Close Menu
    What's Hot

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»சிங்கப்பெண் அதிரடிப்படை என்ன ஆச்சு..?? தவெக அரசுக்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி..!!
    Featured

    சிங்கப்பெண் அதிரடிப்படை என்ன ஆச்சு..?? தவெக அரசுக்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி..!!

    Editor TN TalksBy Editor TN TalksMay 20, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    023 tamizishai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மாற்றுத் திறனாளி கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை என்ன ஆனது? என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேர்தல் தோல்விக்குப் பிறகான உத்திகள் குறித்து விவாதிக்க நாளை (வியாழக்கிழமை) கோவையில் பாஜக மத்தியக் குழு மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்தார்.

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்தித்தாலும், கட்சி மிகுந்த உற்சாகத்துடன் மீண்டெழும் என்று தமிழிசை தெரிவித்தார். இந்திய அளவில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், “இந்தத் தேர்தல் யாராலும் முன்கணிக்க முடியாத அளவுக்கு சிக்கலானதாக இருந்தது. எனினும், புதிய அரசின் மீது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது” என்றார்.

    திமுக அரசு ஏன் மக்களால் புறக்கணிக்கப்பட்டது என்பதை புதிய அரசு ஆழமாக சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்திய தமிழிசை, “கடந்த காலங்களில் மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்ததே அதற்கு முக்கிய காரணம்” என்று குறிப்பிட்டார். உலகத் தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘ஆணைமேடு செப்புப் பட்டயங்கள்’ விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கத் தவறியதைக் கண்டித்த அவர், “இதன் மூலம் பிரதமர் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். பாரபட்சமான அணுகுமுறையை புதிய அரசு கைவிட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

    கல்வித்துறை அமைச்சர் இரு மொழிக் கொள்கை தொடர்பாக பொதுவான அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன், மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மனதில் கொண்டு நிதானமாக முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். புதுச்சேரியில் பி.எம். ஸ்ரீ திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதை உதாரணமாகக் காட்டினார். மேலும் முதலமைச்சரின் அறையில் ‘ரீல்ஸ்’ எடுக்கப்பட்ட சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்த தமிழிசை, “முதலமைச்சர் அறை மிகவும் மரியாதைக்குரிய இடம். அங்கு தேவையற்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

    717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் முடிவுக்கு சரியான திட்டமிடல் இல்லை என்று விமர்சித்த அவர், “எந்தக் கடைகள், எப்போது மூடப்படும் என்பதை மக்களுக்கு தெளிவாக அறிவிக்காததால் இன்று பல இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன” என்றார். டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் 10 ரூபாய் வசூல் விவகாரத்தில் போராட்டம் நடத்துவதையும், பல இடங்களில் சட்ட விரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை நடைபெறுவதையும் சுட்டிக்காட்டினார். முந்தைய அரசு தேர்தலுக்கு முன் அவசரமாக 1,500 மருத்துவர்களுக்கு நியமனம் செய்து, 300 பேருக்கு மட்டும் பணியாணை வழங்கியதாகவும், மீதமுள்ளோர் பணியாணை கோரியபோது போலீஸ் மூலம் அடக்குமுறை ஏவப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

    அம்மா உணவகங்களை சீரமைப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், டாஸ்மாக் மற்றும் மருத்துவர் பிரச்னைகளில் முதலமைச்சர் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றார். சிங்கப்படை அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு மாறாக, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடைபெற்ற சம்பவத்தைச் சுட்டிய தமிழிசை, சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் அரசு தோல்வியடைந்துள்ளதாக விமர்சித்தார்.

    சில அரசு டெண்டர்கள் அவசரமாகத் தொடங்கப்பட்டு உடனே ரத்து செய்யப்படுவதாக வரும் தகவல்களையும் அவர் குறிப்பிட்டார். “கடந்த ஆட்சியின் குறைபாடுகளை சரிசெய்யாவிட்டால் மக்கள் அதிருப்தி அதிகரிக்கும். தவறுகளை இரேஸ் செய்யுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார். ஆனால் இன்னும் எந்த மாற்றமும் தெரியவில்லை. முதலமைச்சர் இந்த விவகாரங்களில் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும்” என்று தமிழிசை வலியுறுத்தினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபதவியேற்கும்போது திடீரென வந்த விஜய் ஃபோட்டோ..!! இவர் என்ன 1009-வது கடவுளா..?? எம்.எல்.ஏ-வை கண்டித்த சபாநாயகர்..!!
    Next Article கடன் தள்ளுபடி செய்வதற்கு முன் கடன் வசூலை நிறுத்தி வைக்க வேண்டும் – முதலமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை  
    Editor TN Talks

    Related Posts

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    June 4, 2026

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    June 4, 2026

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    100% தோல்வி; துணைக் கேப்டன் பதவி பறிப்பு!. ரிஷப் பண்ட்டிடம் கம்பீர் பேசிய ரகசியம்!

    “ஹார்டு டிஸ்க்குகள் மாயம்… ஊழல்வாதிகளைக் காக்கிறதா பேரசக்தி?” –இபிஎஸ் கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.