பல்வேறு துறைகளில் போடப்பட்ட 100க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்த பிறகு மே 13 முதல் மே 22ம் தேதி வரை வெளியிடப்பட்ட குறுகிய கால டெண்டர்களை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. குறுகிய டெண்டர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பல்வேறு டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, ஊரக வளர்ச்சித் துறை, போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட துறைகளில் போடப்பட்ட 100க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை மாநகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் குறுகிய கால டெண்டர் வெளியிட்ட அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
