Author: Editor TN Talks
20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் அரசு தடை விதித்துள்ளது. ஒவ்வொரு ஏற்றுமதி காலத்திற்கும் முன்பும் ஜப்பான் அதிகாரிகள் இந்தியா வந்து மாம்பழங்களை ஆய்வு செய்வர். அந்த வகையில், இந்தாண்டு உத்தரப் பிரதேசத்தின் ரஹ்மான் பூரில் மார்ச் மாதம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது ஜப்பானிய குழுவினர் புகைமூட்டம் மற்றும் கிருமி நீக்கம் செய்யும் நடைமுறைகளில் குறைபாடு இருந்ததை கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து ஆய்வை முடித்துக் கொண்டு சென்ற குழுவினர், ரு அறிக்கை ஒன்றை அளித்தனர். அதன்படி, மார்ச் 25-ம் தேதி அல்லது அதற்கு பிறகு மாம்பழ இறக்குமதி ஏற்றுக் கொள்ளப்படாது என்று, யோகோஹமா தாவர பாதுகாப்புச் சங்கம் அறிவிப்பை வெளியிட்டது. இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதியை ஜப்பான் நிறுத்துவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக, இதேபோன்ற பழ ஈக்கள் அச்சுறுத்தல் காரணமாக 1986-ம் ஆண்டில் இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பான் தடை விதித்திருந்தது. அதன்பின் இந்தியா தனது…
எம்.எல்.ஏ., அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோவிலில் அமைச்சர் நிர்மல்குமார் தரிசனத்துக்காக கோயில் நடை0 தாமதமாக அடைக்கப்பட்டது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோவிலில் தமிழக அமைச்சர் நிர்மல்குமார் மே 15ஆம் தேதி தரிசனம் செய்தார். வழக்கமாக கோவில் நடை மதியம் 12:45 மணிக்கு சாத்தப்படும். ஆனால் அமைச்சருக்காக கோவில் நடை திறந்து வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் நிர்மல்குமாரின் தரிசனத்துக்கு பிறகே கோவில் நடை அடைக்கப்பட்டது. அதேபோல, கருவறையில் அமைச்சர் தரிசனம் செய்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில், கோவில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை எதிர்த்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதிபதி வி.லட்சுமி நாராயணன் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து அறிக்கை தாக்கல்…
திருச்சி திருவரங்கம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், அங்கு நோயாளிகளிடம் சக்கர நாற்காலியில் தள்ளுவதற்காக ரூ.100, ரூ.200 எனப் பணம் பெற்ற 4 கடைநிலை மருத்துவப் பணியாளர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். அமைச்சரின் இந்த செயல் அதிரடி நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது. இன்று திருச்செந்தூர் கோயிலுக்கு சென்ற அறநிலையத் துறை அமைச்சரை யார் என்று தெரியாமல் சிறப்பு தரிசனத்துக்காக அவரிடம் ரூ.4000 லஞ்சம் கேட்டு, அதனை ஜி பே வழியாகப் பெற்று கையும் களவுமாகச் சிக்கியிருக்கிறார்கள் அர்ச்சகர்கள். அவர்களிடம் மன்னிப்புக் கடிதம் கொடுக்கச் சொல்லி, எச்சரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அதே நேரம், அமைச்சரின் உதவியாளரிடம் சிறப்பு தரிசனத்துக்காக லஞ்சம் கேட்ட பாதுகாப்பு பணியில் இருந்த 2பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அமைச்சரின் செயல் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. அர்ச்சகர்கள் என்றால் அவர்களிடம் மன்னிப்பு கடிதம் பெறுவதும், மற்றவர்களை பணி நீக்கம் செய்வதும் எத்தகைய நடவடிக்கை என…
மே 3ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துப்படிப்புகளுக்குக்கான நீட் தேர்வு வினாத்தாள், முன்னதாகவே வெளியானது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அன்றைய தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடைபெற உள்ளது. இதனிடையே வினாத்தாள் லீக் ஆனது தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிபிஐ, மிகப்பெரிய நெட்வொர்க்கை கண்டறிந்ததோடு, 10க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளது. இந்த நிலையில், அகில இந்திய மருத்துவ கூட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவர்கள் முன்னணி ஆகியவை, வினாத்தாள் லீக்கானது தொடர்பான குளறுபடிக்கு பொறுப்பான தேசிய தேர்வு முகமையை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன. இந்த வழக்கில் இன்று தேசிய தேர்வு முகமை பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், தேர்வு பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்டுள்ள அதிரடி சீர்திருத்தங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளது. அந்த சீர்திருத்தங்கள் வருமாறு;- உயர்நிலை வழிகாட்டுக் குழுவின் (HPSC) பரிந்துரைப்படி, தேர்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயமாக்கப்பட்டு, அதன் பதிவுகள் குறைந்தது 90 நாட்களுக்குப்…
திருப்பதி : ஒரே நாளில் 4.15லட்சம் லட்டுகள் விற்பனை..! ஏழுமலையானை தரிசனம் செய்ய குவியும் பக்தர்கள்..!
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான, பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து கூட பக்தர்கள் ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தருவர். கோடை விடுமுறையை ஒட்டி பக்தர்கள் லட்சக்கணக்கில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். பெருமளவில் பக்தர்கள் தங்களது வாகனங்களில் தரிசனத்திற்கு வருவதால் அலிபிரி சோதனை சாவடியில் வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நிற்கின்றன. நேற்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் அனைத்து அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இதனால் பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரணம் வரை தரிசனத்திற்காக வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். அவ்வாறு காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் உணவு, குடிநீர், பால், டி, காபி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அவசர உதவிக்காக நடமாடும் மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 20 மணி நேரம்…
டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர் வாரவும், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும் அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். எடப்பாடி K. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் முன்பே, அதாவது ஜூன் மாதம் 12-ஆம் தேதிக்கு முன்பே டெல்டா மாவட்டங்கள் முழுவதும் உள்ள பாசன வாய்க்கால்கள், ஆறுகள், குளங்கள், வடிகால் வாய்க்கால்கள் போன்ற நீர்நிலைகள் அனைத்தும் தூர் வாரப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் தங்கு தடையில்லாமல் சென்றது. மேலும், மழைக் காலங்களில் நீர் நிலைகளில் தடுப்பின்றி வெள்ள நீர் வேகமாக வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக, 2011-ஆம் ஆண்டு காலகட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் ‘நெய்வேலி காட்டாமணக்கு’ என்ற செடி நீர் நிலைகள் முழுவதும் ஆக்கிரமித்து பாசனத்திற்கு கடைமடை பகுதிகளுக்கு…
கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் விரைந்து நீதி கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திக், மோகன்ராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு எதிராக போக்சோ சட்டம் மற்றும் பி.என்.எஸ். சட்டத்தின் கடத்தல், கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், சுதந்திரமான, வெளிப்படையான விசாரணைக்கு காவல்துறை மூத்த அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்; இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்கில் பரவிவரும் வீடியோக்கள் புலன் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுவதால், இந்த வழக்கு தொடர்பாக செய்திகள் வெளியிட அனைத்து வகையான ஊடகங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என கோரி விஷ்வ…
அதிமுக கொறடா அக்ரிகிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், 1996-ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியபோது, கட்சி மாறியவர்களை உதிர்ந்த ரோமம் என புரட்சித் தலைவி குறிப்பிட்டார். இன்றைக்கு அதிமுகவை விட்டு விலகிச் செல்பவர்கள், அம்மா சொன்ன உதிர்ந்த ரோமங்கள் என்பதுதான் எங்களுக்கு நினைவுக்கு வருகிறது. திமுகவில் இருந்தும், பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ளவும் துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கும்படி கேட்டபோதும் எடப்பாடி பழனிசாமி கட்சியில் சேர்க்க மறுத்துவிட்டதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். அதன்பிறகு தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா அதிமுகவைச் சேர்ந்தவர்களை தவெகவுக்கு இழுத்து குதிரைப் பேரம் செய்து கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டினார். தொடர்ந்து இதுபோல் தவறுகளை செய்து கொண்டிருந்தா; குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கோருவோம் எனக் கூறினார். அதிமுக திமுகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டதாகவும் இதுதான்…
தூத்துக்குடியில், காங்கிரஸ் நிர்வாகியின் ஆட்டோவை சேதப்படுத்தியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் இருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியதுமே, காங்கிரசை நம்பிக்கைத் துரோகி என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். திமுக குறித்து காங்கிரஸ் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திமுக, காங்கிரஸ் மோதல் என்பது கைகலப்பாகவும் மாறி வருகிறது. தூத்துக்குடியில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரை மிரட்டியவர்கள் அவரது ஆட்டோவை சேதபடுத்தியுள்ளனர். மக்களவை எதிர்கக்ட்சி தலைவர், ராகுல் காந்தி குறித்து அவதூறாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கண்டித்து தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர காங்கிரஸ் கட்சி தலைவர் சகாயராஜ் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு…
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் விஜய்யை போல நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இயக்கம் பக்கம் திரும்பினார். கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி அதிகாரப்பூர்வமாக படபூஜையும், படப்பிடிப்பும் தொடங்கியது. லைகா புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்தது. இப்படத்திற்கு ’சிக்மா’ என தலைப்பும் வைக்கப்பட்டது. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருடன் பரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷனுடன் சேர்ந்து ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் கடந்தாண்டு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஹைதராபாத்திற்கு வந்திறங்கினார் ஜேசன் சஞ்சய். இந்த நிலையில், சிக்மா திரைப்படம் ஜூலை மாதம் 31-ம் தேதி வெளியாக இருப்பதாக…