Author: Editor TN Talks

தமிழக அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஷாஜஹானுக்கு சிறுபான்மையினர் நலத்துறையும், வன்னியரசுக்கு சமூக நீதி நலத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான ச.ஜோசப் விஜய் தலைமையில் புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. மே 21ஆம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருவர் உள்பட 23 அமைச்சர்கள் பதவியேற்றதுடன், அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 35 அமைச்சர்களில், 33 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு அமைச்சர் பதவியினை ஏற்றுக் கொள்ள தவெக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை அவர்கள் ஏற்றுக் கொண்ட நிலையில்,  இன்று காலை முஸ்லிம் லீக்கின் ஷாஜஹான் எம்.எல்.ஏவும், விசிகவின் வன்னியரசு எம்.எல்.ஏவும் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து ஒதுக்கப்படாம் இருந்த சிறுபான்மையினர் நலத்துறையும், ஆதிதிராவிடர் நலத்துறையும் இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இருவரும் பதவியேற்ற அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் இருவருக்குமான இலாகா…

Read More

தமிழக அமைச்சரவையில் இன்று மேலும் இரண்டு எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர்களாக ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழக முதலமைச்சராக ச.ஜோசப் விஜய் பதவியேற்ற அன்று அவருடன் மேலும் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், சி.டி.ஆர். நிர்மல் குமார்,  வெங்கடரமணன், ராஜ் மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேரும் அமைச்சர்களானார்கள். இதைத் தொடர்ந்து மே 21ஆம் தேதி  தமிழக அமைச்சரவை விஸ்தரிக்கபட்டது. தவெகவைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏக்கள், தவெகவுக்கு ஆதரவு வழங்கிய காங்கிரஸை சேர்ந்த ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகிய 2 எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 21 பேருக்கு ஆளுநர் அர்லேகர் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவளித்த விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி தரப்படும் எனவும், அவர்கள் தவெக அமைச்சரவையில் இணைய வேண்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை இருகட்சிகளும் ஏற்றுக் கொண்ட நிலையில், முஸ்லிம் லீக்…

Read More

சென்னை மாநகர காவல் ஆணையராக இலக்கிய ஆர்வலரான அமல்ராஜ் ஐ.பி.எஸ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 1996-ஆம் ஆண்டு ஐபிஎஸ் தொகுதியைச் சேர்ந்த அதிகாரியான A. Amalraj, தமிழக அரசின் உத்தரவின்படி வெள்ளிக்கிழமை காலை சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றார். காலை சுமார் 8.30 மணியளவில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள தனது அறையில் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் கையெழுத்திட்டு அவர் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் மூத்த காவல் அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக காவல் துறையினரின் மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற உடனேயே, A. Amalraj கிண்டியில் உள்ள Raj Bhavan சென்றார். அங்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியின் எம்எல்ஏ ஷாஜகான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) எம்எல்ஏ வன்னி அரசு ஆகியோரின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பணி வரலாறு சென்னை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ், கடந்த…

Read More

இஸ்லாமியர்களின் பக்ரித் பண்டிகை நெருங்கும் நிலையில்,  ராணிப்பேட்டை வார சந்தையில் ரூ.3 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை நடந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மற்றும் பக்ரீத் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுவதுண்டு. ரமலான் என்பது ஈகைத் திருநாள் எனவும், பக்ரீத் பண்டிகை தியாகத் திருநாள் எனவும் கூறப்படுகிறது. இறைத்தூதர் இப்ராஹிம், தனது மகன் இஸ்மாயிலை, இறைவனுக்காக அறுத்துப் பலியிட முற்பட்ட நிகழ்வாக பக்ரீத் பண்டிகை என்னும் தியாகத் திருநாள் கொண்டாடப் படுகிறது. இஸ்லாமியர்களின் துல்ஹஜ் மாதம் 10ஆம் நாளில் பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிட்டு, அதன் இறைச்சியை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் வழங்குவார்கள். தமிழ்நாட்டில் வரும் 28ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இதற்காக வாரச் சந்தைகளில் ஆடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டை நகராட்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுவதுண்டு. இன்று காலை தொடங்கிய வாரச்சந்தையில், பக்ரீத்…

Read More

தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் சுங்கக்கட்டணம் உயரும் நிலையில், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலை விதிகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணங்கள் 3% முதல் 5% வரை வருடாந்திர அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) 60-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த சுங்கச் சாவடிகளில் கடந்த ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்த்தப்பட்டது. வாகனங்களின் வகையைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.100 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ300-லிருந்து ரூ350 வரையிலும் அதிகரிக்கப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகள் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்தக் கட்டண உயர்வு சரக்கு வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் கூடுதல் சுமையை ஏற்படுத்துவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கும் இது வழிவகுக்கும் என லாரி உரிமையாளர்களும் வாகன ஓட்டிகளும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நாளை முதல் மீண்டும் தமிழ்நாட்டில்…

Read More

திமுக கூட்டணிக் கட்சிகளான விசிகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தவெக அமைச்சரவையில் பங்கேற்பதை திமுக விரும்பவில்லை என்பதை திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் பதிவு அம்பலமாக்கியுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன், திமுக கூட்டணிக்கு எதிராகக் களம் கண்ட தமிழக வெற்றிக் களம் ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ச.ஜோசப் விஜய், தனது அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளை இணைத்துக் கொண்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியானதுமே, திமுகவுடன் சொல்லிக் கொள்ளாமலேயே காங்கிரஸ் ஓடோடிச் சென்று தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. மற்ற கட்சிகள் திமுகவுடன் நடத்திய ஆலோசனைக்கு பின்னரே தங்களின் ஆதரவைத் தெரிவித்தன. அதுவும் நிபந்தனையற்ற ஆதரவை வெளியில் இருந்தே தருவதாக அறிவித்தன. ஆயினும் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என முதல்வர் ஜோசப்…

Read More

முதலமைச்சரின் ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி, மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக முதலமைச்சராக ச.ஜோசப் விஜய் பதவியேற்றபின்னர் அவருக்கு  செந்தில்குமார், லட்சுமி பிரியா, அண்ணாதுரை, விஷ்ணு ஆகியோர் தனிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவரவர் கவனிக்கும் துறைகளும் அண்மையில் ஒதுக்கப்பட்டன. இதனிடையே முதலமைச்சரின் அரசியல் விவகாரங்களை கவனிப்பதற்காக, அவரது ஆஸ்தான ஜோதிடரான ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டார். இதற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலாத விஜயகாந்த் எம்.எல்.ஏ சட்டப்பேரவையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார். விஜயின் ராஜகுரு என்றால் தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ளட்டும் எனவும் சாடினார். இதே போல் அரசியல் களத்தில் பலரும் இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அவரது நியமனம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் சிறப்பு ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஜான் ஆரோக்கியசாமி அரசியல் வியூக வகுப்பாளர்…

Read More

தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கு வகிப்பதாக திருமாவளவன் அறிவித்துள்ளார். விசிக சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசின் பெயரை அமைச்சரவைக்கு திருமாவளவன் பரிந்துரைத்துள்ளார். திமுக கூட்டணியில் எங்களின் நிலைப்பாடு குறித்து ஓரிரு நாளில் அறிவிக்க உள்ளதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள தனது இல்லத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விசிக அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று வெளிப்படையான அழைப்பை ஆதவ் அர்ஜுனா முன் வைத்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற வெளிப்படையான அழைப்பை அடுத்து, எனது கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்களோடு கலந்து ஆய்வு செய்தோம். பெரும்பான்மையினர் அடிப்படையில் அமைச்சரவையில் கலந்து…

Read More

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு இந்தியாவின் பாரம்பரிய கைவினைப் பொருட்களை பரிசாக வழங்கியது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 15ம் தேதி தொடங்கிய ஐந்து நாள் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் போது, பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்தபோது இந்தியாவின் பாரம்பரிய கலை, கைவினைப் பொருட்களை பரிசாக வழங்கியது உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அவர் மேற்கொண்ட இந்த பயணம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதோடு, இந்தியாவின் வளமான கலாசார மரபுகளை உலக அரங்கில் மீண்டும் ஒளிரச் செய்துள்ளது. நார்வேக்கு அளிக்கப்பட்ட பரிசுகள் சுற்றுப்பயணத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரேவை சந்தித்தபோது, சிக்கிமின் இயற்கை எழிலை பிரதிபலிக்கும் உலர்ந்த ஆர்க்கிட் மலர் ஓவியம் மற்றும் ஆர்க்கிட் வடிவிலான காகித எடைக்கற்களை மோடி பரிசளித்தார். கிழக்கு இமயமலையின் பல்லுயிர் வளத்தை…

Read More

இளைஞர்களால் இயக்கப்படும் ஒரு முக்கிய அரசியல் நையாண்டி இயக்கமாக உருவெடுத்துள்ளது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. இந்திய அரசியல் மற்றும் சமூக ஊடக உலகை புயலென சுழற்றிய ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) இயக்கத்தின் எக்ஸ் (ட்விட்டர்) கணக்கு இன்று இந்தியாவில் முடக்கப்பட்டது. கடந்த இரு நாட்களாக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நையாண்டி இயக்கம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்தின் “கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள்” என்ற கருத்துக்கு எதிர்ப்பாக உருவானது. இந்தக் கருத்து இளைஞர்களை இலக்கு வைத்ததாக விமர்சிக்கப்பட்ட நிலையில், பாஸ்டன் யுனிவர்சிட்டி மாணவர் அபிஜித் தீப்கே தலைமையில் மே 16 அன்று இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இயக்கத்தின் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள் அபிஜித் தீப்கே புதிய கணக்கைத் தொடங்கியுள்ளார். “கரப்பான் பூச்சி திரும்பிவிட்டது” (Cockroach is Back) என்ற பெயரில் உருவான இந்தப் புதிய கணக்கு, “கரப்பான்பூச்சிகள்…

Read More