Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»பயிர்க்கடன் தள்ளுபடி; பயனளிக்காத முதலமைச்சரின் அறிவிப்பு- ஏமாற்றம் அளித்துள்ளதாக பி.ஆர்.பாண்டியன் வேதனை
    அரசியல்

    பயிர்க்கடன் தள்ளுபடி; பயனளிக்காத முதலமைச்சரின் அறிவிப்பு- ஏமாற்றம் அளித்துள்ளதாக பி.ஆர்.பாண்டியன் வேதனை

    Editor TN TalksBy Editor TN TalksMay 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 pr pandiyan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரூ.50ஆயிரம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்துள்ள முதலமைச்சரின் அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக, விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த வாரம் நாங்கள் முதலமைச்சரை சந்தித்தபோது விடுத்த கோரிக்கையின்படி விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியதை வரவேற்றார்.

    முதலமைச்சரின் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து பேசிய பி.ஆர்.பாண்டியன், சட்டமன்ற தேர்தலின் போது தவெக தரப்பில், இன்றைய முதலமைச்சர் ச.ஜோசப்விஜய், சிறுகுறு விவசாயிகளுக்கு 100% கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் பெரு விவசாயிகளுக்கு 50% சதவீதம் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்கிற வாக்குறுதியை தெரிவித்தார்.

    இதன் மீது நம்பிக்கை வைத்துதான் விவசாயிகள் தவெகவுக்கு வாக்களித்துள்ளனர். இதனால் ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலை பின்பற்றி, நிதி சுமையை காரணம் காட்டி, விவசாயிகளுக்கு பயனளிக்காத வகையில் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டிருப்பது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

    இத்தகைய அறிவிப்புகள் கடன் சுமையில் இருக்கும் விவசாயிகளை காப்பாற்ற உதவாது. மாநில அரசுகள் தனது நிதியிலிருந்து செயல்படுத்தும் கடன் தள்ளுபடி உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் பொருந்தாது என்பதை முதலமைச்சர் விஜய் உணர வேண்டும். கடன் வசூல் நடவடிக்கையை கடந்த காலங்களைப் பின்பற்றி நிறுத்த்தி வைப்பதோடு, நடப்பாண்டுக்காண புதிய கடன் வழங்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.

    மாநில அரசின் நிதி ஆதாரங்களை பெருக்கிக் கொண்டு கடன் தள்ளுபடி நடவடிக்கையை தொடர வேண்டும். அதுவரையிலும் தற்போதைய அறிவிப்பை நிறுத்தி வைத்து மறுபரிசீலினை செய்யுமாறு தமிழக முதலமைச்சரை பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு? கோடை வெயில் தாக்கத்தால் பெற்றோர், மாணவர்கள் எதிர்பார்ப்பு!
    Next Article “தமிழ்நாடு என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்; மேகதாது அணை கட்டியே தீருவோம்!. டி.கே.சிவகுமார்!
    Editor TN Talks

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.