Close Menu
    What's Hot

    தெருநாய்களுக்கு இனி இந்த இடங்களில்தான் உணவளிக்க வேண்டும்!. சென்னையில் புதிய கட்டுப்பாடு!

    சட்டப்படிதான் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்…  உயர்நீதிமன்றம் ஏற்பு – வழக்கு முடித்து வைப்பு!

    பழனி கோவில் நில விவகாரம்… யாரைக் காப்பாற்றுகிறார்கள் அமைச்சர்கள்? – திமுக கேள்வி  

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தவெக அமைச்சரவையில் விசிக, IUML –  புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை – ஆ.ராசா கடும் தாக்கு
    Featured

    தவெக அமைச்சரவையில் விசிக, IUML –  புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை – ஆ.ராசா கடும் தாக்கு

    Editor TN TalksBy Editor TN TalksMay 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 a.raja A
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக கூட்டணிக் கட்சிகளான விசிகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தவெக அமைச்சரவையில் பங்கேற்பதை திமுக விரும்பவில்லை என்பதை திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் பதிவு அம்பலமாக்கியுள்ளது.

    திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன், திமுக கூட்டணிக்கு எதிராகக் களம் கண்ட தமிழக வெற்றிக் களம் ஆட்சி அமைத்துள்ளது.

    முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ச.ஜோசப் விஜய், தனது அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளை இணைத்துக் கொண்டுள்ளார்.

    தேர்தல் முடிவுகள் வெளியானதுமே, திமுகவுடன் சொல்லிக் கொள்ளாமலேயே காங்கிரஸ் ஓடோடிச் சென்று தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. மற்ற கட்சிகள் திமுகவுடன் நடத்திய ஆலோசனைக்கு பின்னரே தங்களின் ஆதரவைத் தெரிவித்தன.

    அதுவும் நிபந்தனையற்ற ஆதரவை வெளியில் இருந்தே தருவதாக அறிவித்தன. ஆயினும் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் விடுத்த அழைப்பை ஏற்று இந்திய யூன்யன் முஸ்லிம் லீக்கும், விசிகவும் அமைச்சரவையில் இணைவதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.

    விசிகவில் முன்னணி நிர்வாகிகளின் அழுத்தத்தின் காரணமாகவே, திருமாவளன் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆயினும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்னும் விசிகவின் முழக்கம் இன்று நனவாகி இருக்கிறது.

    ஆனால், விசிகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தவெக அமைச்சரவையில் இணைந்ததை திமுக தலைமை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.

    இதனை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது, திமுகவின் துணைப் பொது செயலாளரான ஆ.ராசா வெளியிட்டுள்ள ஒரு பதிவு.

    004 a.raja

    முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி — புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை! பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’ த்திற்கு காத்திருப்போம் ; என்றாலும் களமாடுவோம் ! வெற்றி நமக்கே!!

    என ஆ.ராசா பதிவிட்டுள்ளார். பூ முடித்தவனை புறந்தள்ளி புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை என்னும் வரிகள், விலை மாதரைப் போல் விசிகவையும், ஐயூஎம்எல்லையும் மிகவும் அவமானப்படுத்தும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    விசிக என்பது தலித் மக்களுக்கான இயக்கமாக உள்ள நிலையில், தலித்தான ஆ.ராசாவை வைத்தே இப்படி திமுக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    அதே நேரம் ஆ.ராசாவின் பதிவுக்கு நெட்டிசன்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

    முன் ஏற ஏணி தேடியவர்கள், இன்று உயரத்தில் இன்னோர் ஏறும்போது ஏணியையே எரிக்க நினைக்கிறார்கள். மூட சாதியை நொறுக்க சிறுத்தை களமிறங்கினால், அது யாரின் வாசலிலும் கட்டுப்பட்ட நாய் அல்ல. விசில் சத்தமல்ல அது; விடுதலையின் அறிவிப்பு. பூ முடித்தவன் புறந்தள்ளப்படவில்லை; பூவை தனக்கே சொத்தாக்க நினைத்த அகந்தையே புறந்தள்ளப்படுகிறது. காத்திருங்கள். காலமும் பேசும். தேசமும் காணும். வர்த்தமானமும் எழுதும். சமூகநீதி உங்கள் கையொப்பத்தில் பிறந்ததல்ல; ஒடுக்கப்பட்டவர் அதிகாரத்தில் அமரும் போது அதன் அர்த்தம் நிரூபிக்கப்படும். வெற்றி வன்மத்துக்கல்ல. வெற்றி பிரதிநிதித்துவத்திற்கே.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதலமைச்சரின் சிறப்பு ஆலோசர்களான ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி – யார் இவர்கள்?
    Next Article தமிழகத்தில் நாளை முதல்  சுங்கக் கட்டணம் மீண்டும் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிருப்தி
    Editor TN Talks

    Related Posts

    தெருநாய்களுக்கு இனி இந்த இடங்களில்தான் உணவளிக்க வேண்டும்!. சென்னையில் புதிய கட்டுப்பாடு!

    July 17, 2026

    சட்டப்படிதான் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்…  உயர்நீதிமன்றம் ஏற்பு – வழக்கு முடித்து வைப்பு!

    July 17, 2026

    பழனி கோவில் நில விவகாரம்… யாரைக் காப்பாற்றுகிறார்கள் அமைச்சர்கள்? – திமுக கேள்வி  

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தெருநாய்களுக்கு இனி இந்த இடங்களில்தான் உணவளிக்க வேண்டும்!. சென்னையில் புதிய கட்டுப்பாடு!

    சட்டப்படிதான் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்…  உயர்நீதிமன்றம் ஏற்பு – வழக்கு முடித்து வைப்பு!

    பழனி கோவில் நில விவகாரம்… யாரைக் காப்பாற்றுகிறார்கள் அமைச்சர்கள்? – திமுக கேள்வி  

    பெண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!. மாநில அளவில் புதிய வேலைவாய்ப்பு திட்டம்!. தமிழக அரசு அதிரடி!

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.