தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். தவெகவில் 19 எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் என 2 பேர் என மொத்தம் 21 பேருக்கு ஆளுநர் அர்லேகர் இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த அமைச்சரவையில் 19 மாவட்டங்களில் அமைச்சர்கள் இடம்பெறவில்லை. நீலகிரி, தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், திருவாரூர், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய 19 மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பட்டியலில் இடம்பெறவில்லை
தவெக வெற்றி பெறாத குமரிக்கு மட்டும் காங்கிரசிற்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
