Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    தவெகவில் இணைய யார் வற்புறுத்தியது? ஆதாரத்துடன் சொல்லட்டும்!. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?
    Featured

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?

    Editor web3By Editor web3July 4, 2026Updated:July 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cm vijay warning
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு நீங்கலாக 107 இடங்களில் வென்ற தவெக, தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் அந்தக் கட்சிக்கு இல்லை. இதனால், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோரியது தவெக. தவெகவின் அந்த ஆதரவு கோரிக்கையை உடனடியாக ஏற்ற காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவில் இணைந்து ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது.

    மேலும், அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்களையும், தற்போது மாநிலங்களவையில் ஒரு எம்.பி.யையும் பெற்றுள்ளது. இதேபோல், விசிகவும், ஐ.யு.எம்.எல். ஆகியை முதலில் வெளியில் இருந்து ஆதரவு எனும் நிலைபாட்டை எடுத்து பின்னர் இரண்டு கட்சிகளும் தலா ஒரு அமைச்சர்களை தவெக அரசில் பெற்றுள்ளன. சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகியை நிபந்தனையற்ற ஆதரவை தவெக அரசுக்கு வழங்கிவருகிறது.

    அதனைத் தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான 25 எம்.எல்.ஏ.க்களும், அமமுக எம்.எல்.ஏ. காமராஜும் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் பிறகு அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

    அதேசமயம், அதிருப்தி அணியில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களுமான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர்.

    இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் அக்கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, இன்று மாலை 3 மணி அளவில் சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்தக் கூட்டத்தில், சமீபத்தில் அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்குக் கட்சியில் உரிய பொறுப்புகளை வழங்குவது மற்றும் எதிர்கால அரசியல் வியூகங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் விரிவான ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

    மேலும், நிர்வாக வசதிக்காகத் தமிழக வெற்றிக் கழகம் கூடுதல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, புதிதாக அறிவிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கான செயலாளர்களுக்கு, முதலமைச்சர் விஜய் சான்றிதழ்களை வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ADMK cm vijay Former Ministers Tamilnadu cm tamilnadu cm vijay TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!
    Editor web3
    • Website

    Related Posts

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    July 4, 2026

    தவெகவில் இணைய யார் வற்புறுத்தியது? ஆதாரத்துடன் சொல்லட்டும்!. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

    July 4, 2026

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    தவெகவில் இணைய யார் வற்புறுத்தியது? ஆதாரத்துடன் சொல்லட்டும்!. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.