Close Menu
    What's Hot

    தவெக அரசின் முதல் பட்ஜெட்: முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?- மக்களின் எதிர்பார்ப்புகள்!

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சிறப்புக் கட்டுரைகள்»தவெக அரசின் முதல் பட்ஜெட்: முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?- மக்களின் எதிர்பார்ப்புகள்!
    சிறப்புக் கட்டுரைகள்

    தவெக அரசின் முதல் பட்ஜெட்: முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?- மக்களின் எதிர்பார்ப்புகள்!

    Editor web1By Editor web1July 15, 2026Updated:July 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் பட்ஜெட், ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளநிலையில், பட்ஜெட் குறித்து பெரும் எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    கடந்த ஜூன் 18-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம், விவாதங்களுக்குப் பிறகு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது 2026-27-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காகச் சட்டப்பேரவை மீண்டும் கூட உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமார் 1½ மாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பட்ஜெட் தாக்கல் அட்டவணை:

    நிதி அமைச்சர் மரிய வில்சன் முதல் நாளில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார். அடுத்த நாள், வேளாண் துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.  இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் மற்றும் துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறும்.

    மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் வாக்குறுதிகள்:

    தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பல இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மக்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கும் சில முக்கிய வாக்குறுதிகள் உள்ளன. அவை

    மகளிர் உரிமைத்தொகை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்ற அறிவிப்பு.

    கல்வி மற்றும் மருத்துவம்: ரூ.20 லட்சம் வரையிலான கல்விக்கடன், குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு மற்றும் ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை.

    வீட்டு வசதி மற்றும் இதர சலுகைகள்: ஆண்டுக்கு 6 இலவச எல்.பி.ஜி. சிலிண்டர்கள், திருமணத்திற்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை.

    ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள்:

    ஏற்கனவே சில முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார். அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி, பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். 200 யூனிட் மின்சாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவை அனைத்தையும் கருத்தில் கொள்ளும்போது, தவெக அரசின் இந்த முதல் பட்ஜெட் குறித்து பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!
    Editor web1
    • Website

    Related Posts

    ”முதுமையில் மறதி நோய் தலைவிதி அல்ல” – மருத்துவ உலகம் சொல்லும் தீர்வு…

    July 13, 2026

    இயல்பானதாகிவிட்டதா ஊழல்? தார்மீக பிம்பங்களும் அரசியல் ‘வாஷிங் மெஷின்’ கலாச்சாரமும்!

    July 11, 2026

    இரா. செழியன்: எதார்த்த சினிமாவின் தனித்துவ அடையாளம்!

    July 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக அரசின் முதல் பட்ஜெட்: முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?- மக்களின் எதிர்பார்ப்புகள்!

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    உலக கோப்பை களத்தில் சர்ச்சை..!! அர்ஜென்டினாவுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு அலை..!! என்ன தெரியுமா..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.