6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டோங்ரே பிரவீன் உமேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஐ.ஜி–யாக செந்தில் குமாரியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அசோக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அக்சய் அனில் வாக்ரே, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக லலித்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக ஷியாமளா தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளனார்.
