Author: Editor TN Talks
தமிழகக் கோவில்களில் பின்பற்றப்படும் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு என்ற பெயரில், 500 ரூபாய் வரை பணம் வசூலித்து, சிறப்பு கட்டண தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக, விஸ்வ இந்து பரிஷத் வட தமிழ்நாடு பிரிவு தலைவர் பி.சொக்கலிங்கம் தாக்கல் செய்துள்ள வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், புதுமண தம்பதிகள், பால்குடம் எடுப்பவர்கள், காவடி எடுப்பவர்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மடாதிபதிகள், ஜீயர்கள், உபயதாரர்கள் உள்ளிட்டோருக்கு இலவச சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கலாம்; பணத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டும் இந்த திராவிட தர்மம் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத்…
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்ககம் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண் ராஜ், “சுகாதாரத் துறையின் இணை இயக்குனர்களுடன் இன்றும், நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஒரு நோயாளி மருத்துவமனைக்கு செல்லும் பொழுது அங்கு மருத்துவமனை சிகிச்சை சுகாதாரம் உள்ளிட்டவை நன்றாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு மருத்துவமனை இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதாகவும், மேலும் சுத்தம், சுகாதாரமாக இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு ஆண்டுக்கு ஒரு முறை பாராட்டு வழங்க இருக்கிறோம்” என்றார். கிட்னி திருட்டு சம்பவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ”கிட்னி திருட்டு விசாரணை தேர்தல் நேரம் என்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மீண்டும் அதன் விசாரணை தொடங்கியுள்ளது. வெளிப்படை தன்மையோடு விசாரணை நடக்கும் , நிச்சயமாக நியாயம் கிடைக்கும். கிட்னி…
அரசு மருத்துவர்களின் அலட்சிய சிகிச்சையால் மகளின் கால் பாதம் பறிபோனதாக ஐந்தாண்டுகளுக்கும் மேலாகப் போராடிவரும் தலைமைக் காவலரின் போராட்டம் தவெக ஆட்சியிலாவது முடிவுக்கு வருமா என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வினா எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மகளின் பாதம் அகற்றப்பட்டதாகக் கூறி, அலட்சியமாகச் செயல்பட்ட மருத்துவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தலைமைச் செயலக நுழைவுவாயிலில் போராட்டம் நடத்திய காவல்துறையைச் சார்ந்த தலைமைக் காவலர் கோதண்டபாணியை சக காவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தனது மகளுக்குத் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தலைமைக் காவலர் கோதண்டபாணியை கடந்த ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய புதிய ஆட்சியாளர்களும் அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, தலைமைக் காவலர் கோதண்டபாணியின் புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி மருத்துவர்கள் அலட்சியத்துடன் செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது…
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – கயல்விழி தம்பதிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தம்பதியருக்கு மகிழ்ச்சியான தருணம். அவரது மனைவி கயல்விழி இரண்டாவதாக ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். இதன்மூலம் சீமான் இரண்டாவது முறையாகத் தந்தையாகும் பெருமையைப் பெற்றுள்ளார். இந்த நல்ல செய்தி கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலகினர் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2013-ம் ஆண்டு நடைபெற்ற சீமான் – கயல்விழி திருமணம் தமிழ் அரசியல் வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகப் பார்க்கப்பட்டது. மறைந்த முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் காளிமுத்து அவர்களின் மகள் கயல்விழி. அவரது குடும்ப பின்னணியும், சீமானின் தமிழ்த் தேசிய அரசியல் பயணமும் இணைந்த இந்த திருமணம் பலரது கவனத்தை ஈர்த்தது. திருமணத்திற்குப் பிறகு 2018-ம் ஆண்டு அவர்களுக்கு முதல் குழந்தையாக ஆண் மகன் பிறந்தான். தற்போது ஏழு வயதாகும் அந்தச் சிறுவன் தந்தையின் அரசியல்…
தமிழகத்தில் ஒருவர் உட்பட 25 ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் விரைவில் 25 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. ஆந்திரப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஜூன் 21 மற்றும் ஜூலை 19 ஆகிய தேதிகளில் பல எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதனால், அந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏற்கெனவே காலியாக உள்ள ஒரு ராஜ்யசபா இடத்திற்கும் இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மயிலம் சட்டமன்றத் தொகுதியில் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை சி.வி. சண்முகம் ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் 2028 வரை இருந்ததால், இப்போது இடைத்தேர்தல் அவசியமாகியுள்ளது. அண்ணாமலைக்கு ஆந்திரா வழியாக…
தமிழ்நாடு அமைச்சரவையில் அதிமுகவின் சி.வி. சண்முகம் தரப்புக்கு பதவி வழங்குவதில் சாத்தியமில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான ஆட்சியில் அமைச்சரவை விரிவாக்கம் முடிவடைந்த நிலையில், இரண்டு இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. அ.தி.மு.க.வின் சி.வி.சண்முகம் தரப்பினருக்கு அமைச்சர் பதவி வழங்கும் வாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், தவெக அரசுக்கு வெளிப்புற ஆதரவு அளித்த அ.தி.மு.க. அதிருப்தி அணியினரிடையே மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த மே 10ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட பதவியேற்பு விழா நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் முதல் கட்டமாக 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். இன்று சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இரண்டாவது கட்ட அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. இதில் தவெகவைச் சேர்ந்த 21 பேர் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.…
ரன்வீர் சிங், சாரா அர்ஜூன் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் துரந்தர். இப்படத்தின் முதல் மற்றும் 2ம் பாகம் மிகப்பெரிய ஹிட்டானது. துரந்தரின் முதல் பாகம் ஓடிடி தளத்திலும் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இந்த சூழலில் துரந்தர் 2 படத்தில் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டது குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு மத்திய ஒலிபரப்பு அமைச்சகத்துக்கும், சிபிஎப்சி எனப்படும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்துக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் தேசப்பற்று, பழிவாங்குதல், பாகிஸ்தானின் நிழல் உலக பயங்கரவாத செயல்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள எஸ்.எஸ்.பி எனப்படும் சஷஸ்திர சீமா பல்- ஆயுதமேந்திய எல்லைக் காவல் படையின் தலைமை காவலரான தீபக் குமார், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல…
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைமையிலான அரசில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சி பங்கேற்கும் முக்கிய முடிவை அறிவித்துள்ளது. இது தமிழக அரசியல் களத்தில் புதிய கூட்டணி சமன்வயத்தை உருவாக்கியுள்ளது. தவெக அரசின் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் பேசியபோது, “விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளை அமைச்சரவையில் இணைக்க தவெக உறுதியாக உள்ளது. குறிப்பாக ஐயூஎம்எல் கட்சியை அமைச்சரவையில் இடம்பெறச் செய்வது முதலமைச்சர் விஜய்யின் விருப்பம்” என்று தெரிவித்தார். தவெக அரசு மதச்சார்பின்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், அனைத்து பிரிவு மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் அமைச்சரவை விரிவாக்கம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார். இந்த அழைப்பைத் தொடர்ந்து ஐயூஎம்எல் கட்சி அவசர ஆலோசனை கூட்டத்தை…
கட்சி தொடங்கிய ஒரு வாரத்தில் கட்சியை கலைத்துவிட்டு தவெகவில் இணைந்து எம்எல்ஏவாக தேர்வாகி தற்போது அமைச்சராக மாறியிருக்கிறார் ஆர்.வி ரஞ்சித் குமார். தமிழக அரசியலில் விரைவான மாற்றங்கள் மற்றும் தந்திரோபாய நகர்வுகளுக்கு பெயர் பெற்ற ஒரு தலைவராக உருவெடுத்துள்ளார் ஆர்.வி. ரஞ்சித் குமார். அதிமுகவில் இருந்து பிரிந்து பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அந்தக் கட்சியை கலைத்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து, காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். இவரது அரசியல் பயணம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னணி மற்றும் ஆரம்ப அரசியல் வாழ்க்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார், ராகவன் வீரசாமி மகன். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். விவசாயம், பெட்ரோல் பங்க், கோழி வளர்ப்பு, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில்…
இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தில் சென்னையை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு அளித்துள்ள விஜய், விஎஸ் பாபுவுக்கு இடம் தரவில்லை. சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் கொளத்தூர் தொகுதியில் புதிய வரலாறு படைத்த வி.எஸ். பாபு இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் மிக வலிமையான கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூரில், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து ‘ஜெயண்ட் கில்லர்’ என்ற பட்டத்தைப் பெற்ற பாபு, அமைச்சர் பதவி எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், அது நிறைவேறாதது அவரது ஆதரவாளர்களிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தவெகவில் இருந்து 7 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சரவையில் இடம்பெற்றனர். இந்த பின்னணியில், ஸ்டாலினை வீழ்த்திய பாபுவுக்கு முக்கிய துறை பொறுப்பு வழங்கப்படும் என கட்சி வட்டாரங்கள் உறுதியாக நம்பின. ஆனால் முதல் கட்ட அமைச்சரவை…