Author: Editor TN Talks

இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”தூத்துக்குடியில் நேற்று இளம் பெண் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனத்தில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டதுடன் அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் காவல் துறையினர் அவர்களை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. தவெக ஆட்சியில் அமர்வதற்கு முன்னர் நித்தமும் தமிழத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பெண்கள் பாதுகாப்பு பற்றி பக்கம் பக்கமாக கண்டன அறிக்கைகளை பதிவு செய்து விட்டு தற்போது ஆட்சிக்கு வந்த பின்னரும் இவர்களது ஆட்சியிலும் அதே நிலைமை தொடர்வது ஆட்சி நிர்வாகத்தின் தோல்வியையே எதிரொலிக்கிறது. முதல்வர் விஜய் அவர்கள் ஆட்சியிலாவது பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பியிருந்த தமிழக சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சியிருக்கிறது. துறையின் பெயர் தெரியாத அமைச்சர்களும், குற்ற வழக்கு பின்னணி கொண்ட அமைச்சர்களும் தவெக ஆட்சியில்…

Read More

ஈரோடு மாவட்டம் கள்ளியம்புதூர் டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்துவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.  ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த கள்ளியம்புதூரில் டாஸ்மாக் (கடை எண்  3935 ) செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையை அகற்றக் கோரி கடந்த அதிமுக, திமுக ஆட்சிகளிலும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். கடந்த மாதம் அப்போதிய முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். ச.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்றதும் குறிப்பிட்ட அளவிலான மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.  இந்த உத்தரவின் பேரில் ஏற்கனவே அப்பகுதியில் இருந்த இரண்டு டாஸ்மார்க் கடைகள் அகற்றப்பட்ட நிலையில்,வட்டாரப் பகுதியில் இந்த ஒரு மதுக்கடை மட்டும் உள்ளதால் அப்பகுதியில் உள்ள மது பிரியர்கள் ஏராளமானோர் இங்கு திரண்டு வருகின்றனராம். இந்த டாஸ்மாக் அருகிலேயே பேருந்து நிறுத்தம்,குறிப்பிட்ட தொலைவில் பள்ளிகள் என உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு…

Read More

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் கடந்த 15 நாட்களில் மட்டும் நிகழ்ந்துள்ள கொலை மற்றும் பாலியல் குற்றங்களைச் சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இது தமிழ்நாடா அல்லது உத்தரப்பிரதேசமா என கேள்வி எழுப்பியுள்ளார். சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி. கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது. முதலமைச்சரின்…

Read More

தமிழக வெற்றி கழக நிர்வாகிகளை கண்டித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், கணியம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாதம் மாதம் தங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் தர வேண்டும் என தமிழக வெற்றிக்கழக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து சட்டப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டும் செயல்களை உடனடியாக கைவிட வேண்டும், கடமை தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கணியம்பாடி பேருந்து நிலையம் எதிரே பொதுமக்கள் தொழிலாளர்கள் சமூக ஆர்வலர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தப்பாட்டம் செய்ய முயற்சி செய்தனர் இவர்களை தடுத்த நிறுத்தி காவல்துறையினர்…

Read More

எங்களுக்கு நிதி வேண்டாம்..! நீதி தான் வேண்டும்..! கோவை சிறுமியின் தயார் கதறல்..!”எனக்கு நிதி வேண்டாம்… என் குழந்தைக்கு நீதி வேண்டும்” என கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் தாயார் பவித்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவை சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் தாயார் பவித்ரா செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதாவது “எனக்கே தெரியாமல் என் குழந்தையின் உடலை வாங்கிச் சென்று, என் சம்மதம் இல்லாமல் எரித்துள்ளனர். உடலை வாங்க என்னை அனுமதிக்கவில்லை. பிரேத பரிசோதனை முடிந்து உடலை ஒப்படைத்ததும் எனக்கு தெரியாது. உரிய தண்டனை கிடைத்த பிறகே உடலை வாங்குவேன் என்று தெரிவித்திருந்தேன். ஆனால், எனக்கே தெரியாமல் என் கணவரிடம் கையெழுத்து வாங்கி உடலை எடுத்துச் சென்றுள்ளனர். என் குழந்தையின் உடலை என் கண்ணில்கூட காட்டவில்லை” என்று குற்றம்சாட்டினார். மேலும், “யார் மீது குற்றம் என கண்டுபிடிக்க குழந்தையின் உடல் இல்லை.…

Read More

திருச்சி அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் எபோலா வைரஸ் சிகிச்சைக்காக சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் பரவும் எபோலா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் உத்தரவின்படி, அனைத்து சர்வதேச விமான நிலையங்களில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. காய்ச்சல், சோர்வு, தலைவலி, தசைவலி, வாந்தி, வயிற்று போக்கு, காரணமில்லாத ரத்த போக்கு. தொண்டை வலி ஆகிய அறிகுறிகளுடன் இருப்பவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு வார்டில் 21 நாட்கள் தனிப்படுத்தி சிகிச்சை அளிக்கும் பணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற அறிகுறிகளுடன் யாரும் வெளிநாடுகளில் இருந்து வருகின்றனரா? என கண்டறிந்து பாதிப்பு இருந்தால். உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கான தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பரவல்…

Read More

மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 5-ம் தேதி வரை சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்திருந்தனர். அவ்வாறு நடைபெறும் சித்திரை திருவிழாவில் உள்ளூரை சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக சிறுவன் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதுவும் மீனாட்சி அம்மன் கோயிலில் பார்க்கிங் அருகே 16 வயது சிறுவன் குபேந்திரன் என்பவர் நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில்,…

Read More

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி, இந்திய வனப் பணி முதல்நிலைத் தேர்வு 2026 உட்பட, குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வு 2026-  இன்று (24.05.2026) நாடு முழுவதும் உள்ள 83 நகரங்களில் 2,072 தேர்வு மையங்களில் நடத்தியது. தற்காலிகத் தரவுகளின்படி, இத்தேர்விற்கு விண்ணப்பித்திருந்த மொத்தம் 8,19,732 தேர்வர்களில், ஏறக்குறைய 5.49 லட்சம் தேர்வர்கள், அதாவது சுமார் 67 சதவீதம் பேர், தேர்வில் பங்கேற்றனர். முந்தைய ஆண்டான 2025-ல் இத்தேர்விற்கு விண்ணப்பித்திருந்த மொத்தம் சுமார் 9.5 லட்சம் தேர்வர்களில், ஏறத்தாழ 61 சதவீதம் பேர், அதாவது சுமார் 5.8 லட்சம் தேர்வர்கள், தேர்வில் பங்கேற்றிருந்தனர். ஆள்மாறாட்டத்தைத் தடுக்கவும், தேர்வு செயல்முறையின் நேர்மையை வலுப்படுத்தவும், இந்த ஆண்டு தேர்வாணையம் முதல் முறையாக தேர்வு மையங்களில் தேர்வர்களின் நிகழ்நேர முகச் சரிபார்ப்பு நடைமுறையை அறிமுகப்படுத்தியது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியுடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, அனைத்து 2,072 தேர்வு மையங்களிலும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது. இதன் 100% வெற்றியானது, ஆணையத்தின் தேர்வு செயல்முறைகளில் ஒரு பெரிய முன்னேற்றப் படியாகும். தேர்வு சுமூகமாக நடத்தப்பட்டதாகத் தெரிவித்த யுபிஎஸ்சி தலைவர் டாக்டர் அஜய் குமார், இந்தத் தேர்வைச் நடத்துவதற்காக அயராது உழைத்த யுபிஎஸ்சி குழுவினர், தேசிய மின்-ஆளுகை பிரிவு, தேசிய தகவல் மையம் ஆகியோரின் முயற்சிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். மேலும், முக சரிபார்ப்பு முறையைச் செயல்படுத்துவது…

Read More

பெண்கள் பாதுகாப்பில் சீர்குலைவு; தவெக மற்றொரு திமுக – எடப்பாடி பழனிசாமி சாடல் பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில், மற்றுமொரு திமுக ஆட்சியாகவே தவெக ஆட்சி உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம்மாவட்டம்மரக்காணம்அருகே 11 வயதுசிறுமிபாலியல்வன்கொடுமைக்குஆளாகியுள்ளதாகவரும்செய்திஅதிர்ச்சிஅளிப்பதாகக் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, பெண்கள்பாதுகாப்பைசீர்குலைப்பதில்மற்றுமொருதிமுகஆட்சியாகவேஇன்றையபொய்க்கால்குதிரைஆட்சிஇருக்கிறதோ? என்றஅச்சம்தமிழகமக்களிடையே, குறிப்பாகபெண்களிடையேஎழத்தொடங்கிவிட்டதுஎனக் குற்றம்சாற்றியுள்ளார். இன்றையமுதல்வரின்கூற்றுப்படியேகேட்கப்போனால், “தங்களதுகல்லாப்பெட்டிகூட்டணியைத்தக்கவைப்பதில்மட்டுமேமுழுகவனத்தையும்செலுத்தும்முதலமைச்சர்அவர்களே, தமிழகத்தில்பெண்களுக்கும்பெண்குழந்தைகளுக்குமானபாதுகாப்புஎங்கே?” என கேள்வி எழுப்பியுள்ளார். சிறுமிபாலியல்வழக்கில்கைதுசெய்யப்பட்டுள்ளகுற்றவாளிமீதுகடுமையானசட்டநடவடிக்கைஎடுத்திடவும், தேர்தல்பிரச்சாரத்தின்போதுபேசியவசனங்களைமறந்திருந்தால், அவற்றைமீண்டும்போட்டுப்பார்த்துநினைவுகூர்ந்து, பெண்கள்பாதுகாப்பில்கவனம்செலுத்துமாறுமுதலமைச்சரை வலியுறுத்துவதாகவும் எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Read More

கோவையில் சிறுமி கொலையான நிகழ்வின் சோகம் அடங்கும் முன்பே மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள பதிவில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த வண்டிபாளையம் பகுதியில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. குழந்தை என்றும் பாராமல் இத்தகைய செயல்களில் மனித மிருகங்கள் ஈடுபடுவதை மன்னிக்க முடியாது. கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட பதட்டம் விலகும் முன்பே நிகழ்ந்துள்ள இந்தக் கொடுமை குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் அரசு கூடுதல் கவனமும், அக்கறையும் காட்ட வேண்டும் என வலியுறுத்துவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…

Read More