Close Menu
    What's Hot

    மறைமுக ஏலத்தில் பருத்தி விற்பனை அமோகம்..!! திருவாரூர் விவசாயிகள் மகிழ்ச்சி..!!

    சிக்கிம் சுரங்கப்பாதை விபத்து.. பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு..!! மீட்புப் பணிகள் தீவிரம்!

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை டெல்லி பயணம் ; பிரதமர் உள்பட தேசிய கட்சி தலைவர்களுடன் சந்திப்பு
    Featured

    முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை டெல்லி பயணம் ; பிரதமர் உள்பட தேசிய கட்சி தலைவர்களுடன் சந்திப்பு

    Editor TN TalksBy Editor TN TalksMay 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    021 cm josep
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரண்டு நாள்கள் பயணமாக நாளை டெல்லி செல்கிறார். முதலமைச்சராக பொறுப்பேற்றபின் அவர் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் இதுவாகும்.

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய், தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த 10ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இந்த நிலையில் இரண்டு நாள் பயணமாக நாளை முதலமைச்சர் ஜோசப் விஜய் டெல்லி செல்ல உள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக தேசிய கட்சித் தலைவர்களை சந்தித்து அவர் வாழ்த்து பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    நாளை காலை 10 மணியளவில் தனி விமானத்தில் டெல்லி செல்லும் முதலமைச்சர் அங்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் வைத்து முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார்.

    அப்போது தமிழகத்தின் நலம் சார்ந்த திட்டங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை முதலமைச்சர் வழங்க உள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், நிலுவையில் உள்ள நிதி விடுவிப்பு, மீனவர்கள் பிரச்சனை, மேகதாது விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் நேரில் கடிதம் வழங்கவுள்ளார்.

    அதனை தொடர்ந்து குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரையும் மரியாதை நிமித்தமாக விஜய் சந்திக்கவுள்ளார்.

    தமிழகத்தில் அரசியல் சூழல் அடுத்தடுத்து பரபரப்பாக காணப்படும் நிலையில், பிரதமர் மோடியுடனான முதலமைச்சர் விஜய்யின் நாளைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமே மாதக் கூட்டம் நடைபெறாது – சென்னை மாநகராட்சி அறிவிப்பு
    Next Article வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முக்கிய நடவடிக்கைகள்: போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆய்வு!
    Editor TN Talks

    Related Posts

    மறைமுக ஏலத்தில் பருத்தி விற்பனை அமோகம்..!! திருவாரூர் விவசாயிகள் மகிழ்ச்சி..!!

    July 22, 2026

    சிக்கிம் சுரங்கப்பாதை விபத்து.. பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு..!! மீட்புப் பணிகள் தீவிரம்!

    July 22, 2026

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மறைமுக ஏலத்தில் பருத்தி விற்பனை அமோகம்..!! திருவாரூர் விவசாயிகள் மகிழ்ச்சி..!!

    சிக்கிம் சுரங்கப்பாதை விபத்து.. பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு..!! மீட்புப் பணிகள் தீவிரம்!

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.