Author: Editor TN Talks

அரசு மருத்துவமனைகளில் ஆய்வு என்னும் பெயரில் PR Stunt நடத்திக் கொண்டிருக்கும் தவெகவினரை அடக்கி வையுங்கள் என அதிமுக வலியுறுத்தியுள்ளது. தமிழகம் முழுக்க அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு என்ற பெயரில் PR Stunt நடத்திக் கொண்டிருக்கிறது த.வெ.க. மருத்துவ அணி என்ற பெயரில் தங்கள் கருப்பு Coat தலைவர் போலவே வெள்ளை Coat-ஐ மாட்டிக் கொண்டு ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு எல்லாம் சென்று அரசு மருத்துவர்களை, செவிலியர்களை பணி செய்ய விடாமல் மிரட்டி வருகிறது இந்த ரசிக வெறி கும்பல் என அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. ஏற்கனவே முந்தைய திமுக அரசால் நிறைய மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், கடுமையாக Stress-க்கு ஆளாகியுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை, உங்கள் ரீல்ஸ் Content-காக மேலும் Disturb செய்வது எப்படிப்பட்ட Sick Mindset? அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்த வேண்டும் என்றால், அதை துறை அமைச்சர் செய்யட்டும்; துறை அதிகாரிகளோடு இணைந்து சட்டமன்ற…

Read More

இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத, இளமைத் துடிப்பான ஒரு தலைவராக வலம் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் மிக இளம் வயது பிரதமராகப் பொறுப்பேற்று, நாட்டை இருபத்தியோராம் நூற்றாண்டை நோக்கித் தொலைநோக்குப் பார்வையுடன் வழிநடத்திய ஒரு தலைவரின் வாழ்வையும், அவரது பங்களிப்பையும் நினைவுகூர்வோம். இளமை மற்றும் அரசியல் வருகை 1944 ஆகஸ்ட் 20 அன்று பிறந்த ராஜீவ் காந்தி, ஆரம்பத்தில் அரசியலில் ஈடுபாடு காட்டாமல் ஒரு வணிகரீதியான விமான ஓட்டியாகவே (Pilot) தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார். ஆனால், 1980-ல் அவரது சகோதரர் சஞ்சய் காந்தியின் திடீர் மறைவு மற்றும் 1984-ல் அன்னை இந்திரா காந்தியின் படுகொலை ஆகிய வரலாற்றுச் சூழல்கள் அவரை அரசியலுக்குள் கொண்டு வந்தன. 1984-ல் இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு, இந்தியாவின் 6-வது பிரதமராகத் தன் 40-வது வயதில் அவர் பொறுப்பேற்றார். இந்தியாவின் மிக இளம் வயது பிரதமர்…

Read More

அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு சுவையானதாகவும் தரமானதாகவும் இருக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா உணவகத் திட்டம், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத ஒரு புதுமையான நலத்திட்டமாக உருவெடுத்தது. மிகவும் குறைந்த விலையில் சத்தான உணவை வழங்கும் இந்தத் திட்டம், நகர்ப்புற ஏழைகள், தினக்கூலித் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பெண்களின் வாழ்வில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியது. ஒரு ரூபாய்க்கு இட்லி, ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதம் மற்றும் மூன்று ரூபாய்க்கு தயிர் சாதம் போன்ற உணவு வகைகள் மூலம், உணவு உரிமையை நடைமுறைப்படுத்திய இந்தத் திட்டம், தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்களில் முன்னோடியாக விளங்குகிறது. இதன் வெற்றியைக் கண்டு கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்கள் இதே மாதிரியான உணவகங்களைத் தொடங்கின. இன்றும் பலர் இந்த மாடலைப் பார்த்து…

Read More

 சென்னை தலைமை செயலகத்தில்  தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பேசினார். அப்போது 25கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்.  இதன் பின்னர் பி.ஆர்.பாண்டியன்,  காவிரி முல்லைப் பெரியாறு உள்ளிட்ட சட்ட பிரச்சனைகளை நீதிமன்றம் மூலமாக அவசர கால தீர்வு காண்பதற்கு சட்ட வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.  மேகதாட்டு அணை கட்டுவதற்கு வரவு திட்ட அறிக்கை தயாரிக்க உச்சநீதிமன்றம் கர்நாடகாவிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியிருப்பது சட்ட விரோதமானது. இதனை தடுத்து நிறுத்த மறுசீராய் மனுவை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும்.  கர்நாடகாவில் இருந்து உரிய தண்ணீரை பெற்று தர ஆணையம் முன்வர வேண்டும்,  ஜூன் 12ல் 100 அடிக்கு மேல் நிரம்பிய பிறகு அணையைத் திறந்து பாசனத்திற்கு விடுவிக்க வேண்டும் எனக் கூறினார்.  முல்லை பெரியாறு அணை 142 அடி தேங்கிய பிறகுதான் தண்ணீரை…

Read More

மாற்றுத் திறனாளி கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை என்ன ஆனது? என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேர்தல் தோல்விக்குப் பிறகான உத்திகள் குறித்து விவாதிக்க நாளை (வியாழக்கிழமை) கோவையில் பாஜக மத்தியக் குழு மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்தார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்தித்தாலும், கட்சி மிகுந்த உற்சாகத்துடன் மீண்டெழும் என்று தமிழிசை தெரிவித்தார். இந்திய அளவில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், “இந்தத் தேர்தல் யாராலும் முன்கணிக்க முடியாத அளவுக்கு சிக்கலானதாக இருந்தது. எனினும், புதிய அரசின் மீது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது” என்றார். திமுக அரசு ஏன் மக்களால் புறக்கணிக்கப்பட்டது என்பதை புதிய அரசு ஆழமாக சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்திய தமிழிசை,…

Read More

புதுச்சேரி தவெக எம்.எல்.ஏ ராமு, பதவியேற்கும்போது, தங்கள் கட்சியின் தலைவர் விஜய்யின் புகைப்படத்தை காண்பித்து கடவுள் எனப் பேசினார். புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) தெளிவான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, தொடர்ந்து ஆட்சி அமைத்துள்ளது. என்.ஆர். காங்கிரஸ் 12 இடங்களையும், பாஜக 4 இடங்களையும், அதிமுக மற்றும் எல்.ஜே.கே தலா ஒரு இடத்தையும் கைப்பற்றியதன் மூலம் கூட்டணி மொத்தம் 18 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது. எதிர்க்கட்சிகளில் திமுக 5 இடங்கள், காங்கிரஸ் ஒரு இடம், நேயம் மக்கள் கழகம் ஒன்று, தவெக 2 இடங்கள் மற்றும் சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றன. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, முதலமைச்சராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி கடந்த 13-ம் தேதி பதவியேற்றார். அவருடன் அமைச்சர்களாக நமச்சிவாயம் மற்றும் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து, 18-ம் தேதி அன்பழகன் புதுச்சேரி தற்காலிக…

Read More

கண்டிப்பாக நாங்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வோம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு, ஆண்கள் பொது வார்டு, கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை அவர் விரிவாகப் பார்வையிட்டு, சுகாதார நிலவரத்தை மதிப்பீடு செய்தார். இந்த ஆய்வின்போது சுகாதாரத் துறை செயலாளர் தாரேஸ் அகமது, மருத்துவமனை முதல்வர் டாக்டர் சாந்தாராம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அமைச்சருடன் இருந்தனர். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், தனது பழைய படிப்பு நிறுவனத்தை அமைச்சராக மீண்டும் பார்வையிட்டதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். “முதலமைச்சர் நேற்று சுகாதாரத் துறை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். அரசு மருத்துவமனைகளில் சுத்தம் மற்றும் சுகாதாரம் போதுமான அளவில் இல்லாததாலேயே பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடும் நிலை உருவாகியுள்ளது.…

Read More

​யூடியூபர் ‘சவுக்கு’ சங்கர் மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அவரை உடனடியாக விடுதலை செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது. ​ சென்னை  காவல் ஆணையரால் கடந்த ஏப்ரல் 9, 2026 அன்று சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.    இந்த உத்தரவு, தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டம் கீழ், அறிவுரை வாரியத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.​   இதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கரின் தடுப்புக் காவலுக்கான காரணங்கள், அரசிடம் காவல் துறை சமர்ப்பித்த அறிக்கை மற்றும் அது தொடர்பான ஆவணங்களை அறிவுரை வாரியம் விரிவாக ஆய்வு செய்தது. மேலும், சிறையில் உள்ள சவுக்கு சங்கரின் நேரடி வாக்குமூலத்தையும் வாரியம் கேட்டறிந்தது. ​அனைத்து தரப்பு வாதங்களையும் பரிசீலித்த அறிவுரை வாரியம், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்குப் போதிய காரணங்கள் இல்லை என்று…

Read More

அதிமுகவிலேயே துணைப் பொதுச் செயலாளர் பதவி கேட்டவர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. பதவி கொடுக்காததால் தான் அவர் தவெகவில் இணைந்தார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் விஜய் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசுக்கு எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இரண்டாகப் பிரிந்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எடப்பாடி பழனிசாமி கொல்லைப்புற வழியில் ஆட்சி அமைக்க முயன்றதாகத் தெரிவித்தார். இதனை  அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், கடுமையாக மறுத்தார். “ஆதவ் அர்ஜுனா திமுக மற்றும் அதிமுகவை இணைத்து அவதூறு பரப்பி வருகிறார். அவரது அரசியல் பின்னணியைப் பார்த்தால் உண்மை புரியும்” என்று கூறினார். ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தொடங்கி, பின்னர் திமுகவில்…

Read More

தமிழக அரசியலில் குதிரை பேரம் நடைபெறவில்லை என்பதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன் முதல் நாளான இன்று விருத்தாச்சலம் வந்த அவர், பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தேர்தல் பிரச்சாரத்தின்போது தாம் அளித்த முக்கிய வாக்குறுதியான விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கும் முயற்சியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதாக உறுதியளித்தார். மேலும், தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்ட அனைத்து திட்டங்களையும் குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் தாம் எழுப்பிய ரத்தன் பண்டிட் நியமனம்…

Read More