Close Menu
    What's Hot

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஜனநாயகன் பட விவகாரம்: 9 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!
    தமிழ்நாடு

    ஜனநாயகன் பட விவகாரம்: 9 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!

    Editor TN TalksBy Editor TN TalksMay 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    HC
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜனநாயகன் திரைப்படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன், பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தணிக்கை வாரியத்தின் நடவடிக்கை காரணமாக படம் வெளியாவதில் வழக்கு, தாமதம் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்தது. இதனிடையே தணிக்கை மறு ஆய்வு குழு முன்பு படம் ஆய்வில் உள்ள நிலையில், ஏப்ரல் 3ம் தேதி சட்டவிரோதமாக ஜனநாயகன் திரைப்படம் இணையதளத்தில் வெளியானது.

    HC 1

    இதுதொடர்பாக படத்தை தயாரித்த கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் அளித்த புகாரில், 21 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, 9 பேரை கைது செய்தனர். இவர்கள் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள், கோடை விடுமுறை கால நீதிபதி ஆர்.சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது.

    கைதாகி 42 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளதாகவும், முக்கிய குற்றம்சாட்டப்பட்ட சிலர் மீது ஏற்கனவே குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும், ஆர்வத்தில் தான் படத்தை பார்த்ததாகவும்,   சமூக வலைதளங்களில் பகிரவில்லை என்றும் இதனால், ஜாமின் வழங்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில், வாதிடப்பட்டது.

    ஜாமின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்த ஜனநாயகன் படத்தை தயாரித்த கே.வி.என். புரொடக்சன்ஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், 400 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படத்தில், 2000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து உள்ளதாகவும்,  சட்டவிரோதமாக இணையத்தில் படம் வெளியானதால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது. மேலும், ஆர்வத்தில் திரைப்படத்தை பார்த்துவிட்டோம் என்று மனுதாரர்கள் கூறுவதை ஏற்று கொள்ள முடியாது என்றும் கைதானவர்களுக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க கூடும் என்றும் எனவே ஜாமின் வழங்க கூடாது என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் எவருக்கும் ஜாமின் வழங்க கூடாது என காவல்துறை தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஜனநாயகன் படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தொடர்பான ஆதாரங்கள் மற்றும் வழக்கு விசாரணை ஆவணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.சக்திவேல், 9 பேரின் ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article22 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
    Next Article கு.ப.கிருஷ்ணனுக்கு புதிய பொறுப்பு!- நகர்ப்புற மேம்பாட்டு வாரியத் தலைவராக நியமனம்!
    Editor TN Talks

    Related Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    July 17, 2026

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    July 17, 2026

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    பிக் பாஸ் சீசன் 10!. முன்கூட்டியே களமிறங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.