Close Menu
    What's Hot

    அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!

    பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!

    “‘வந்தே மாதரம்’ கட்டாயம்: முதல்வர் விஜய் வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது”

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»குதிரைப் பேரத்தை காங்கிரஸ் அனுமதிக்காது; மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிர்ப்பு -கு.செல்வப்பெருந்தகை அதிரடி
    Featured

    குதிரைப் பேரத்தை காங்கிரஸ் அனுமதிக்காது; மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிர்ப்பு -கு.செல்வப்பெருந்தகை அதிரடி

    Editor TN TalksBy Editor TN TalksMay 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 spkA
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆதரவாகத்தான் தமிழ்நாடு காங்கிரஸ் செயல்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் 62-ஆவது நினைவுநாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    003 spkB

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கு.செல்வப்பெருந்தகை, நவீன இந்தியாவின் சிற்பியான ஜவஹர்லால் நேருவின் சாதனைகளைப் பகிர்ந்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் விடையளித்தார்.

    பிரதமரை முதலமைச்சர்கள் சந்திப்பது வழமையான நடைமுறை என்றும் அதனடிப்படையில் கேரள முதலமைச்சர் சதீஷன் நேற்று சந்தித்ததாகவும் தற்போது முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

    மேகதாது அணை விவகாரத்தில், தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது எனவும், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி செய்வதையெல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்றுக் கொள்ளாது எனவும் விவசாயிகளுக்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம் எனவும் கு.செல்வப்பெருந்தகை உறுதிபட தெரிவித்தார்.

    காங்கிரஸ் ஒருபோதும் குதிரைப் பேரத்தை அனுமதிக்காது. அருணாசலப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிராவில் குதிரைப்பேரத்தை எதிர்த்ததைப் போல கண்டித்ததைப் போல, அதே அளவுகோல்தான்  எல்லா மாநிலத்திலும் எனக் கூறினார்.

    003 spk

    ஐந்து மாநில தேர்தலுக்காக பெட்ரோல்,டீசல், காஸ் விலையை ஏற்றாமல் உள்ளார்கள். தேர்தல் முடிந்ததும் மோடி சர்க்கார் விலையை ஏற்றும் எனச் சொன்னோம். அதை இன்று செய்து கொண்டிருக்கிறார்கள். இதனை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றார்.

    இந்தியாவிலேயே பாஜகவையும், ஆர்.எஸ்.எஸ்.ஐயும் மக்கள் மன்றத்திலும் பாராளுமன்றத்திலும்  எதிர்க்கும் ஒரே தலைவர் ராகுல்காந்திதான் எனத் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீட் தேர்வு வினாத்தாள் கசிவு: சிபிஐ விசாரணை தீவிரம்.. மேலும் இருவர் கைது..!!
    Next Article சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளில் முறைகேடு; ராகுல்காந்தி கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!

    July 15, 2026

    பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!

    July 15, 2026

    “‘வந்தே மாதரம்’ கட்டாயம்: முதல்வர் விஜய் வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது”

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!

    பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!

    “‘வந்தே மாதரம்’ கட்டாயம்: முதல்வர் விஜய் வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது”

    காமராஜரை சொந்தம் கொண்டாடும் தவெக.. இது பொருத்தமில்ல..!! ராஜேந்திர பாலாஜி ஆவேசம்..!!

    தமிழகத்துக்கு மேலும் 150 எம்பிபிஎஸ் இடங்கள்… மருத்துவக் கல்வியில் தொடர்ந்து முன்னிலை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.