மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சந்தித்து அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது;-

தனி நபர்களால் ஏற்படுத்தப்படும் மின் தடைகுறித்த தகவலில் அதற்கு காரணமானவர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடுகள் இல்லை. பழுதுகள் காரணமாக ஏற்பட்ட மின் தடைகளும் சரி செய்யப்பட்டு வருகிறது.
மின் தடை புகார் தொடர்பான மொபைல் குழுக்களை அதிகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மின் தடை தொடர்பான தகவல்கள் தவறாகப் பகிரப்படுவதை தடுக்கும் வகையில் மின் தடைக்கான காரணங்கள் மற்றும் அது சரி செய்யப்பட்டது தொடர்பான தகவல்களும் சமூக வலைத்தளத்தில் அப்டேட் செய்யப்படும்.
சட்டசபை பட்ஜெட்டுக்கு பின்னர் மின்வாரிய பணியிடங்கள் நிரப்பப்படும்.
பாஜகவினருக்கு தமிழ்நாட்டைப் பற்றி பேச அருகதை இல்லை. தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் பற்றிப் பேசவேண்டியதே இல்லை.
அதிகாரிகளின் அலட்சியத்தால் மின் தடை ஏற்படுவது தொடர்பான கேள்விக்கு அதனை சீர்செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.
தமிழக மக்களின் தேவைக்காக மட்டுமே பிரதமரை முதலமைச்சர் சந்தித்துள்ளார். அதைத் தாண்டி சந்திப்பதற்கான வேறு எந்த நோக்கமும் இல்லை.

அதிமுகவில் நிலவும் உள்கட்சி விவகாரம் குறித்து பேசும் உரிமை எங்களுக்கு இல்லை. இந்தப் பிரச்சினையை விஜய் ஏற்படுத்தவில்லை.
அதிமுகவும் திமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க முற்பட்டதால்தான் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.
எடப்பாடி, உதயநிதி, ஸ்டாலின் மூவரும் சேர்ந்து ஏற்படுத்திக் கொண்ட பிரச்னைக்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
மேகதாது அணை கட்டுவதை தடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் முதலமைச்சர் விஜய், சட்டப்பூர்வமான வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது அவர்களின் தனிப்பட்ட முடிவு. அவர்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவார்களா இல்லையா என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது.
இவ்வாறு அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
