Close Menu
    What's Hot

    மறைமுக ஏலத்தில் பருத்தி விற்பனை அமோகம்..!! திருவாரூர் விவசாயிகள் மகிழ்ச்சி..!!

    சிக்கிம் சுரங்கப்பாதை விபத்து.. பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு..!! மீட்புப் பணிகள் தீவிரம்!

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»மே மாதக் கூட்டம் நடைபெறாது – சென்னை மாநகராட்சி அறிவிப்பு
    அரசியல்

    மே மாதக் கூட்டம் நடைபெறாது – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksMay 26, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    020 chennai corporation
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை மாநகராட்சியின் மே மாதத்திற்கான மாதாந்திர மாமன்ற கூட்டம் நடைபெறாது என மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில், ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தவெகவின் முதலமமைச்சர் ச.ஜோசப் விஜய், நகராட்சி நிர்வாகத்தையும் தன் வசமே வைத்துள்ளார். அதன் கீழ் வரும் சென்னை மாநகராட்சியின் மேயரான பிரியா, இதுவரை முதலமைச்சரை சந்திக்கவில்லை. காலில் முறிவு ஏற்பட்டதன் காரணமாக ஓய்வில் இருந்த அவர் நேற்றுதான் அலுவல் பணியை தொடங்கியுள்ளார்.

    மேயரைப் போலவே, துணை மேயர், நிலைக்குழு தலைவர்கள் மற்றும் மண்டல தலைவர்களும் நிர்வாக பணியில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 153 வார்டுகள் திமுக வசம்தான் உள்ளன. மற்ற 47 வார்டுகள் மட்டுமே அதிமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிடம் உள்ளன.

    பொதுவாக மாதாந்திர கூட்டம் நடத்த வேண்டும் என்றால் 25 நாட்களுக்கு முன்பாகவே மண்டலக்குழு தலைவர்கள் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற வேண்டும், அதில் நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானங்கள் தொடர்பாக அந்தந்த நிலை குழுக்களுக்கு தீர்மானங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

    மண்டல நிலைக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படும். அதன்பின்னர் இருவரின் ஒப்புதலுக்கு பிறகு மன்ற செயலாளர் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் ஆணையர் மாமன்ற கூட்டத்தை நடத்த அனுமதி அளிப்பார்.

    மேலும் மாமன்ற கூட்டத்தை நடத்துவதற்கு முன்பு முறைப்படி ஆணையர் 7 நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல விதிகள் உள்ளன.
    இதன் காரணமாக மே மாதத்துக்கான மாமன்ற கூட்டம் நடைபெறாது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பருவ மழை நெருங்கி வரும் நிலையில் மழைநீர் வடிகால் பணிகள் போன்றவை, மக்கள் பிரதிநிதிகளின் பங்கெடுப்பு இல்லாததால் முடங்கிக் கிடப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக மாநகராட்சி வளர்ச்சி பணிகள் எதுவும் கவுன்சிலர்களால் பெரிய அளவில் முன்னெடுக்கப்படாத நிலையில், தற்போதும் அதே நிலை தொடர்வது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுதிரைன்னா என்ன? பேரம்னா என்ன? – தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா கேள்வி?
    Next Article முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை டெல்லி பயணம் ; பிரதமர் உள்பட தேசிய கட்சி தலைவர்களுடன் சந்திப்பு
    Editor TN Talks

    Related Posts

    மறைமுக ஏலத்தில் பருத்தி விற்பனை அமோகம்..!! திருவாரூர் விவசாயிகள் மகிழ்ச்சி..!!

    July 22, 2026

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    July 21, 2026

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மறைமுக ஏலத்தில் பருத்தி விற்பனை அமோகம்..!! திருவாரூர் விவசாயிகள் மகிழ்ச்சி..!!

    சிக்கிம் சுரங்கப்பாதை விபத்து.. பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு..!! மீட்புப் பணிகள் தீவிரம்!

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.