Author: Editor TN Talks
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது தமிழக வெற்றிக் கழகம். விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், அமைச்சரவை முடிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக் 5 அமைச்சரகளும், தற்போது 21 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். இந்த அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சியினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என விஜய் கூறியிருந்த நிலையில், தேர்தலுக்கு பிறகு தவெகவுடன் இணைந்த காங்கிரஸ்க்கு தற்போது ஆட்சியில் பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தேர்தலுக்கு பின், சட்டமன்றத்தில் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுகவை சேர்ந்த சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி என பலர் வெளிப்படையாக அறிவித்தனர். தவெகவுக்கு ஆதரவு அளிப்பவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தும் அவரது பேச்சை யாரும் கேட்கவில்லை. இன்று அதிமுகவின் நிலை மீண்டும் 2ஆக பிளவுப்பட்டு கிடக்கிறது. தவெகவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் ஆதாயம் கிடைக்கும் என சி.வி.சண்முகம்…
ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு பி.கே.குஞ்ஞாலிகுட்டியை அமைச்சராக நியமித்து கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் அறிவித்துள்ளார். திருவனந்தபுரம்: கேரள சட்டசபைத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) அமோக வெற்றி பெற்று, 10 ஆண்டுகால இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. மொத்தம் 140 தொகுதிகளில் 102 இடங்களை கைப்பற்றிய யுடிஎஃப், தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து சரித்திரம் படைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனியாக 63 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னணியில் நிற்கிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கேரளாவின் 24-வது முதலமைச்சராக வி.டி. சதீசன் மே 18-ம் தேதி திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் பதவியேற்றுக் கொண்டார். பிரமாண்டமான மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழா, புதிய அரசின் மீதான பெரும் எதிர்பார்ப்பை பிரதிபலித்தது. 20 பேர் கொண்ட அமைச்சரவையுடன் பொறுப்பேற்ற புதிய அரசு, உடனடியாக துறை ஒதுக்கீட்டை அறிவித்து, தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. …
அமைச்சர் ராஜ்மோகன், பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று கூறியது மனதிற்கு மிகவும் ஆறுதலையும், ஊக்கத்தையும் கொடுத்தது என்று வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் மொழி உரிமைக்காக நடைபெற்ற வரலாற்றுப் போராட்டங்களை நினைவுகூர்ந்து, தற்போதைய மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 1938-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் பெரும் எழுச்சியைப் பெற்றது. 1965-இல் இது மொழிப் புரட்சியாக வெடித்தது. இந்தியைத் திணிக்க முயன்றபோது, தங்கள் உயிரைத் துச்சமாக மதித்து நெருப்பில் பாய்ந்து தியாகம் செய்த வீரர்களின் பெயர்களை வைகோ சுட்டிக்காட்டினார். சிங்கத் தமிழன் சின்னச்சாமி, அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து, விராலிமலை சண்முகம், மயிலாடுதுறை சாரங்கபாணி, பீளமேடு தண்டபாணி உள்ளிட்ட தியாகிகள் இந்தியை எதிர்த்து உயிர்நீத்தனர். மேலும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகினர். இந்த இரத்தம் தோய்ந்த போராட்டமே தமிழ்நாட்டின்…
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அவ்வபோது வானம் இருட்டினாலும், மிதமான மழை பெய்தாலும் கூட வெயிலின் தாக்கம் குறைந்த பாடில்லை. உச்சகட்டமாக நேற்று வெயில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் கொளுத்தியது. தலைநகர் சென்னையில் 107 டிகிரி வெயில் பதிவானது. சுட்டெரித்த வெயிலுக்கு மத்தியில் அனல் காற்றும் வீசியதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் வெப்பம் தாங்க முடியாமல் நிழலை தேடி ஒதுங்கினர். மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் இருந்ததால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் நேற்று அதிகபட்ச வெயில் பதிவானது. பகலில் ஏற்பட்ட வெயிலின் தாக்கத்தால், இரவிலும் உஷ்ணம் அதிகரித்தது. பொதுமக்கள் புழுகத்திலும், வியர்வையிலும் அசாதாரணமான சூழலை அனுபவித்தனர். ஆகையால் இந்த காலகட்டத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை சிறுவர்கள், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள்…
தவெக அமைச்சரவையில் 4 பெண்களுக்கு இடம் கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. நடிகர் சி. ஜோசப் விஜய் தலைமையில் மே 10 அன்று சென்னையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போது மொத்தம் 10 அமைச்சர்கள் பதவியேற்றனர். அந்த அமைச்சரவையில் ஒரே ஒரு பெண் அமைச்சராக சிவகாசி தொகுதியிலிருந்து முதல் முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 29 வயது இளம் தலைவி எஸ். கீர்த்தனா இடம்பெற்றார். தொழில் துறை அவருக்கு ஒதுக்கப்பட்டது. பதவியேற்று சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு, தவெக அரசு முக்கியமான அமைச்சரவை விரிவாக்கத்தை மேற்கொண்டுள்ளது. சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 23 புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்த விரிவாக்கத்தின் மூலம் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வலுவான ஆட்சியமைப்பை…
ராஜீவ் காந்தியின் 35 வது நினைவு நாள் ஓட்டி சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள அவருடைய சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா, காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் கவனகர் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசு மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் நிகழ்ச்சி கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போதும் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை, ”முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவஞ்சலி செலுத்தி புகழ் பாடி கொண்டிருக்கிறது காங்கிரஸ் பேரிருக்கும் இந்தியாவின் தலை நிமிரங்க வைத்தவர் ராஜீவ் காந்தி அவர்கள் அமெரிக்கா எந்த விதத்திலும் இந்தியாவில் அடிப்படையை வைக்க முடியாது என்ற இந்தியாவை கொண்டு வந்தவர் மாபெரும் தலைவர் அவர்களுக்கு ராஜீவ் காந்தி மறைக்க முடியாது வாழும் வரை…
தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். தவெகவில் 19 எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் என 2 பேர் என மொத்தம் 21 பேருக்கு ஆளுநர் அர்லேகர் இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த அமைச்சரவையில் 19 மாவட்டங்களில் அமைச்சர்கள் இடம்பெறவில்லை. நீலகிரி, தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், திருவாரூர், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய 19 மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பட்டியலில் இடம்பெறவில்லை தவெக வெற்றி பெறாத குமரிக்கு மட்டும் காங்கிரசிற்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. மேலும் 20-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. சீனாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த நடிகை கஸ்தூரி, “ த.வெ.க. ஆட்சியை தி.மு.க. விமர்சிக்கிறது என்றால், முதல்-அமைச்சர் விஜய் நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறார் என்பதற்கான அறிகுறி என எடுத்துக் கொள்ளலாம். டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது நல்ல விஷயம். குடிபோதையில் இருப்பவர்கள் தெருக்களையே பார்களாக மாற்றி உள்ளனர். மேலும் முதல்-அமைச்சர் விஜய்க்கு மக்கள் சிறிது கால அவகாசம் கொடுத்து ஆதரவு அளிக்க வேண்டும். அதிகாரிகள் மாறக்கூடும். பலர் புதிய எம்.எல்.ஏ.க்கள். அவர்கள் விரைவில் கற்றுக் கொள்வார்கள். பாட்டிலுக்கு 10 ரூபாய் என பாடிய நிலையில் ரூ.10 தொடர்கிறது என்றால் அடிமட்ட அதிகாரிகள் கடினம். அது தொடர்பான கட்டமைப்பு குறித்து முதலமைச்சர் விஜய்க்கு தெரிந்து இருக்காது. தி.மு.க.வினர் பெரிய அளவில் தோல்வியை சந்தித்தவர்கள். அவர்கள் 5 ஆண்டுகள் கத்திக் கொண்டே இருக்கலாம். அதேபோல் சிலர் மாற்றுக் கட்சிகளுக்கு செல்வது புதிதல்ல. அதிமுக வெற்றி பெற்ற காலத்திலும் பலர் கட்சி மாறினர். இது…
முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்கிவிட்டு தலைமறைவான மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வரும் ஹாஜாமுகைதீன் நேற்றைய முன் தினம் மூன்று நபர்களால் தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த ஹாஜாமுகைதீன், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் முத்துப்பேட்டை காவல்துறையினர் சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்டர். அதில் ஹாஜாமுகதீனை தாக்கியது முத்துப்பேட்டையை சேர்ந்த அப்துல்பாசித், சபீக் அகமது, முகமது யூனிஸ் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து தலைமறைவான 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றது தெரியவந்தது.