Close Menu
    What's Hot

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»“‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி
    அரசியல்

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    Editor web2By Editor web2June 2, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vijay EPS
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தை முன்வைத்து அதிமுகவை விமர்சித்த தவெக ஐடி விங்கிற்கு, அதிமுக தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தவெக ஐடி விங் வெளியிட்ட விமர்சனப் பதிவுக்கு பதிலளித்துள்ள அதிமுக ஐடி விங், “‘2018 மே மாதம் நடந்த நிகழ்வு பற்றி 2026-ல் ஃபோர்ஸ் ஆக கேள்வி கேட்கும் ஆச்சரியக்குறிகளை பார்த்ததுண்டா?. அவ்வளவு தில் இருந்தால், ‘மெர்சல்’, ‘மாஸ்டர்’ படங்கள் ரிலீஸ் ஆக வேண்டி அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு ஊர்ந்து வந்த உங்கள் தலைவர் இதே கேள்வியைக் கேட்டிருக்கலாமே?’ எனக் கேள்வி எழுப்பி உள்ளது.

    தவெக அட்டாக் என்ன?

    முன்னதாக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பொறுப்பேற்றவர்கள் யார், காவல்துறை யாரின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதைக் குறித்து தவெக ஐடி விங் கேள்வி எழுப்பியிருந்தது.

    இதுகுறித்து  தவெக ஐடி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ” தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினரே. அப்போது அந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர் யார்? காவல் துறை யார் கையில் இருந்தது? யாருக்கும் தெரியாமல் யாருடைய உத்தரவும் இல்லாமலே அவ்வளவு பெரிய துப்பாக்கிச் சூடு நடந்ததா? அப்போது முகத்தை மூடித் தூங்கியவர், முதல்வராக இருந்தாரா?

    தமிழகமே அதிர்ந்து அலறிய அவ்வளவு பெரிய சம்பவத்தை டிவி பார்த்துத் தெரிந்துகொண்டதாக அப்போது சொன்னவர் யார்? தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்று முதல்வர் பதவியைத் தட்டிச் சென்றவர்தான் அவர் என்பது தமிழகம் அறியாததா?

    எம்.ஜி.ஆரின் மக்கள் சக்தியை, ஜெயலலிதாவின் கட்டுப்பாடான தொண்டர்கள் கொண்ட சக்தியை யாரிடமோ அடகு வைத்து, மற்றும் பலர் கட்சியாக்கியவர், தீய சக்தி தி.மு.க.வுடன் சேர்ந்து தீர்ந்துபோன சக்தியாக்கியவர், உள்நோக்கத்துடன் விஷம் கக்குவதைத் தமிழக மக்கள் அறியாதவர்களா என்ன?

    மக்கள் பாதிப்பைத் தன் பாதிப்பாக உணரும், மக்கள் விரும்பும் முதல்வரைத் தமிழகம் பெற்றுள்ளது. மக்கள் மீது அக்கறை கொண்டதால்தான் உடனடி நடவடிக்கையில் காவல் துறையை ஈடுபடச் செய்கிறார். சட்டம் ஒழுங்கைக் கட்டிக் காக்க, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபற்றி எதையும் அறிந்துகொள்ளாத மிஸ்டர் தீர்ந்துபோன சக்தி, அறியாமையில் அறிக்கை விட்டுக் கூவினால் எப்படி?

    கட்சியைக் கலகலக்க வைத்து, அடகு வைத்துக் கரைத்து, அகில உலக அரசியல் கோர்ஸான கட்சியைக் காணாமல் போகச் செய்யும் கோர்ஸ் படித்தவர், அரசியல் பாடம் எடுத்தால் எப்படி?. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துத் தெரிந்துகொண்ட, தீர்ந்துபோன இந்தச் சக்தி, இப்போது டிவிகூட பார்க்காமல், தூர்ந்துபோன சக்தியுடன் ஆட்சி அமைக்கத் திருட்டுத்தனமாகக் கூட்டணி போட்டது போல, அவர்கள் எழுதிக் கொடுத்த அறிக்கையையும் தவழ்ந்துபோய்ப் பெற்று வந்து தன் பெயரில் வெளியிடுகிறாரா?

    பெண்கள் பாதுகாப்பிலும், போதைப் பொருள் தடுப்பிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் மனசாட்சி உள்ள மக்களாட்சியான எங்கள் வெற்றித் தலைவரின் ஆட்சி, தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கும். மக்களுக்காகவே உழைக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தை மையமாகக் கொண்டு தவெக மற்றும் அதிமுக இடையே சமூக வலைதளங்களில் வார்த்தைப் போர் தீவிரமடைந்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா
    Editor web2
    • Website

    Related Posts

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    June 2, 2026

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.