Author: Editor TN Talks

ஜனநாயகன் திரைப்படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன், பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தணிக்கை வாரியத்தின் நடவடிக்கை காரணமாக படம் வெளியாவதில் வழக்கு, தாமதம் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்தது. இதனிடையே தணிக்கை மறு ஆய்வு குழு முன்பு படம் ஆய்வில் உள்ள நிலையில், ஏப்ரல் 3ம் தேதி சட்டவிரோதமாக ஜனநாயகன் திரைப்படம் இணையதளத்தில் வெளியானது. இதுதொடர்பாக படத்தை தயாரித்த கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் அளித்த புகாரில், 21 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, 9 பேரை கைது செய்தனர். இவர்கள் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள், கோடை விடுமுறை கால நீதிபதி…

Read More

ஐஏஎஸ் அதிகாரிகள் 22 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சந்தியா வேணுகோபால் சர்மா – திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலாளர் குமரகுருபரன் – வணிக வரி, பத்திரப் பதிவு, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் ஸ்வர்ணா – சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்தீப் நந்தூரி – தொழில்துறை, முதலீடு ஊக்குவிப்புத்துறை சிறப்பு செயலாளர் பிரகாஷ்  – வருவாய், நிர்வாகத் துறை முதன்மை செயலாளர் ஷோபனா – ஜவுளித்  துறை ஆணையர் ஷில்பா பிரபாகர் சதீஷ் – தொழிலாளர் நலத்துறை ஆணையர் கிரண் குராலா – ஊரக மற்றும் நகர திட்டத்துறை  ஆணையர் விஜய கார்த்திகேயன் – மீன்வளத்துறை இயக்குனர் மகேஸ்வரி ரவிக்குமார் – சமூக நலத்துறை இயக்குனர் செந்தில் ராஜ்  – ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன் – போக்குரத்து, சாலை பாதுகாப்புத்துறை இயக்குனர் சாருஸ்ரீ – கருவூலத்துறை இயக்குனர் ரவிக்குமார் -…

Read More

சென்னை தலைமைச்செயலக வளாகத்தை தமிழக முதலமைச்சர் விஜய் பேட்டரி காரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து வெளியே வந்த முதலமைச்சர் விஜய், கோட் அணியாமல் வெள்ளை சட்டையுடன் பேட்டரி காரில் பயணம் செய்து தலைமைச் செயலக வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  10 நாட்களுக்கும் மேலாக தலைமைச் செயலகம் வந்தாலும், முழுமையாக அவர் அந்த வளாகத்தைப் பார்வையிடவில்லை என்பதால், பேட்டரி கார் மூலம் தலைமைச் செயலகத்தைப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சென்னை கோட்டை வளாகத்தில் உள்ள பழமையான செயின்ட் மேரிஸ் தேவாலயத்திற்கு  சென்று முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். தலைமைச் செயலகத்தை சுற்றி, அகழி தோண்டப்பட்டு அதில் முதலைகள் போடப்பட்டிருந்தது பற்றியும், தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் பற்றியும் உயரதிகாரிகள் முதலமைச்சர் விஜய்க்கு விளக்கினார். தமிழ்நாட்டின் 40க்கும் மேற்பட்ட துறைகளின் தலைமை அலுவலகம் இங்குதான் செயல்படுகிறது என்பதால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருகிறார்கள்.…

Read More

6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டோங்ரே பிரவீன் உமேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஐ.ஜி–யாக செந்தில் குமாரியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அசோக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அக்சய் அனில் வாக்ரே, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக லலித்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக ஷியாமளா தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளனார்.

Read More

மகனுக்கு சிறுநீரகம் தானம் கொடுக்க விரும்பும் தாய், தங்கள் உறவை மரபணு பரிசோதனை மூலம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஹவுராவை சேர்ந்த ரோஹித்குமார் சவுராஸ்யா, சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக தானம் வழங்க அவரது தாய் ரீட்டா சவுராஸ்யா முன்வந்தார். ஆனால், தாய் மகன் உறவை நிரூபிக்கவில்லை எனக் கூறி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்க தமிழக அரசின் உடலுறுப்பு மாற்று அங்கீகார குழு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து தாய் ரீட்டா சவுராஸ்யா மற்றும் மகன் ரோஹித்குமார் சவுராஸ்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், தாய் – மகன் உறவை நிரூபிக்கும் வகையில் ஆதார் அட்டை, குடும்ப…

Read More

பல்வேறு துறைகளில் போடப்பட்ட 100க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்த பிறகு மே 13 முதல் மே 22ம் தேதி வரை வெளியிடப்பட்ட குறுகிய கால டெண்டர்களை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. குறுகிய டெண்டர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பல்வேறு டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஊரக வளர்ச்சித் துறை, போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட துறைகளில் போடப்பட்ட 100க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை மாநகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் குறுகிய கால டெண்டர் வெளியிட்ட அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Read More

தமிழகம் முழுவதும் உள்ள கல் குவாரிகளில் சோதனை நடத்த கனிம வளத்துறை அமைச்சர் பிரபு உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் கனிமவளத் துறை சார்பில் 3000-க்கும் மேற்பட்ட கல் குவாரிகளில் அனுமதி அளிக்கப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த கல் குவாரிகளில் அரசு அளித்த அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. அதே போல, மத்திய அரசின் சிபா கமிட்டி கல்குவாரிகளில் எந்த அளவு கற்கள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் பல இடங்களில் மீறப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதேபோல, கல்குவாரிகளை கண்காணிக்கும் சேப்டி மைண்ட் எனப்படும் கண்காணிப்பு குழுவினர் முறையாக கல்குவாரிகளின் கண்காணிக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இந்தநிலையில் தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்து கல்வாரிகளிலும் அந்தந்த மாவட்ட கனிம வளத்துறையினர் ஆய்வு செய்து அரசிடம் பெறப்பட்ட ஆணைப்படி கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதா? அல்லது அளவுக்கு அதிகமாக…

Read More

சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக கூட்டணி அமைச்சரவையை முதலமைசர் ச.ஜோசப் விஜய் வடிவமைத்திருப்பதாக இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். பரியேறும் பெருமாள் என்னும் முதல் திரைப்படத்திலேயே தனது முத்திரையைப் பதித்து திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இயக்குநர் ராமிடம் உதவியாளராக பல ஆண்டுகள் பயணித்த மாரி செல்வராஜ், தனது முதல் பட்டத்திலேயே தென்மாவட்டங்களில் நிலவும் சாதிய அடக்குமுறையை அம்பலப்படுத்தி, அதற்கான தீர்வினையும் விடையாக்கி இருந்தார். இதனால் தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி பழம்பெரும் இயக்குநர்களும், உச்ச நடிகர்களும் மாரி செல்வராஜை கூர்ந்து கவனித்தபோது, கர்ணன் என்னும் தனது அடுத்த படைப்பினை திரையுலகுக்கு அளித்தார். பல ஆண்டுகளுக்கு முன்பாக தென்மாவட்டத்தில் அரங்கேறிய ஒரு கொடூரத்தை இந்தப் படம் உரக்கப் பேசியிருந்தது. கடந்த 2023ஆம் ஆண்டில், மாமன்னன் என்னும் திரைப்படத்தினை அளித்த மாரி செல்வராஜ் தாழ்த்தப்பட்ட ஒருவரை சபாநாயகராக மாற்றி, சமூக நீதி பேசும் அரசை முன்னிலைப் படுத்தியிருந்தார். இதன்பிறகு…

Read More

விமர்சனங்களை கண்டு காங்கிரஸ் கட்சி அஞ்சாது எனவும், காமராஜர் வழியில் செயல்பட்டார்கள் என பெயரை பெறுவதும்தான் தங்களது லட்சியம் என காங்கிரஸ் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர்களாக பதவியேற்றுள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர்  சென்னை கிண்டியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நினைவிடம், அண்ணல் காந்தி நினைவிடம், ராஜாஜி நினைவிடம் முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் நினைவிடம் உள்ளிட்ட நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்கள். அவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.. பின்னர் செய்தியாளரிடம் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எங்கள் இருவரையும் நம்பி, தமிழ்நாடு முதலமைச்சருடன் கூட்டணி அமைத்து அமைச்சர் பதவியை எங்களுக்கு வழங்கியுள்ளனர்.. இதற்கு ராகுல் காந்திக்குத்தான் முதலில் நன்றி சொல்லவேண்டும். 59 வருடங்களாக ஆட்சியிலும் அதிகாரத்திலும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று…

Read More

தேர்தல் தோல்விக்குப் பின்பாக நாளை நடைபெறும் திமுக இளைஞரணி கூட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக இளைஞரணி  அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக இளைஞரணி  மாவட்ட _ மாநில _ மாநகர  அமைப்பாளர் துணை அமைப்பாளர் ஆலோசனைக்கூட்டம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது. ஜூன் மூன்றாம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது தொடர்பாகவும் , அதேபோல திமுக இளைஞரணி மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். அண்மையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தினை  கூட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

Read More