Close Menu
    What's Hot

    தொட்டிக்குள் விழுந்த காட்டு யானை!. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

    மனைவி குழந்தைகள் கண்முன்னே மர்டர்; உறவினர்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

    நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவு!. முதலமைச்சர் விஜய் இரங்கல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»ஜப்பானில் மாம்பழ இறக்குமதிக்கு தடை..! 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏன் இந்த நடவடிக்கை?
    உலகம்

    ஜப்பானில் மாம்பழ இறக்குமதிக்கு தடை..! 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏன் இந்த நடவடிக்கை?

    Editor TN TalksBy Editor TN TalksMay 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் அரசு தடை விதித்துள்ளது.

    ஒவ்வொரு ஏற்றுமதி காலத்திற்கும் முன்பும் ஜப்பான் அதிகாரிகள் இந்தியா வந்து மாம்பழங்களை ஆய்வு செய்வர். அந்த வகையில், இந்தாண்டு உத்தரப் பிரதேசத்தின் ரஹ்மான் பூரில் மார்ச் மாதம் ஆய்வு நடத்தப்பட்டது.

    இந்த ஆய்வின் போது ஜப்பானிய குழுவினர் புகைமூட்டம் மற்றும் கிருமி நீக்கம் செய்யும் நடைமுறைகளில் குறைபாடு இருந்ததை கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து ஆய்வை முடித்துக் கொண்டு சென்ற குழுவினர், ரு அறிக்கை ஒன்றை அளித்தனர். அதன்படி,

    மார்ச் 25-ம் தேதி அல்லது அதற்கு பிறகு மாம்பழ இறக்குமதி ஏற்றுக் கொள்ளப்படாது என்று, யோகோஹமா தாவர பாதுகாப்புச் சங்கம் அறிவிப்பை வெளியிட்டது. இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதியை ஜப்பான் நிறுத்துவது இது முதல் முறையல்ல.

    இதற்கு முன்னதாக, இதேபோன்ற பழ ஈக்கள் அச்சுறுத்தல் காரணமாக 1986-ம் ஆண்டில் இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பான் தடை விதித்திருந்தது. அதன்பின் இந்தியா தனது தொழில்நுட்ப முறையை மேம்படுத்தியதால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2006ல் அந்தத் தடை நீக்கப்பட்டது. தற்போது மீண்டும் 20 ஆண்டுகள் கழித்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உள்நாட்டில் நிலவும் கடுமையான வெப்ப அலைகளால் ஏற்கனவே மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜப்பானின் இந்தத் தடை இந்திய மாம்பழ ஏற்றுமதியாளர்களுக்குக் கூடுதல் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய மாம்பழ உற்பத்தியாளரான இந்தியா ஆண்டுக்கு சுமார் 26 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி செய்கிறது.

    நமது மாம்பழ விளைச்சலில் பெரும்பகுதியை நாமே பயன்படுத்துவதால், உற்பத்தியில் 1 சதவீதம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய மாம்பழங்கள் பொதுவாக ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, இங்கிலாந்து, குவைத், கத்தார், மற்றும் ஜப்பான் போன்ற சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமக்கள் பிரதிநிதிகளுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம் – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
    Next Article முதல்வர் விஜய் தலைமையில் தவெகவின் முதல் கேபினெட்! பட்ஜெட் எதிர்பார்ப்பு உச்சம்!
    Editor TN Talks

    Related Posts

    நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவு!. முதலமைச்சர் விஜய் இரங்கல்!

    May 30, 2026

    வாக்களித்த மக்களுக்காக.. ஜூன் 1ம் தேதி திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்..!!

    May 30, 2026

    திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு..!! கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி பக்தர்கள் மயக்கம்..!!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொட்டிக்குள் விழுந்த காட்டு யானை!. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

    மனைவி குழந்தைகள் கண்முன்னே மர்டர்; உறவினர்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

    நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவு!. முதலமைச்சர் விஜய் இரங்கல்!

    வாக்களித்த மக்களுக்காக.. ஜூன் 1ம் தேதி திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்..!!

    திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு..!! கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி பக்தர்கள் மயக்கம்..!!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026

    குஜராத் டைட்டன்ஸ் இமாலய சாதனை!. ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது!

    May 30, 2026

    ரூ.9 கோடி மதிப்பிலான மேம்பாலம் வீண்!. 7 கி.மீ இணைப்பு சாலைக்காக காத்திருக்கும் கிராம மக்கள்!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.