Author: Editor TN Talks
எங்களுக்கு நிதி வேண்டாம்..! நீதி தான் வேண்டும்..! கோவை சிறுமியின் தயார் கதறல்..!”எனக்கு நிதி வேண்டாம்… என் குழந்தைக்கு நீதி வேண்டும்” என கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் தாயார் பவித்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவை சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் தாயார் பவித்ரா செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதாவது “எனக்கே தெரியாமல் என் குழந்தையின் உடலை வாங்கிச் சென்று, என் சம்மதம் இல்லாமல் எரித்துள்ளனர். உடலை வாங்க என்னை அனுமதிக்கவில்லை. பிரேத பரிசோதனை முடிந்து உடலை ஒப்படைத்ததும் எனக்கு தெரியாது. உரிய தண்டனை கிடைத்த பிறகே உடலை வாங்குவேன் என்று தெரிவித்திருந்தேன். ஆனால், எனக்கே தெரியாமல் என் கணவரிடம் கையெழுத்து வாங்கி உடலை எடுத்துச் சென்றுள்ளனர். என் குழந்தையின் உடலை என் கண்ணில்கூட காட்டவில்லை” என்று குற்றம்சாட்டினார். மேலும், “யார் மீது குற்றம் என கண்டுபிடிக்க குழந்தையின் உடல் இல்லை.…
திருச்சி அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் எபோலா வைரஸ் சிகிச்சைக்காக சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் பரவும் எபோலா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் உத்தரவின்படி, அனைத்து சர்வதேச விமான நிலையங்களில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. காய்ச்சல், சோர்வு, தலைவலி, தசைவலி, வாந்தி, வயிற்று போக்கு, காரணமில்லாத ரத்த போக்கு. தொண்டை வலி ஆகிய அறிகுறிகளுடன் இருப்பவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு வார்டில் 21 நாட்கள் தனிப்படுத்தி சிகிச்சை அளிக்கும் பணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற அறிகுறிகளுடன் யாரும் வெளிநாடுகளில் இருந்து வருகின்றனரா? என கண்டறிந்து பாதிப்பு இருந்தால். உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கான தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பரவல்…
மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 5-ம் தேதி வரை சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்திருந்தனர். அவ்வாறு நடைபெறும் சித்திரை திருவிழாவில் உள்ளூரை சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக சிறுவன் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதுவும் மீனாட்சி அம்மன் கோயிலில் பார்க்கிங் அருகே 16 வயது சிறுவன் குபேந்திரன் என்பவர் நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில்,…
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி, இந்திய வனப் பணி முதல்நிலைத் தேர்வு 2026 உட்பட, குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வு 2026- இன்று (24.05.2026) நாடு முழுவதும் உள்ள 83 நகரங்களில் 2,072 தேர்வு மையங்களில் நடத்தியது. தற்காலிகத் தரவுகளின்படி, இத்தேர்விற்கு விண்ணப்பித்திருந்த மொத்தம் 8,19,732 தேர்வர்களில், ஏறக்குறைய 5.49 லட்சம் தேர்வர்கள், அதாவது சுமார் 67 சதவீதம் பேர், தேர்வில் பங்கேற்றனர். முந்தைய ஆண்டான 2025-ல் இத்தேர்விற்கு விண்ணப்பித்திருந்த மொத்தம் சுமார் 9.5 லட்சம் தேர்வர்களில், ஏறத்தாழ 61 சதவீதம் பேர், அதாவது சுமார் 5.8 லட்சம் தேர்வர்கள், தேர்வில் பங்கேற்றிருந்தனர். ஆள்மாறாட்டத்தைத் தடுக்கவும், தேர்வு செயல்முறையின் நேர்மையை வலுப்படுத்தவும், இந்த ஆண்டு தேர்வாணையம் முதல் முறையாக தேர்வு மையங்களில் தேர்வர்களின் நிகழ்நேர முகச் சரிபார்ப்பு நடைமுறையை அறிமுகப்படுத்தியது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியுடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, அனைத்து 2,072 தேர்வு மையங்களிலும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது. இதன் 100% வெற்றியானது, ஆணையத்தின் தேர்வு செயல்முறைகளில் ஒரு பெரிய முன்னேற்றப் படியாகும். தேர்வு சுமூகமாக நடத்தப்பட்டதாகத் தெரிவித்த யுபிஎஸ்சி தலைவர் டாக்டர் அஜய் குமார், இந்தத் தேர்வைச் நடத்துவதற்காக அயராது உழைத்த யுபிஎஸ்சி குழுவினர், தேசிய மின்-ஆளுகை பிரிவு, தேசிய தகவல் மையம் ஆகியோரின் முயற்சிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். மேலும், முக சரிபார்ப்பு முறையைச் செயல்படுத்துவது…
பெண்கள் பாதுகாப்பில் சீர்குலைவு; தவெக மற்றொரு திமுக – எடப்பாடி பழனிசாமி சாடல் பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில், மற்றுமொரு திமுக ஆட்சியாகவே தவெக ஆட்சி உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம்மாவட்டம்மரக்காணம்அருகே 11 வயதுசிறுமிபாலியல்வன்கொடுமைக்குஆளாகியுள்ளதாகவரும்செய்திஅதிர்ச்சிஅளிப்பதாகக் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, பெண்கள்பாதுகாப்பைசீர்குலைப்பதில்மற்றுமொருதிமுகஆட்சியாகவேஇன்றையபொய்க்கால்குதிரைஆட்சிஇருக்கிறதோ? என்றஅச்சம்தமிழகமக்களிடையே, குறிப்பாகபெண்களிடையேஎழத்தொடங்கிவிட்டதுஎனக் குற்றம்சாற்றியுள்ளார். இன்றையமுதல்வரின்கூற்றுப்படியேகேட்கப்போனால், “தங்களதுகல்லாப்பெட்டிகூட்டணியைத்தக்கவைப்பதில்மட்டுமேமுழுகவனத்தையும்செலுத்தும்முதலமைச்சர்அவர்களே, தமிழகத்தில்பெண்களுக்கும்பெண்குழந்தைகளுக்குமானபாதுகாப்புஎங்கே?” என கேள்வி எழுப்பியுள்ளார். சிறுமிபாலியல்வழக்கில்கைதுசெய்யப்பட்டுள்ளகுற்றவாளிமீதுகடுமையானசட்டநடவடிக்கைஎடுத்திடவும், தேர்தல்பிரச்சாரத்தின்போதுபேசியவசனங்களைமறந்திருந்தால், அவற்றைமீண்டும்போட்டுப்பார்த்துநினைவுகூர்ந்து, பெண்கள்பாதுகாப்பில்கவனம்செலுத்துமாறுமுதலமைச்சரை வலியுறுத்துவதாகவும் எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கோவையில் சிறுமி கொலையான நிகழ்வின் சோகம் அடங்கும் முன்பே மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள பதிவில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த வண்டிபாளையம் பகுதியில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. குழந்தை என்றும் பாராமல் இத்தகைய செயல்களில் மனித மிருகங்கள் ஈடுபடுவதை மன்னிக்க முடியாது. கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட பதட்டம் விலகும் முன்பே நிகழ்ந்துள்ள இந்தக் கொடுமை குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் அரசு கூடுதல் கவனமும், அக்கறையும் காட்ட வேண்டும் என வலியுறுத்துவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…
தமிழக காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து 28 தொகுதிகளில் களம் கண்ட காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளை வென்றது. தவெகவுக்கு 108 எம்.எல்.ஏக்கள் கிடைத்து, பெரும்பான்மைக்கான ஆதரவை விஜய் தேடிய நிலையில், கூட்டணித் தலைமையிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், ஓடிச் சென்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விஜய்க்கு தனது ஆதரவை அளித்தது. அதற்கு பிரதியுபகாரமாக, காங்கிரஸுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் இந்தப் போக்கை திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. 20 ஆண்டுகளாகத் தூக்கிச் சுமந்த நம்மிடம் சொல்லிக் கொள்ளாமலேயே வெளியேறிய நம்பிக்கைத் துரோகி காங்கிரஸ் என உதயநிதி, திமுக இளைஞரணிக் கூட்டத்தில் சாடியிருந்தார். இதற்கு காங்கிரஸ் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுகவும் தன்பங்குக்கு வசைபாடத் தொடங்கியிருக்கிறது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான இன்பதுரை, தமிழக காங்கிரஸ் என்பது ஒரு…
கர்நாடகாவில் சிப்பி எடுப்பதற்காக ஆற்றுக்குள் சென்றவர்களில் 10 பேர் பரிதாபமாக மூழ்கி உயிரிந்துள்ளனர். உத்தரகன்னடா மாவட்டத்த்ல் பத்கல் பகுதியருகே உள்ள வெங்கடபுரா ஆற்றில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிப்பி மட்டும் சங்கு எடுப்பது வழக்கம். அவற்றை உணவுக்காகம் விற்பனை செய்தும் தங்கள் வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று, வெங்கடாபுரம் ஆற்றில் 14 பேர் சிப்பி எடுக்கச் சென்றுள்ளனர். அவர்கள் மும்முரமாக சிப்பிகளையும் சங்குகளையும் ஆற்றுக்குள் மூழ்கி சேகரித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் நீரோட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தாங்கள் சேகரித்த சிப்பிகளையும், சங்குகளையும் எடுத்தபடி அவசர அவசரமாக ஆற்றில் இருந்து வெளியேற முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் நீரோட்டம் அதிகமாகி நீர் மட்டம் உயர்ந்ததால், ஆற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தள்ளாடியுள்ளனர். இதனால், கரையை அடைவதற்கு முன்னதாக அவர்கள் ஆற்று நீரில் இழத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்ததோடு, காப்பாற்றவும் முயன்றுள்ளனர்.…
தனிச்சின்ன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னணி குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் விளக்கமளித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சியின் கூட்டத்தில், இனி வரும் தேர்தல்களில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது திமுக கூட்டணியில் இருந்து மமக விலகுகிறதா என்னும் ஐயப்பாட்டை எழுப்பியது. திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிட்ட காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. தனிச்சின்னத்தில் போட்டியிடாததால் மனித நேய மக்கள் கட்சியில் போட்டியிட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தவெக அமைச்சரவையில் இடம்பெற முடியாமல் போனதால்தான் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் பரபரப்பு எழுந்தது. இந்த நிலையில் தனிச்சின்ன தீர்மானத்தின் பின்னணி என்ன? என்பது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் மனந்திறந்த பிரகடனம் இதுதான் என கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த சில நாள்களாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் உவப்பில்லாத,…
அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் செயல்பட முடியாது எனக் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு வெளியேறியுள்ளார். விசிகவைச் சேர்ந்தவரும் செய்யூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான பனையூர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களையும் கோட்பாடுகளையும் தமிழ் சமூகத்தின் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித்தமிழர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களின் பங்கு அளப்பரியது. ஒடுக்கப்பட்ட மக்களை ஓர் அமைப்பாகத் திரட்டி, அவர்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்தியவர் அண்ணன் எழுச்சித்தமிழர். என்ன நெருக்கடி வந்த போதிலும், பதவிகளோ பரிசுகளோ ஆசை காட்டப்பட்ட போதும், ஏற்றுக் கொண்ட கொள்கையில் மலை போல் உறுதியாக இருப்பார் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே லட்சோப லட்சம் சிறுத்தைகளைப்போல் நானும் அவரை எனது தார்மீக தலைவராக ஏற்றுக்கொண்டு…