Author: Editor TN Talks

எபோலா அச்சுறுத்தல் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து நேரடியாகவோ அல்லது பிற நாடுகள் வழியாகவோ டெல்லி வரும் அனைத்து பயணிகளுக்கும் தீவிர தெர்மல் ஸ்கிரீனிங் மற்றும் மருத்துவக் கண்காணிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் அடிப்படையில், இன்று டெல்லி விமான நிலையத்தில் இந்த அவசர வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. விமான நிலைய சுகாதாரப் பிரிவு இதற்கான எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எபோலா அறிகுறிகளான காய்ச்சல், உடல் பலவீனம், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, உடலில் காரணமின்றி ஏற்படும் ரத்தக்கசிவு போன்றவை இருந்தால், பயணிகள் குடியேற்ற (இம்மிகிரேஷன்) பிரிவுக்குச் செல்லும் முன்பே விமான நிலைய…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மக்களின் பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஏற்கனவே முதலமைச்சருடன் சேர்த்து 10 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சேலம் தெற்கு தொகுதியில் இருந்து போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்ற விஜய் தமிழன் பார்த்திபன், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள கிருஷ்ணா நகரில் இவர் வசித்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை விஜய் தொடங்கிய நிலையில் விஜய் தமிழன் பார்த்திபன் சேலம் மாவட்டச் செயலாளராக பணியாற்றி வருகிறார். சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பார்த்திபன், எதிர்த்து நின்ற வேட்பாளரை விட 33,369 வாக்குகள் அதிகம் பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது வெற்றி, உள்ளூர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அரசியல் பின்னணி இல்லாத பொதுமக்களில் இருந்து…

Read More

தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசியதாக பதிவான வழக்கில், அரசியல் விமர்சகர் பொன்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தவெக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் ஆதரவில் பெண் தொண்டர்கள் அளித்த பேட்டிகளை கண்டித்து பொன்ராஜ் தனது கருத்துகளை வெளியிட்டிருந்தார். இதை இழிவான கருத்துகள் எனக் கருதிய தவெக நிர்வாகிகள், முதலமைச்சர் விஜய் சார்பில் டிஜிபி அலுவலகம் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். மேலும், கடலூர் மாவட்ட தவெக செயலாளரும் அமைச்சருமான பி. ராஜ்குமார், கடலூர் புது நகர் காவல் நிலையத்தில் தனி புகார் அளித்தார். இந்தப் புகார்களின் அடிப்படையில் சென்னை சைபர் குற்றப்பிரிவு மற்றும் கடலூர் புது நகர் காவல் நிலையத்தில் பொன்ராஜுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக ஜாமீன் பெறும் வகையில் பொன்ராஜ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

Read More

தமிழக அரசியலில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிராமண சமூகத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. தமிழக அரசியலில் நீண்ட காலமாகக் குறைவாக இருந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மீண்டும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (தவெக) அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. வெங்கடரமணன் மற்றும் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ் ஆகிய இருவரும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக சட்டசபை வரலாற்றில் பிராமண சமூகத்தினர் முக்கிய பொறுப்புகளில் இருந்த காலகட்டங்கள் உண்டு. 1952-ம் ஆண்டு முதல் சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு சி. ராஜகோபாலாச்சாரி முதலமைச்சராகப் பதவி வகித்தார். கே. காமராஜ் தலைமையிலான அமைச்சரவையில் ஆர். வெங்கட்ராமன் அமைச்சராக இருந்தார். ஆனால் 1967-ல் தி.மு.க. ஆட்சி தொடங்கிய பிறகு இந்தப் பிரதிநிதித்துவம் பெருமளவு குறைந்தது. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த 1977 முதல்…

Read More

பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து திமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் மத்திய மாவட்ட செயலர் செல்வராஜ். திருப்பூர் திமுக மத்திய மாவட்ட செயலாளராகவும், திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய மூத்த தலைவர் செல்வராஜ், திமுகவிலிருந்து விலகுவதாகவும், தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கப் போவதாகவும் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது நீண்ட அரசியல் பயணத்தை நினைவுகூர்ந்தார். 1976ஆம் ஆண்டு தொழிற்சங்கத்தின் வழியே அரசியலுக்குள் நுழைந்த செல்வராஜ், பின்னர் திமுக நகர செயலாளராகவும், திருப்பூர் மேயராகவும், மாவட்ட செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்புகளை வகித்துள்ளார். கழகத்தின் பல்வேறு போராட்டங்கள், மக்கள் பிரச்சினைகளுக்கான குரல் கொடுப்புகள் என 50 ஆண்டுகளாக திமுகவுக்காக அயராது உழைத்த அவரது பங்களிப்பு கட்சியினரிடையே நன்கு அறியப்பட்டது. எனினும், சமீப காலமாக கட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அவருக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார். குறிப்பாக 2025 முதல், வெளி கட்சிகளிலிருந்து வந்த புதியவர்களுக்கு அதிக…

Read More

வன விலங்கு சரணாலயங்களில் திறந்தவெளி வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்ல கர்நாடக அரசு தடைவிதித்துள்ளது. கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற துபாரே யானை முகாம், காவேரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடம். மைசூர் தசரா யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் வரலாற்றுப் புகழ் கொண்ட இந்த முகாம், யானைகளுடன் நெருக்கமான அனுபவம் தேடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாகத் திகழ்கிறது. யானைகளுக்கு குளியல் கொடுப்பது, உணவளிப்பது, படகுப் பயணம் உள்ளிட்ட செயல்பாடுகள் சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. கோடை விடுமுறை காலம் என்பதால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த 33 வயதான துளசி என்பவர் குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு வந்திருந்தார். ஆற்றங்கரையில் நின்று யானைகள் குளிப்பாட்டப்படுவதை ஆர்வமுடன் கவனித்துக் கொண்டிருந்தபோது, திடீர் சம்பவம் அரங்கேறியது. வளர்ப்பு யானைகளான…

Read More

Gen Z தலைமுறை இன்று முதல் அதிகாரத்தை பழகப்போகிறது என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. கிண்டியில் அமைந்துள்ள மக்கள் மாளிகையில் இன்று புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் 23 புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் தேசிய கீதத்திற்குப் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமான பதிலளித்தார். “தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்து நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் ஒலிக்கும். இது நமது பண்பாட்டு அடையாளத்தைப் பிரதிபலிக்கும் முக்கியமான நடைமுறை” என்று அவர் வலியுறுத்தினார். வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்துடன் இணைந்து தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தது இளம் தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பதவியேற்ற புதிய அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடுகளும் உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளன.…

Read More

பிரதமர் மோடியை பாம்பாட்டியாக சித்தரித்து நார்வே நாட்டு நாளிதழ் கார்ட்டூன் வெளியிட்டது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நார்வே சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட ஒரு சம்பவம், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளுக்கு இடையே புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரபூர்வ பயணத்தின் போது நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய மோடி, பசுமை ஆற்றல், நீலப் பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய உடன்பாடுகளை எட்டினார். இந்தியா-நார்வே உறவுகள் ‘பசுமை மூலோபாய கூட்டணி’ என்ற உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டன. 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமரின் நார்வே வருகை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், பேட்டி முடிந்து இரு தலைவர்களும் வெளியேறும் போது, நார்வே பத்திரிகையாளர் ஹெல்லே லிங் (Helle Lyng) திடீரென குரல் எழுப்பினார். “இந்தியாவில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை என்ன? பிரதமர் மோடி ஊடகக் கேள்விகளுக்கு…

Read More

குற்றச்சாட்டுகள் காரணமாக மின்வாரியத் துறை அதிகாரிகள் இருவரை பணியிடை நீக்கம் செய்து எரிசக்தி வளத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சாட்டையை சுழற்றியிருக்கிறார். மாற்றத்தை எதிர்நோக்கி தவெகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்திய மக்களின் எண்ணங்களை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை தீவிரமாக செயலாக்கி வருகிறது. துறை ரீதியாக ஆலோசனைக் கூட்டங்களை முன்னெடுப்பதோடு இல்லாமல், முந்தைய ஆட்சியாளர்களிடம் இல்லாத வகையில் அரசு நிர்வாகத்தின் மீது சாட்டையை சுழற்றி அதனை வேகப்படுத்தி வருகிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய். அவரது அமைச்சரவை சகாக்களும், முதலமைச்சரின் வழியிலேயே துடிப்புடன் செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில்,  எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தி வருகிறார். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் சமீபத்திய ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் வழங்கியதில் வெளிப்படை தன்மை இல்லாமல், அவசர கதியில் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது…

Read More

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இன்று புதிதாக 21 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களில் ஒருவர் நடிகர் ஸ்ரீநாத். விஜய்யின் நீண்டகால நெருங்கிய நண்பரான இவர், பள்ளிக் காலத்தில் இருந்தே விஜய்யுடன் இருந்து வருகிறார். விஜய் கட்சி தொடங்கியது முதலே அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ஸ்ரீநாத் தவெக கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற்ற ஸ்ரீநாத் அமைச்சராகவும் பதவியேற்றார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீநாத், “ எனது தலைவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நாங்கள் அனைத்துத் தடைகளையும் உடைப்போம். நமது மக்கள் சந்தித்து வரும் அனைத்துப் பிரச்சினைகளையும் நான் சரிசெய்து, அவர்கள் அமைதியான சமூக வாழ்க்கையை வாழ்வதை உறுதி செய்வேன். மீனவர்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருப்பதையும் மற்றவர்களுக்கு எந்த இடையூறும் இன்றி அவர்கள் தங்கள்…

Read More