Author: Editor TN Talks

உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த அரசு செயல்படும் என வெளிநாடு வாழ் தமிழர்  நலத்துறை அமைச்சர் தென்னரசு தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சருமான, எஸ் பி கே தென்னரசு இன்று காஞ்சிபுரம் வருகை தந்தார். அவருக்கு கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து  பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்ற அமைச்சர் தென்னரசு, அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து ரயில்வே சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை, பூக்கடைசத்திரம் அருகே அமைந்துள்ள அழகுமுத்துக்கோன் சிலை மற்றும் கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு  மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் தென்னரசு சந்தித்துப் பேசினார். மக்கள் தலைவர் மீதும் எங்கள் மீதும் அளித்துள்ள நம்பிக்கையை 100 விழுக்காடு காப்பாற்றுவோம்.…

Read More

கோவை அருகே பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி, கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். கோவை சூலூர் பகுதியில் வசித்து வந்த 10 வயது சிறுமி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரெனக் காணாமல் போனார். இதைத்தொடர்ந்து, குடும்பத்தினர் அவரைத் தேடியநிலையில், கண்ணம்பாளையம் ஏரிக்கரைப் பகுதியில் சிறுமி கொலை செய்யப்பட்டு உயிரிழந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவம் மக்களிடையே பெரும் சோகத்தையும், குற்றவாளிகள் மீது கடும் கோபத்தையும் ஏற்படுத்தியள்ளது. சிறுமி கொலை தொடர்பாக கார்த்தி மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கார்த்திக்கு ஜூன் 5ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கைதான போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றதால், கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டதன் காரணமாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கார்த்தி சிகிச்சைப் பெற்று வருகிறார். மற்றொரு நபரான…

Read More

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பதை ஒரு வார காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் மிகத் தீவிரமாகி வருகிறது. சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிப் பதிவாகி வருவதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், நிலவி வரும் வெப்ப அலை காரணமாக மதிய நேரங்களில் மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு மருத்துவத் துறையினரும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகைய அசாதாரணமான சூழலில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கடும் வெப்ப நிலையை சிறுவர்,…

Read More

தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லை என்றும் முறைகேடுகள் களையப்பட்டு வருவதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு எதுவும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறிய அமைச்சர், தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்படும் மின்தடைகளைச் சரிசெய்ய அதிகாரிகளுக்குத் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் நிர்மல் குமார் குறிப்பிட்டார். முந்தைய ஆட்சியின் போது மின்சாரத் துறையில் நடைபெற்ற டெண்டர் மற்றும் மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அவற்றைக் களைய தவெக அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்மாற்றிகள் 13 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது போன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் அமைச்சர் நிர்மல் குமார் கூறினார். மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்தக் கடன் சுமை 2.5 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நிர்வாகச் சீர்திருத்தங்கள் மூலம் இந்த நிதிச் சுமையைச் சீரமைப்பதே தவெக…

Read More

கோவை அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. கோவை சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி காணாமல் போனார். போலீசில் புகார் அளிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தநிலையில், மர்மமான முறையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிறுமி கொலை சம்பவம் தொடர்பாக கார்த்தி மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தநிலையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்குப் பிறகு, சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் உடலுக்கு உறவினர்கள், பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் அஞ்சலி செலுத்தி காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது. இறுதிச் சடங்களுக்குப் பிறகு சிறுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை…

Read More

வெள்ளை மாளிகைக்கு வருகை தர வேண்டுமென்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சார்பாக பிரதமர் மோடிக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அழைப்பு விடுத்தார். நான்கு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று (மே 23) இந்தியா வந்தார். டெல்லியில் பிரதமர் மோடியைச் அவர் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியா – அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய மூலோபாயக் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி, மார்கோ ரூபியோ இருவரும் விவாதித்தனர். பிரதமர் மோடியை விரைவில் அமெரிக்கா வருமாறு அதிபர் டிரம்ப் சார்பில் மார்கோ ரூபியோ அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்தார். மத்திய கிழக்கு ஆசியப் பகுதியில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும்,…

Read More

தவெக அமைச்சரவையில் இணைந்ததில் பதவி ஆசை காரணம் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்படுவதைத் தவிர்க்கவும், மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கவும் விசிக, தவெக தலைமையிலான அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மக்கள் ஒரு கூட்டணி ஆட்சியை விரும்புவதை உணர்த்தியதாக அவர் குறிப்பிட்டார். மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்த போது, ஜனநாயகச் சூழலைப் பாதுகாக்கவும், குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தவிர்க்கவும் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்ததாக திருமாவளவன் கூறினார். இந்த முக்கிய முடிவு இடதுசாரித் தோழமை கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்டதாகவும், இதுகுறித்து திமுக தலைமைக்கும் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துக்களோடு, ஆதரவோடு, இசைவோடு தான் தவெகவுக்கு ஆதரவு என்ற…

Read More

மாதவன் நடிக்கும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழில்துறை முன்னோடியான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. கிருஷ்ணகுமார், ராம குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், இந்தப் படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மாதவனுடன் சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. தமிழகத்தில் ஏஜிஎஸ் சினிமா, கேரளாவில் ஊர்வசி தியேட்டர்ஸ், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஸ்பிரிட் மீடியா மற்றும் வெளிநாடுகளில் ஏபி இண்டர்நேஷனல் நிறுவனங்கள் இப்படத்தை விநியோகம் செய்கின்றன. ‘ராக்கெட்டரி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு…

Read More

ஜூன் மாதம் 10 மாநிலங்களில் நடைபெற உள்ள 26 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலில் பாஜகவின் கூட்டணி பெற்றுள்ள இடங்களின் எண்ணிக்கை குறையும் என தெரிகிறது. 10 மாநிலங்களில் காலியாக உள்ள 26 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூன் 18ம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் பதவிக்காலம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுடன் முடிவடைவதால் இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போது இந்த 26 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 18 இடங்களைக் கொண்டுள்ளது. நடைபெற உள்ள தேர்தலில் இந்த எண்ணிக்கை 17 ஆகக் குறையும் என்று தெரிகிறது. தேர்தல் முடிவுகளின்படி எதிர்பார்க்கப்படும் இடங்கள்: பாஜக கூட்டணி: 17 இடங்கள் (தற்போது 18) காங்கிரஸ்: 5 இடங்கள் (தற்போது 4) ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா: 2 இடங்கள் (தற்போது 1) தவெக (தமிழக…

Read More

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி கு.ப.கிருஷ்ணன் நியமித்து, முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஏழை எளிய மக்களின் வாழ்விட மேம்பாட்டிற்காகச் செயல்பட்டு வரும் ஒரு முக்கிய அமைப்பாகும். குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குப் பாதுகாப்பான அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்குதல், ஆபத்தான அல்லது தகுதியற்ற உறைவிடங்களில் வசிப்பவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மறுகுடியமர்வு செய்தல், நகர்ப் புறங்களில் வீட்டு வசதி தொடர்பான பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்ற முக்கியப் பணிகள் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்த முக்கியப் பொறுப்பில் தவெக நிர்வாகி கு.ப.கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், தவெக சார்பில் லால்குடி தொகுதியில் கு.ப.கிருஷ்ணன் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸிடம் 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More