Close Menu
    What's Hot

    தொட்டிக்குள் விழுந்த காட்டு யானை!. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

    மனைவி குழந்தைகள் கண்முன்னே மர்டர்; உறவினர்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

    நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவு!. முதலமைச்சர் விஜய் இரங்கல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»நீட் முறைகேடு வழக்கு;  பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது தேசிய தேர்வு முகமை
    இந்தியா

    நீட் முறைகேடு வழக்கு;  பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது தேசிய தேர்வு முகமை

    Editor TN TalksBy Editor TN TalksMay 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 neet
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மே 3ஆம் தேதி  நடைபெற்ற இளநிலை மருத்துப்படிப்புகளுக்குக்கான நீட் தேர்வு வினாத்தாள், முன்னதாகவே வெளியானது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அன்றைய தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடைபெற உள்ளது.

    இதனிடையே வினாத்தாள் லீக் ஆனது தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிபிஐ, மிகப்பெரிய நெட்வொர்க்கை கண்டறிந்ததோடு, 10க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளது.

    இந்த நிலையில், அகில இந்திய மருத்துவ கூட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவர்கள் முன்னணி ஆகியவை, வினாத்தாள் லீக்கானது தொடர்பான குளறுபடிக்கு பொறுப்பான தேசிய தேர்வு முகமையை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன.

    இந்த வழக்கில் இன்று தேசிய தேர்வு முகமை பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், தேர்வு பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்டுள்ள அதிரடி சீர்திருத்தங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளது.

    அந்த சீர்திருத்தங்கள் வருமாறு;-

    உயர்நிலை வழிகாட்டுக் குழுவின் (HPSC) பரிந்துரைப்படி, தேர்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயமாக்கப்பட்டு, அதன் பதிவுகள் குறைந்தது 90 நாட்களுக்குப் பாதுகாக்கப்படும்.

    தேர்வு முடிந்த பிறகு, ஏதேனும் முறையீடு நடந்ததா என்பதை கண்டறிய சிசிடிவி பதிவுகள் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

    தேர்வுக்கு முந்தைய வாரத்தில் தேர்வு மையங்களை விரிவாக ஆய்வு செய்தல், அவசரநிலை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடுகளைச் செய்தல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

    வரும் காலங்களில் நீட் தேர்வை கணினி வழித் தேர்வாக (CBT) நடத்தலாமா அல்லது தற்போதைய OMR முறையிலேயே தொடரலாமா என்பது குறித்து, இந்த ஆண்டு நீட் மறுதேர்வு தேர்வு முடிந்த பிறகு சுகாதார அமைச்சகத்துடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

    தேசிய தேர்வு முகமையை முழுமையாக மறுசீரமைக்க 16 புதிய உயர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஐஐடி, யுஜிசி, சிபிஎஸ்இ போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களின் நிபுணர்கள் தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    தேர்வு பாதுகாப்பைக் கண்காணிக்க இரண்டு இணைச் செயலாளர் கூடுதல் தலைமை இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த 18 மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்களும், 621 மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களில் உள்ளூர் நிர்வாகம், காவல்துறை, உளவுத்துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமகளிர் பாதுகாப்பு ‘சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் நிறுத்திவைப்பு ஏன்? கனிமொழி எம்.பி கேள்வி..!!
    Next Article வடலூரில் பரபரப்பு..!! மண்ணுக்குள் புதைந்த பாதி உடல்.. இளம்பெண் சடலமாக மீட்பு..!!
    Editor TN Talks

    Related Posts

    தொட்டிக்குள் விழுந்த காட்டு யானை!. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

    May 30, 2026

    மனைவி குழந்தைகள் கண்முன்னே மர்டர்; உறவினர்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

    May 30, 2026

    நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவு!. முதலமைச்சர் விஜய் இரங்கல்!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொட்டிக்குள் விழுந்த காட்டு யானை!. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

    மனைவி குழந்தைகள் கண்முன்னே மர்டர்; உறவினர்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

    நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவு!. முதலமைச்சர் விஜய் இரங்கல்!

    வாக்களித்த மக்களுக்காக.. ஜூன் 1ம் தேதி திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்..!!

    திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு..!! கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி பக்தர்கள் மயக்கம்..!!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026

    குஜராத் டைட்டன்ஸ் இமாலய சாதனை!. ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது!

    May 30, 2026

    ரூ.9 கோடி மதிப்பிலான மேம்பாலம் வீண்!. 7 கி.மீ இணைப்பு சாலைக்காக காத்திருக்கும் கிராம மக்கள்!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.