Close Menu
    What's Hot

    பழனி கோவில் நில விவகாரத்தில் அதிரடி: 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைப்பு..!!

    6வது நாளாக தீவிரமடையும் அமெரிக்க தாக்குதல்.. ஈரான் மீது இடைவிடாத குண்டுவீச்சு!

    ஆந்திராவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா..!! ஒரே மாதத்தில் 4 உயிரிழப்புகள்..!! அதிர்ச்சி தகவல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சமூக நீதி பேசிய திராவிட மாடல் சிந்திக்காததை செயல்படுத்திய ச.ஜோசப் விஜய்
    Featured

    சமூக நீதி பேசிய திராவிட மாடல் சிந்திக்காததை செயல்படுத்திய ச.ஜோசப் விஜய்

    Editor TN TalksBy Editor TN TalksMay 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஷாஜஹானுக்கு சிறுபான்மையினர் நலத்துறையும், வன்னியரசுக்கு சமூக நீதி நலத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான ச.ஜோசப் விஜய் தலைமையில் புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. மே 21ஆம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருவர் உள்பட 23 அமைச்சர்கள் பதவியேற்றதுடன், அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 35 அமைச்சர்களில், 33 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு அமைச்சர் பதவியினை ஏற்றுக் கொள்ள தவெக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதனை அவர்கள் ஏற்றுக் கொண்ட நிலையில்,  இன்று காலை முஸ்லிம் லீக்கின் ஷாஜஹான் எம்.எல்.ஏவும், விசிகவின் வன்னியரசு எம்.எல்.ஏவும் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

    இதையடுத்து ஒதுக்கப்படாம் இருந்த சிறுபான்மையினர் நலத்துறையும், ஆதிதிராவிடர் நலத்துறையும் இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் எனக் கூறப்பட்டது.

    இருவரும் பதவியேற்ற அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் இருவருக்குமான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி, ஷாஜஹானுக்கு சிறுபான்மையினர் நலத்துறையும், வன்னியரசுவுக்கு சமூக நீதி நலத்துறையும் வழங்கி ஆளுநர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியானது.

    இதுவரை சமூக நீதி நலத்துறை என தமிழக அமைச்சரவையில் இல்லையே என சந்தேகம் எழுந்த நிலையில், ஆதிதிராவிட நலத்துறையின் பெயர்தான் சமூக நீதி நலத்துறை என மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் அமைச்சராக இருப்பவர்கள் பிற்படுத்த மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்து வந்தனர்.  அதுமட்டுமின்றி துறையின் பெயரும் ஒரு சாதிய அடையாளத்தை தாங்கியதாகவே இருந்து வந்த நிலையில்தான், புதிதாகப் பொறுப்பேற்ற ச.ஜோசப் விஜய் அரசு அதனை மாற்றும் முயற்சியாக சமூக நீதி நலத்துறை என மாற்றி அமைத்துள்ளது.

    சமூக நீதிப் பேசி வந்த அரசுகள் கூட செய்யாத மாற்றத்தை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் செய்திருப்பதாக பல்வேறு தரப்பிலும் வரவேற்பு எழுந்துள்ளது.

    எம்.செய்யது

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமைச்சர்களாக பதவியேற்ற வன்னியரசு, ஷாஜகானுக்கு இலாகா ஒதுக்கீடு!
    Next Article அரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: த.வெ.க. நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்!
    Editor TN Talks

    Related Posts

    பழனி கோவில் நில விவகாரத்தில் அதிரடி: 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைப்பு..!!

    July 17, 2026

    6வது நாளாக தீவிரமடையும் அமெரிக்க தாக்குதல்.. ஈரான் மீது இடைவிடாத குண்டுவீச்சு!

    July 17, 2026

    ஆந்திராவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா..!! ஒரே மாதத்தில் 4 உயிரிழப்புகள்..!! அதிர்ச்சி தகவல்..!!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பழனி கோவில் நில விவகாரத்தில் அதிரடி: 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைப்பு..!!

    6வது நாளாக தீவிரமடையும் அமெரிக்க தாக்குதல்.. ஈரான் மீது இடைவிடாத குண்டுவீச்சு!

    ஆந்திராவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா..!! ஒரே மாதத்தில் 4 உயிரிழப்புகள்..!! அதிர்ச்சி தகவல்..!!

    புரி ரத யாத்திரை சோகம்.. 2 பேர் உயிரிழப்பு; கூட்ட நெரிசல் குறித்து ஒடிசா அரசு கூறியது என்ன?

    2வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து… தொடர் 1-1 என சமன்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.