Close Menu
    What's Hot

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தமிழக மத்திய அரசு பணி இனி தமிழர்களுக்கே கிடைக்கும்… அரசின் புதிய அறிவிப்பு!
    Featured

    தமிழக மத்திய அரசு பணி இனி தமிழர்களுக்கே கிடைக்கும்… அரசின் புதிய அறிவிப்பு!

    Editor web1By Editor web1May 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 05 22 171730
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய அரசு பணிகளில் மாநில மொழி அறிவை அடிப்படைத் தகுதியாக சேர்க்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன்  தெரிவித்துள்ளார்.

    வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஒன்றிய அரசுப் பணிகளில் மாநில மொழி அறிவு அடிப்படைத் தகுதியாகச் சேர்க்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (SSC) உதவித் தணிக்கை அலுவலர் மற்றும் உதவிக் கணக்கு அலுவலர் பதவிகளுக்கான பணி நியமன அறிவிப்பில் இத்தகுதி சேர்க்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. நமது தொடர் கோரிக்கைக்குக் கிடைத்த பெரும் வெற்றி. தமிழ்நாட்டின் குரலுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. ஒன்றிய அரசு பணிகளில் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் நியமனங்களை பெறுவது, அலுவலக சேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது.

    மாநில மொழி கட்டாயம்

    மாநில அளவிலான நியமன தேர்வு நடைபெற வேண்டும் என்றும், மாநில மொழி அறிவு கொண்டவர்கள் பணி நியமனங்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதற்குரிய வகையில் கல்வித் தகுதி உள்ளிட்ட நிபந்தனைகள் இடம் பெற வேண்டும் என்றும் தொடர்ந்து பலமுறை வலியுறுத்தி வந்துள்ளேன். தற்போது மத்திய ஊழியர் தேர்வாணையம்  (Government of India, Ministry of Personnel, Public Grievances & Pensions, Department of Personnel and Training, Staff Selection Commission) 21.05.2026 அன்று வெளியிட்டுள்ள பணி நியமன அறிவிக்கையில் உதவித் தணிக்கை அலுவலர் (மாநிலப் பதவி), உதவி கணக்கு அலுவலர் (மாநிலப் பதவி) ஆகிய பணிகளுக்கு மாநில மொழி அறிவு தேவையென்றும், அதற்கு 10 ஆம் வகுப்பு மட்டத்திலான அரசு தேர்வு ஆணையங்கள் வழங்கியுள்ள சான்றிதழ்கள் தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அங்கேயே பணிய நியமனம் பெறுகிற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்துதான் மாநில மொழிக்கான குரல் வலுவாக எழுப்பப்பட்டது.

    Screenshot 2026 05 22 170253

    எனது கோரிக்கை நிறைவேறி உள்ளது. தமிழ்நாட்டில் இருந்துதான் மாநில மொழிக்கான குரல் வலுவாக எழுப்பப்பட்டது. இது குறிப்பிடத்தக்க வெற்றி. ஒன்றிய அரசின் இதர பணிகளுக்கும் பதவிகளுக்கும் இதே போன்ற நியமன அறிவிக்கைகள் விரைவில் வெளியாக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இந்தப் பிரச்னையை தொடர்ந்து வலியுறுத்திய அகில இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பிரிவு அலுவலர் மற்றும் ஊழியர் சங்கங்கள், வருமான வரித்துறை ஊழியர் சங்கம், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகல் குவாரிகளில் சோதனைக்கு உத்தரவு: அமைச்சர் பிரபு அதிரடி!
    Next Article 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து- தமிழ்நாடு அரசு அதிரடி!
    Editor web1
    • Website

    Related Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.