Author: Editor TN Talks
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது கார் ரேஸ் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். வெளி நாடுகளுக்கு சென்று இந்தியாவின் பெருமையை பறைசாற்றியும் வருகிறார். இந்த நிலையில் இவரது தாயாரான மோகினி மணி வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவ் அந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.45 மணிக்கு அவரது உயிர் பிறந்தது. தயாரின் மரண செய்தி கேட்டு, துபாயில் கார்பந்தய பயிற்சியில் இருந்த அஜித்குமார், உடனடியாக விமானத்தை பிடித்து பதட்டத்தில் சென்னை வந்திறங்கினார். மருத்துவமனையில் இருந்து எடுத்து வரப்பட்ட அவரது தாயாரின் உடல், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அஜித்குமாரின் அண்ணன் உட்பட உறவினர்கள் நேற்று முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் விஜய், திரிஷாவுடன் நேரில் சென்று அஜித்குமாருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அவரது தாயாரின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.…
19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் மற்றும் பிளே ஆப் சுற்றுகள் முடிந்து பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில், இவ்விரு அணிகளில் யார் மகுடம் சூடப் போகிறார்? என்பதற்கான இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி கடந்தாண்டை போலவே, இந்தாண்டும் கம்பீரமாக வெற்றி நடை போடுகிறது. லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளி பட்டியிலில் முதலிடம் பிடித்திருந்தது. முதலாவது தகுதிச் சுற்றி குஜராத் டைட்டன்ஸை 5வது முறையாக வீழ்த்தி இறுதிப் போடிக்கு முன்னேறியது. 2022ம் ஆண்டு சாம்பியனான குஜராத் அணி, லீக் சுற்றில் 9 வெற்றி 5 தோல்வியுடன் பெங்களூருவுடன் சமநிலை வகித்தாலும், ரன் ரேட்டில் பின் தங்கிய நிலையில் இருந்தது. அதனால் புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில்…
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முரளிதரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் கட்சி ஒன்றியக் கழகச் செயலாளர் வெங்கடேசன் உடனிருந்தார். நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, மழையால் சேதமடைந்த பயிர்களையும், பொதுமக்களின் வாழ்வாதாரப் பாதிப்புகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த தவெக நிர்வாகிகள், “இந்தப் பாதிப்புகள் குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் இழப்பீடும், உரிய நிவாரண உதவிகளும் விரைந்து கிடைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தவெக சார்பில் மேற்கொள்ளப்படும்” என்று உறுதியளித்தனர். மேலும்,…
வேளாங்கண்ணியில் நிதியமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது;- 2021-இல் ஆட்சி முடியும் காலகட்டத்தில் அதிமுக, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. அதன் பின்னர் வந்த திமுக, அந்த விவசாயக் கடன் தள்ளுபடியை ஸ்டேஜ் பை ஸ்டேஜா தவணை முறையில செஞ்சிருக்காங்க. 2024-ல ஆர்பிஐ ஒரு ரூல் சொல்லிருக்கறாங்க. அந்த அடிப்படையில்தான் இப்போது தவெக ஆட்சியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிபடி உதவித் தொகையை பெண்கள் எதிர்பார்ப்பதாக செய்தியாளர்களின் கேள்விக்கு, ரிவைஸ்ட் பட்ஜெட்டில் எல்லாம் தெரியவரும் எனக் கூறிய அமைச்சர் மரிய வில்சன், விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் பேரவை தேர்தல் நடத்தவும் அதன் மூலமாக கல்வி நிலையங்களில் நுழைய தவெக தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்படவும், ஆட்சியைப் பிடிக்கவும் முக்கியக் காரணமாக இருந்தது அன்றைய மாணவர் பட்டாளம்தான். இந்திக்கு எதிரானப் போராட்டமானாலும் மத்திய அரசுக்கு எதிரானப் போராட்டமாக இருந்தாலும் அன்று முன்னணியில் இருந்தது மாணவர் அமைப்புதான். இதுதான் 1967இல் திமுக ஆட்சியில் அமரவும் முக்கியக் காரணமாக அமைந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து அண்மையில் வெளியான பராசக்தி படத்திலும் இதனைக் காட்சிப் படுத்தியிருப்பார்கள். இப்படி மாணவர்களின் முயற்சியால் ஆட்சிக்கு வந்த திமுக அதன்பிறகு கல்லூரிகளில் அரசியலை அனுமதிக்கவில்லை. இந்தச் சூழலில்தான், கடந்த 19ஆம் தேதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ. மற்றும் ஆர்.எஸ்.எஸ்சின் மாணவர் அமைப்பான ஏபிவிபி நிர்வாகிகள் முதலமைச்சரை தனித்தனியே சந்தித்துள்ளனர். அப்போது கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் மாணவர் பேரவை தேர்தலை உடனடியாக…
அதிமுக எம்.எல்.ஏக்களை விலைபேசி குதிரை பேரத்தில் ஈடுபடும் தவெக அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த ஆளுநரிடம் அதிமுக சார்பில் மனு அளித்திருப்பதாக அதிமுகவின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இன்று காலை ஆளுநரை சந்தித்த அதிமுகவின் எம்.பி தனபால் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாட்டில், தற்போது நடைபெறுகின்ற குதிரை பேரத்தின் மூலமாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசிக் கொண்டிருக்கும் தவெக அரசின் நடவடிக்கைகளை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 167-ன் கீழ் தடுத்து நிறுத்த வேண்டும், என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த புகார் மனுவினை தானும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் தனபாலும் ஆளுநரை சந்தித்து கொடுத்து வந்துள்ளதாகத் தெரிவித்தார். தலைமைச்…
தமிழ்நாட்டில் விஜய் ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகளும், கொலை மற்றும் வன்முறை சம்பவங்களும் மிகுந்துள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளரும் விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். பிரேமலதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலைகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. சென்னையில் 16 வயது சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக வடபழனி காவல் நிலைய தலைமைக் காவலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவரே இத்தகைய குற்றச்செயலில் ஈடுபட்டதாக வெளியாகியுள்ள தகவல் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது மூதாட்டி ஒருவர் காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்துள்ளார். அந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வயது முதிர்ந்த பெண்கள்கூட…
குடவாசல் அருகே நேற்று நள்ளிரவு மனைவி குழந்தைகள் கண்முன்னே 50 வயது நபர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரம் எம்ஜிஆர்நகர் காலனி தெருவை சேர்ந்த திருமுகம், அங்குள்ள செங்கல்சூலையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சுதா என்னும் மனைவியும், திருமணம் ஆகி சுதா வயது 44 என்கிற மனைவியும், பத்தாம் வகுப்பு படிக்கும் மகனும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயதான மகளும் உள்ளனர். நேற்று (மே 29) நள்ளிரவு சுமார் 11.30மணி அளவில் திருமுகம் விஉஇட்டில் சாப்பிட்டுவிட்டு தனது குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்த பொழுது, திடீரென திருமுகம் வீட்டினுள் புகுந்த நான்கு மர்மநபர்கள், திருமுகத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே இந்த சம்பவம் நடந்ததால் அவர்கள் அலறி கூச்சலிட்டனர். மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டியதில்…
அதிமுகவில் நிகழ்ந்த குழப்பங்களுக்கு அக்கட்சியில் புதிதாக இணைந்து லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லீமா ரோஸ் மார்ட்டின்தான் காரணம் என கூறப்பட்டது. இந்த நிலையில் தன் மீது பரப்பப்பட்ட கட்டுக்கதைகள் பொய்த்துப் போனதாக லீமா ரோஸ் மார்ட்டின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அதிமுகவின் முன்னணி தலைவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் களைந்து கழகம் ஒன்றுபட்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார். சமீப காலமாக தன்னை வைத்து சில வாடகை பேச்சாளர்கள் எந்த வித அடிப்படை ஆதாரமும் இன்றி சொல்லிய கட்டுக்கதைகள் பொய்த்துப் போனதாகவும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, இதய தெய்வம் அம்மாவால் செழுமைப்படுத்தப்பட்ட பேரியக்கத்தில் பிரிவுகள் ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை எனவும் கூறியுள்ள லீமா ரோஸ் மார்ட்டின், தன் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சில வாடகை பேச்சாளர்களால் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தது முற்றுப்புள்ளி வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.…
மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்சாரத்துறை சார்பில் எந்தவொரு டெண்டரை வெளியிடுவதற்கு முன்பாக மூன்று விதமான ஆய்வுகளை மேற்கொள்ள குழுக்கள் அமைத்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. சந்தைப் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு சரிபார்ப்புக் குழு, உற்பத்தியாளர் குழு மற்றும் குறுக்கு சரிபார்ப்பு குழு ஆகிய மூன்று குழுக்களை மின்வாரியம் அமைத்துள்ளது. உள்நாட்டு சந்தையில் மூலப் பொருட்களின் விலையை ஆய்வு செய்யவும், பல்வேறு வகைகளில் விலைத் தரவுகளை மதிப்பீடு செய்யவும், தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் விலைகளையும் ஆய்வு செய்யவும் சந்தை பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு சரிபார்ப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலைகள், வெளிநாட்டு சந்தைகளிடம் ஆய்வு செய்ய உற்பத்தியாளர் மதிப்பீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. சந்தைப் பகுப்பாய்வு குழு மற்றும் உற்பத்தியாளர் மதிப்பீட்டுக் குழுவின் மூல பெறப்பட்ட டெண்டர்களை பிற மாநில மின்வாரியங்கள் கொள்முதல்…