Close Menu
    What's Hot

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  
    அரசியல்

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    Editor web2By Editor web2July 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sonam Wangchuk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகள், தேர்வுக் கேள்வித்தாள் கசிவு மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் காக்ரோச் ஜனதா கட்சி  தலைமையிலான மாணவர் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

    இந்நிலையில், காலவரையற்ற உண்ணாவிரதத்தில் இருக்கும் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், தனது உண்ணாவிரதத்தை முடிப்பதற்கான புதிய நிபந்தனைகளை அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “நான் வாழ விரும்புகிறேன். ஆனால் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை உண்ணாவிரதத்தை தொடர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்” என்று சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய உண்ணாவிரதத்தை முடிப்பதை பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு சில முக்கிய கோரிக்கைகளை பரிசீலித்தால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிடத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அவரது முக்கிய கோரிக்கைகளில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்குவது, நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது பழிவாங்கும் வகையில் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்ற அரசின் உறுதியை வழங்குவது ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    Delhi protest 2

    இதற்கிடையில், சோனம் வாங்சுக்கின் கருத்தை விட கடுமையான நிலைப்பாட்டை சிஜேபி எடுத்துள்ளது. தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேர்வு முறைகேடுகளால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

    முன்னதாக, டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற ‘சலோ சன்சத்’ பேரணியில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நாடு முழுவதும் பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியது. மாணவர்கள் மீது போலீசார் அதிகப்படியான பலத்தை பயன்படுத்தியதாக எதிர்க்கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் குற்றம்சாட்டியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றமும் போலீசாரிடம் விளக்கம் கேட்டு, சம்பவம் தொடர்பான அனைத்து வீடியோ காட்சிகள் மற்றும் ஆவணங்களையும் பாதுகாக்க உத்தரவிட்டுள்ளது.

    DharmendraPradhan NEETProtest SonamWangchuk StudentMovement
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!
    Next Article ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி
    Editor web2
    • Website

    Related Posts

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    July 22, 2026

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    July 22, 2026

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    ‘ஆகாயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..! 

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.