Close Menu
    What's Hot

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நவீனமயமாகும் பொது விநியோகச் செயல்பாடுகள் – பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல்
    Featured

    நவீனமயமாகும் பொது விநியோகச் செயல்பாடுகள் – பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல்

    Editor TN TalksBy Editor TN TalksMay 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 modi 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரேஷன் போக்குவரத்து மற்றும் வருவாய் கையாளுதலுக்கான உதவித் திட்டத்தின் கீழ், இரண்டு அம்சங்களை ஒருங்கிணைத்துத் தொடர்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

    பொது விநியோக அமைப்பில் தன்னியக்கத்துடன் கூடிய ரேஷன் போக்குவரத்து மற்றும் வருமானத்தைக் கையாள்வதற்கான உதவி (சர்தாக்-பிடிஎஸ்) திட்டத்தை ஒருங்கிணைந்தத் திட்டமாகத் தொடர பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

    இதற்கு 16வது நிதி ஆணையத்தின் சுழற்சி காலகட்டத்தில், மத்திய அரசின் பங்காக ரூ. 25,530 கோடி நிதி ஒதுக்கப்படும்.

    மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான, மாநிலங்களுக்குள்ளான உணவு தானியப் போக்குவரத்து, கையாளுதல், நியாயவிலைக் கடை முகவர்களின் லாப வரம்பு ஆகியவற்றால் ஏற்படும் செலவினங்களை ஈடுசெய்வதற்கான மத்திய உதவியின் விதிமுறைகளைத் திருத்தவும், தற்போதுள்ள மத்திய உதவி நிதி முறையைத் தொடரவும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முடிவு செய்துள்ளது.

    சார்தக்-பிடிஎஸ் திட்டம் பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளது:

    (அ) மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து, கையாளுதல், மற்றும் நியாயவிலைக் கடை விற்பனை முகவர்களின் லாப வரம்பு ஆகியவற்றிற்கு உறுதியான நிதி ஆதரவை வழங்குதல்.

    (ஆ) கடைக்கோடிப் பகுதிக்கு சேவை வழங்கலை உறுதி செய்து, கசிவுகளைக் குறைத்து, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்  கீழ் உணவுப் பாதுகாப்பிற்கான தேசத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் ஓர் ஒருங்கிணைந்த, குடிமக்களை மையமாகக் கொண்ட பொது விநியோகக் கட்டமைப்பை உருவாக்குதல். இந்த ஒருங்கிணைந்த திட்டம் 31.03.2031 வரை செயல்படும்.

    பொது விநியோகச் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு, நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, நிகழ்நேரக் கண்காணிப்புக்கான தரப்படுத்தப்பட்ட கட்டமைப்புகள், ஒருங்கிணைக்கப்பட்ட தரவுத்தளங்கள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த குறைதீர்ப்பு மற்றும் பகுப்பாய்வு அமைப்புகள், தரவு சார்ந்த மேற்பார்வைக்கான மாநிலக் கட்டுப்பாட்டு மையங்கள், ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற நடைமுறைக் கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம், செயற்கை நுண்ணறிவு , எந்திரக் கற்றல் , இயற்கை மொழி செயலாக்கம், பிளாக்செயின் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பொது விநியோகச் செயல்பாடுகளை நவீனமாக்கவும், ஒருங்கிணைக்கவும் சார்தக்-பிடிஎஸ் திட்டம் முற்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுகவில் நிலவுவது உள்கட்சி விவகாரம்; கருத்து சொல்ல உரிமை இல்லை – அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்
    Next Article எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமரவேலுக்கு கண்டனம்: போஸ்டர்களை கிழித்தும், எரித்தும் எதிர்ப்பு!
    Editor TN Talks

    Related Posts

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    July 22, 2026

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    July 22, 2026

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    ‘ஆகாயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..! 

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.