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு மேற்கொண்டார். சிறைத்துறை ஏடிஜிபி சங்கர் தலைமையிலான அதிகாரிகள் கைதிகளின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சரிடம் விளக்கினர். பேட்டரி வாகனம் மூலம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் அறைகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், பின்னர் சிறைவாயிலில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது;- தமிழ்நாட்டில் 13 சிறைச்சாலைகள் உள்ள நிலையில் அவற்றில் உள்ள கைதிகளின் கொள்ளளவு, தற்போது அடைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டது. தற்போதைய சூழலுக்கு ஏற்ப சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நவீன வசதிகள், பாதுகாப்பு மேம்பாடு குறித்து…
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக தேர்தலில் களம் கண்டு வெற்றி பெற்று தற்போது தமிழக அமைச்சரவை இடம் பெற்றுள்ள முகமது பர்வேஸ் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் இன்று கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு பணியை மேற்கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளிடமும், மற்ற நோயாளிகளிடமும் மருத்துவர்கள் வழங்கும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். லும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்களை சந்தித்த அமைச்சர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு மற்றும் பாதுகாப்பு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பாக செயல்படுவதாக…
திமுகவும், அதிமுகவும் சேர்ந்து கூட்டணி அமைக்க திட்டமிட்டதாக மாணிக்கம் தாகூர் கூறுவது அப்பட்டமான பொய் என ஆர்.எஸ்.பாரதி கடிந்துரைத்துள்ளார். மே 23ஆம் தேதி நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் குறித்து உதயநிதி ஸ்டாலின் கடுமையாகப் பேசியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் இன்று காங்கிரச் எம்.பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்ட மே 4ஆம் தேதி அன்று மாலையே திமுகவும், அதிமுகவும் சேர்ந்து கூட்டணி போட்டு ஆட்சி அமைக்க திட்டமிட்டதாகவும் இதற்கு பாஜக முக்கிய நிர்வாகி இரு கட்சிகளையும் பேச வைத்ததாகவும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க திமுக ஆதரவு அளிப்பதாகவும், அதனைக் கேட்டு உதயநிதி ஸ்டாலின் துள்ளிக் குதித்ததாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அப்பட்டமான பொய் சொல்வதாக திமுக அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி கடிந்துரைத்துள்ளார். காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள். தேர்தல் முடிவு வந்த பின்பு காங்கிரசாரை…
விஜய்க்கு எதிராக எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவது என திமுக முடிவெடுத்ததாகவும் அதைக்கேட்டு உதயநிதி துள்ளிக் குதித்ததாகவும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பகீர் தெரிவித்துள்ளார். சென்னையில் மே 23-ஆம் தேதி நடைபெற்ற திமுக இளைஞரணிஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்திய அளவில் பாஜகவின் தொடர் வெற்றிக்கு காரணம் மோடியோ, அமித்ஷாவோ அல்ல காங்கிரஸ் தான் காரணம் எனக் கூறியிருந்தார். 20 ஆண்டுகளாக முதுகில் சுமந்த குறைந்தபட்ச நன்றி கூட இல்லாமல், பதவிக்காக சொல்லாமல் கொள்ளாமல் காங்கிரஸ் ஓடிப்போனதாகவும், இனி எந்தக் காலத்திலும் காங்கிரசை நம்பப் போவதில்லை எனவும் சாடினார். காங்கிரசுக்கு நாம் பாடம் கற்பிக்கிறோமோ இல்லையோ, மக்கள் பாடம் கற்றுக் கொடுப்பார்கள் எனவும் பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் தரப்பிலும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். நாகரிகமாக பேச வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், திமுகவும் அதிமுகவும் சேர்ந்து கூட்டணி…
நான் நடுநிலையில் இருந்து பணியாற்றுகிறேனா இல்லையா என்பதை நான் தீர்ப்பு வழங்கும்போது இந்த நாடே தெரிந்து கொள்ள போகிறது குற்றம் சுமத்துகிறவர்கள் தெரிந்து கொள்ளப் போகிறார்கள் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்திய பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், நீதி நேர்மை தவறாமல், பத்திரிகைத் துறை எப்படி நடத்தவேண்டும் என்பதற்கு முன்னோடியாகச் செயல்பட்டவர். தமிழர் இருக்கும் இடமெல்லாம் தன்னுடைய பத்திரிகை சென்று சேரும் வகையில் தமிழை வளர்த்தவர் சி.பா. ஆதித்தனார். தமிழை வளர்ப்பதில் தமிழர் நலன் போற்றுவதில் அவர் ஆற்றியிருக்கிற பணிகள் என்றென்றும் நினைவிலே கொள்ளத்தக்கது என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து அதிமுக விவகாரம் குறித்தும், ஒருதலைப் பட்சமாக சபாநாயகர் செயல்படுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, நான் நடுநிலையில்…
பண்ணையார் மனப்பான்மையோடு திமுக நடந்து கொள்வதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாளையொட்டு எழும்பூரில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழை வளர்த்த பெருமைக்குரியவர் சி.பா. ஆதித்தனார், அவரது பணிகள் என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்கவை என்றார். சட்டம் ஒழுங்கு குறித்து காவல் துறையினருடன் தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம். குற்றவாளிகளை எச்சரித்துளோம். குற்றச்சம்பவங்கள் எங்குமே நடக்காத அளவுக்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சிக்கு வராது என்றார்கள். ஆனால், ஆட்சி அமைத்துக் காட்டினோம். தற்போது, இந்த ஆட்சி 5ஆண்டு நீடிக்காது என்றெல்லாம் ஆருடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் பேராதரவோடு, 5 ஆண்டு அல்ல, 50 ஆண்டுகள் தவெக…
அமெரிக்காவின் முன்னணி பல்கலைக் கழகங்களில் சேர்வதற்காக எழுதும் SAT தேர்வை 12 வயது மாணவன் எழுதி ஆச்சர்யப்பட வைத்துள்ளார். அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காக பொதுவாக 16 வயதுடைய மாணவர்கள் எழுதும் புகழ்பெற்ற SAT தேர்வை, அபுதாபியில் 8-ஆம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவன் அர்ஜுன் பட்வர்தன் எழுதி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். இந்தத் தேர்வின் கணிதப் பிரிவில் 800-க்கு 750 மதிப்பெண்களையும், மொத்தமாக 1600-க்கு 1290 மதிப்பெண்களையும் பெற்று சிறப்பான சாதனை படைத்துள்ளார். மேலும், அவரது இந்த அபார திறமையை பாராட்டி, உலகப் புகழ்பெற்ற ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் “Center for Talented Youth (CTY)” வழங்கும் உயரிய “Grand Honors” விருதும் வழங்கப்பட்டுள்ளது. சிறுவன் அர்ஜுன் இந்தத் தேர்வுக்காக எந்தவொரு தனியார் பயிற்சி மையத்திற்கும் செல்லாமல், முழுமையாக வீட்டிலிருந்தபடி தன்னம்பிக்கையுடன் படித்து இந்த வெற்றியை பெற்றுள்ளார். ‘College Board’ வழங்கிய மாதிரித் தேர்வுகள் மற்றும் ‘Khan Academy’…
கடந்த காலங்களில் ஒன்றாக கூட்டணியில் இருந்ததை நினைத்து, காங்கிரஸ் மீது விமர்சனங்கள் வைப்பதை திமுக தவிர்க்க வேண்டும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். தமிழர் தந்தை சி.பி.ஆதித்தனாரின் 45-வது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள ஆதித்தனார் சிலைக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரும் ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய திருநாவுக்கரசர், ஆதித்தனாரின் பெருமைகளை எடுத்துரைத்தார். அப்போது, திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது தொடர்பான கேள்விக்கு, கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியும் திமுகவும் தமிழ்நாட்டிலும் சரி அகில இந்திய அளவிலும் சரி ஒரே கூட்டணியில் இருந்து ஒன்றாக செயல்பட்டு கொண்டுள்ளோம். காங்கிரஸ் அமைச்சரவையில் திமுக உறுப்பினர்களும் பணியாற்றி உள்ளார்கள். சட்டமன்ற நாடாளுமன்றங்களிலும் உள்ளாட்சிகளிலும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு இருக்கிறார்கள். இன்றைக்கு அரசியல் ரீதியாகப் பிரிந்து வேறு…