Close Menu
    What's Hot

    ஐபிஎல் : “ஈசாலா கப் நம்தே”..! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு..!

    நிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ரூ.3 கோடிப்பே… நெருங்கும் பக்ரீத்; ஆடுகள் விற்பனை அமோகம் – இது ராணிப்பேட்டை நிலவரம்
    தமிழ்நாடு

    ரூ.3 கோடிப்பே… நெருங்கும் பக்ரீத்; ஆடுகள் விற்பனை அமோகம் – இது ராணிப்பேட்டை நிலவரம்

    Editor TN TalksBy Editor TN TalksMay 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 goat
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இஸ்லாமியர்களின் பக்ரித் பண்டிகை நெருங்கும் நிலையில்,  ராணிப்பேட்டை வார சந்தையில் ரூ.3 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை நடந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மற்றும் பக்ரீத் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுவதுண்டு. ரமலான் என்பது ஈகைத் திருநாள் எனவும், பக்ரீத் பண்டிகை தியாகத் திருநாள் எனவும் கூறப்படுகிறது.

    இறைத்தூதர் இப்ராஹிம், தனது மகன் இஸ்மாயிலை, இறைவனுக்காக அறுத்துப் பலியிட முற்பட்ட நிகழ்வாக பக்ரீத் பண்டிகை என்னும் தியாகத் திருநாள் கொண்டாடப் படுகிறது.

    இஸ்லாமியர்களின் துல்ஹஜ் மாதம் 10ஆம் நாளில் பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிட்டு, அதன் இறைச்சியை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் வழங்குவார்கள்.

    தமிழ்நாட்டில் வரும் 28ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இதற்காக வாரச் சந்தைகளில் ஆடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

    006 goat A

    ராணிப்பேட்டை நகராட்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுவதுண்டு. இன்று காலை தொடங்கிய வாரச்சந்தையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் பெருமளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான வாகனங்களில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வியாபாரிகள் பொதுமக்கள் என 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இன்று அதிகாலை முதலே சந்தையில் குவிந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர். வெள்ளாடு, மற்றும் செம்மறி ஆடுகள் அனைத்தும் ரூ. 5 ஆயிரம் ரூபாய் முதல் ரூ. 40,000 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகளின் அமோகமாக நடைபெற்றது. ஆடுகளை வாங்கிய வியாபாரிகள் அவற்றை வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

    ஒட்டுமொத்தமாக சந்தையில் 5 மணி நேரம் நடைபெற்ற விற்பனையில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தில் நாளை முதல்  சுங்கக் கட்டணம் மீண்டும் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிருப்தி
    Next Article சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஐ.பி.எஸ் – காவல்துறை மரியாதையுடன் பொறுப்பேற்பு
    Editor TN Talks

    Related Posts

    நிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?

    June 1, 2026

    மீண்டும் உயர்ந்தது சிலிண்டர் விலை; ரூ.3,283க்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை

    June 1, 2026

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஐபிஎல் : “ஈசாலா கப் நம்தே”..! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு..!

    நிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    மீண்டும் உயர்ந்தது சிலிண்டர் விலை; ரூ.3,283க்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.