Author: Editor TN Talks

பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து செயல்படும் ஜாக்டோ ஜியோ பேரமைப்பு முதலமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பில் பாராட்டுகளும் வாழ்த்துகளும். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய குறுகிய காலத்தில் தங்கள் தலைமையில் ஆட்சி அமைய விரும்பியே மக்கள் வாக்களித்துள்ளனர். மத்திய அரசு வழக்கமாக தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதிய ஆட்சிக்கு தடையை ஏற்படுத்திய தருணத்தில், தவெக ஆட்சி அமைக்க இடதுசாரிகள் நிபந்தனையற்ற ஆதரவளிக்க முன் வந்ததால் விசிக போன்ற முற்போக்கான கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைந்திருப்பதின் மூலம் தமிழ்நாட்டின் ஜனநாயகம் வென்றுள்ளது. தவெக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளபடி அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கனவான பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட…

Read More

சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் இதுவரை 15 கோரிக்கைகள் வைத்தும் ஒரு கோரிக்கையை கூட நிறைவேற்ற வில்லை என காங்கிரஸ் மாநகராட்சி மன்றக் குழு தலைவர் திரவியம் தெரிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி வளாகத்தில் காங்கிரஸ் மாமன்ற குழு தலைவர் திரவியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;- கடந்த மூன்று நாட்களாக ஒரு மாமன்ற உறுப்பினராக மாநகராட்சி ஆணையரை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன், ஆனால் என்னால் சந்திக்க முடியவில்லை. இன்றும் கூட அவரது இடத்தில் அவர் இல்லை. கடந்த மூன்று மாதங்களாக மாமன்ற கூட்டம் கூட்டப்படவில்லை. ஒரு மாதம் மாமன்ற கூட்டம் கூட்டப்படவில்லை என்றாலே மக்கள் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பது நாடறிந்தது. தேர்தல் நடத்தை விதி முடிந்த நிலையில், இந்த மாதம் மாமன்ற கூட்டம் கூட்டப்பட வேண்டும். அது ஏன் கூட்டப்படவில்லை? என்ற கேள்வி கேட்பதற்காக மேயர் மற்றும் ஆணையரை சந்திக்க வந்தேன். அவர்கள் அவர்களது இருக்கைகளில் இல்லை.…

Read More

CBSE அமைப்பின் அறிவிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு குரல் காட்டியுள்ளார். அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது;- கடந்த 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், CBSE அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை, சிறுவயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன். குறிப்பிட்ட 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த வாரம், மே 15, 2026 அன்று, CBSE அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும்…

Read More

காங்கிரசுக்கு அடிமையாக இருந்ததில்லை, அதற்கான அவசியமும் இல்லை என கரூர் எம்.பி ஜோதிமணி திடீர் என சீற்றம் காட்டியிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ஜோதிமணி எம்.பி, 2021 ல் திமுக ஆட்சிக்கு வந்த ஒரே வாரத்தில் ஒரு முக்கியப் பிரச்சினை தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் பிரச்சினையை முன்னிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவானது என்றும், அன்றிலிருந்து தொடங்கி சில நேரங்களில் ,சில விசயங்களில் அன்றைய கூட்டணி கட்சியான திமுக வோடு முரண்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. முரண்பட்டிருக்கிறேன். ஆதரிக்க வேண்டிய, பாராட்டப்பட வேண்டிய சூழலில் ஆதரித்திருக்கிறேன். பாராட்டியிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். கூட்டணி என்பதற்காக எல்லாவற்றையும் ஆதரித்ததில்லை. எதிர்க்க வேண்டும் என்பதற்காக கண்மூடித்தனமாக எதிர்த்ததும் இல்லை. அதுதான் ஜனநாயகம் . கூட்டணி தர்மம். இந்தப் புரிதலோடுதான் கடந்த ஐந்து ஆண்டுகள் கழிந்தன. இப்பொழுதும் அப்படித்தான் இருக்க முடியும். அதுதான் எல்லோருக்கும் நல்லது எனவும், எந்தக் கட்சிக்கும்,…

Read More

ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களுக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்ததால் பரபரப்பு நிலவியது. 60 வார்டுகளைக் கொண்ட ஈரோடு மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் இன்று காலை தொடங்கியது. துணை மேயர் செல்வராஜ், ஆணையர் அர்பித் ஜெயின் உள்பட மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் தரப்பில் இருந்து வெற்றி பெற்று விட்டு தவெகவுக்கு மாறிய சபுராமா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டி திமுகவினர் கூச்சலிட்டதால் பரபரப்பு. ஏற்பட்டது. மேலும் 20 வது வார்டு திமுக கவுன்சிலர் மோகன், பெண் கவுன்சிலர் என்றும் பாராமல் அவரை விரலை நீட்டி மிரட்டினார். அப்போது திமுகவை சேர்ந்த சில கவுன்சிலர்கள் அவரை இழுத்து சென்று அமர வைத்தனர். திமுக கவுன்சிலருக்கும் காங்கிரஸிலிருந்து வெற்றி பெற்று தமிழக வெற்றி விளக்கத்திற்கு சென்ற பெண்…

Read More

ரூ.50ஆயிரம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்துள்ள முதலமைச்சரின் அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக, விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த வாரம் நாங்கள் முதலமைச்சரை சந்தித்தபோது விடுத்த கோரிக்கையின்படி விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியதை வரவேற்றார். முதலமைச்சரின் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து பேசிய பி.ஆர்.பாண்டியன், சட்டமன்ற தேர்தலின் போது தவெக தரப்பில், இன்றைய முதலமைச்சர் ச.ஜோசப்விஜய், சிறுகுறு விவசாயிகளுக்கு 100% கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் பெரு விவசாயிகளுக்கு 50% சதவீதம் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்கிற வாக்குறுதியை தெரிவித்தார். இதன் மீது நம்பிக்கை வைத்துதான் விவசாயிகள் தவெகவுக்கு வாக்களித்துள்ளனர். இதனால் ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலை பின்பற்றி, நிதி சுமையை காரணம் காட்டி, விவசாயிகளுக்கு…

Read More

அதிமுக என்னும் பேரியக்கத்தை சீண்டாமல், போய் ரீல்ஸ் போட்டு விளையாடுங்க என தவெகவை அதிமுக  கலாய்த்துள்ளது. அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில்,  தவெக ஆச்சரியக்குறிகளே! இப்பதான் First Time Government Form பண்ணி சீட்ல உக்காந்திருக்கீங்க.. அதுக்குள்ள 50 வருஷ வரலாறு இருக்குற அதிமுக-வ பாத்து விரல் நீட்டுறதா? தலைமை செயலகத்துல சபாநாயகரை பாத்து முறைப்படி ராஜினாமா லெட்டர் குடுக்கலாம்.. ஆனா ராஜினாமா செஞ்ச அடுத்த நிமிஷமே உங்க அமைச்சரை பார்த்து இணைப்பு விழா நடத்தக் கூடாது! தார்மீகப் பொறுப்புன்னு சொன்னா சபாநாயகர் கிட்ட போயிருக்கணும், அமைச்சர எதுக்கு சந்திக்கணும்? ​இதான் நீங்க சொல்ற சுயவிருப்பமா? இல்ல, பதவி + பவர் காமிச்சு பின்னால நடந்த Backdoor Deal-ஆ? குதிரை பேரம் இப்போ க்ளியரா மக்களுக்கு வெட்ட வெளிச்சம் ஆகிடுச்சு பாஸ்! தேர்தல்ல ஜெயிக்கிறதும் தோக்குறதும் சகஜம் தான்.. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா காலத்துல இருந்து எத்தனையோ சரிவை…

Read More

திருச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் 9 மாதத்தில் இறந்துபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, சுருட்டப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் (62). இவருக்கு 3மகள்களும், 1மகனும் உள்ளனர். இவருடைய மூத்த மகள் அம்ருதா பிரியதர்ஷினி (27). பி.எஸ்.சி பட்டதாரியான இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருச்சியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் தங்கி வேலைக்காக படித்து வந்துள்ளார். அப்போது தொட்டியம் மேலத்தெருவை சேர்ந்த மகேஷ்குமார் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி உள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 9மாதங்களுக்கு முன்பு இருவரும் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின் அம்ருதா பிரியதர்ஷினி, தொட்டியம் மேலத்தெருவில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (25.5.2026) அம்ருதாவின் தந்தை கேசவன் வழக்கம்…

Read More

இந்தியாவில் பலகட்ட பிரச்னைகள் எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலர் மௌனம் காத்து வருகின்றனர். அந்த வகையில் நீட் தாள் கசிவு தொடங்கி, பெட்ரோல் டீசல் விலை உயர்வு வரை பல பிரச்னைகள் மக்கள் மத்தியில் மேலோங்கி காணப்படுகிறது. அப்படி இருக்க, எதிர்க்கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவின் எந்த தலைவர்களும் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர். இதனை விமர்சிக்கும் விதமாக, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ NEET தாள் கசிவில் லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு சிதறுகிறது… 4வது முறையாக பெட்ரோல் விலை உயர்ந்து சாமானிய மக்கள் தினமும் சுமையடிக்கிறார்கள்… ஆனா நம்ம “எப்போதும் பேசுவோம்” தலைவர்கள் மட்டும் Deep silence mode-ல! உதயநிதி ஸ்டாலின்… பழனிசாமி… ஒருத்தராவது ஒரு வார்த்தை சொன்னாங்களா? மக்கள் பிரச்னை வந்தா மவுனம்… அரசியல் வந்தா மைக்கை பிடிக்க போட்டி! தமிழக மக்கள் கேட்கிறார்கள்:…

Read More

சட்டமன்ற தேர்தல் முடிந்ததில் இருந்தே தமிழக அரசியலில் புயல் காற்று வீசிக் கொண்டே இருக்கிறது. யாரும் எதிர்பாரா வண்ணம் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். எதிர்கட்சியாக திமுக இருக்க, 50 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியமிக்க கட்சியான அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. எடப்பாடி பழனிசாமி ஆதரவு, சி.வி.சண்முகம், எஸ்.பி வேலுமணி ஆதரவு என எம்.எல்.ஏக்கள் இரு புறமாக பிரிந்தனர். பல எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்கு சரியான தலைமை இல்லாததால், யாரை தலைமையாக ஏற்றுக் கொள்வது என்ற சிக்கலில் சிக்கி தவித்து, தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். நேற்று, எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்களான தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா, மதுராந்தகம் எம்.எல்.ஏ குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகியோர் கூண்டோடு தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தலைமை…

Read More