தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மூவர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை பெருநகரக் காவல் ஆணையராக இருந்த அருண், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்த நிலையில், தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாது. இதேபோன்று காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டி.எஸ்.அன்பு ஐபிஎஸ் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாகவும், , நிர்வாக ஏ.டி.ஜி.பி.யாக மகேஷ் குமார் தயாளும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக தற்போது சந்தீப் ராய் ரத்தோர் பதவி வகிக்கும் நிலையில், அவருக்கு அடுத்தபடியாக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யான டி.எஸ். அன்பு உயரிய பதவியை வகிக்கிறார்.
